ஈழத்திரைப்பட வரலாற்றில் மொத்தம் 100 இனைக்கூட
எட்டாத எண்ணிக்கையில் திரைப்படங்கள் இதுவரையில் வெளிவந்திருந்தாலும் ,முழுமையான ஒரு திரைக்கதையினை கொண்ட
திரைப்படங்களாக விரல் விட்டு எண்ணக்கூடியதாக ஒரு பத்துக்குள் என்றே கவலையுடன்
கூறவேண்டியுள்ளது.
10
வருடத்திற்குமுதல் இலங்கையின் யுத்தகாலத்திலிருந்து ஆரம்பிக்கும் ஒரு நேர்த்தியான ,சிறந்த கதையினை தெரிவு செய்த
தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்.
வளர்ந்துவிடட தொழில்நுட்பத்திலும் இதுவரையில்
விட்ட தவறுகளைக் உற்றுநோக்கி ,அவற்றினை
நீக்கி கனடா ,யாழ்ப்பாணம்
வவுனியா எனச் சுற்றி ஒரு அற்புதமாகப் பதிவினை காட்சிப்படுத்திய படப்பிடிப்பாளருக்கும்
வாழ்த்துக்கள்.
திரையில் கதை எடுத்துச் சென்ற விதம் எந்த வித சிக்கலும்,முறுகளும் இல்லாது அற்புதமாக இருந்ததற்கு
மேலும் ஒரு பாராட்டு.
ஆனால் ஒரு இடத்தில் சோபாவில் பக்கம் பக்கமாக
இருக்கும் இருவர் கதைப்பது,ஒருவரை
ஒருவர் மறைக்கும் என்பதனை தயாரிப்பாளர் உட்பட கவனியாமல் விட்டது தவிர்த்திருக்கக்
கூடிய சிறு குறை எனலாம்.
திரைக்கதைக்கான இசை,பாடல்கள் என்பனவும் ,இணைந்த காட்சிகளும், தயாரிப்பாளரின் பெரும் முயற்சியினை எடுத்துக் காட்டுகிறது.
கனடிய, ஐரோப்பிய கலைஞர்கள் இணைந்து சிறப்பித்திருக்கும் இப்படத்தில் ,நகைச்சுவை சற்று போதாமையாகவே தென்படுகிறது.
திரைக்கதைக்கான இசை,பாடல்கள் என்பனவும் ,இணைந்த காட்சிகளும், தயாரிப்பாளரின் பெரும் முயற்சியினை எடுத்துக் காட்டுகிறது.
கனடிய, ஐரோப்பிய கலைஞர்கள் இணைந்து சிறப்பித்திருக்கும் இப்படத்தில் ,நகைச்சுவை சற்று போதாமையாகவே தென்படுகிறது.
நடிப்பிலும் ஈழத்துப் படங்களின் வழமையான
பொம்மை நடிப்பு இல்லாவிடடாலும்,
பெரியோர்களை
விட இளையோர் இயல்பாக நடித்திருந்தமை
பாராட்டுக்குரியது. பெரிய நடிகர்கள் முன்னைய படங்களை விட நடித்திருந்தாலும், மேடை நாடகங்களில் முக்கி நடிப்பதுபோன்ற
நிலைமைகளைத் தவிர்த்திருக்கலாம்.
வெளிநாடு வருவதற்காக கல்யாணம் என்ற பெயரில்
பெண்களை ஏமாற்றும் கும்பல்களை இனம் காட்டி செல்லும் கதை எமது நடப்பு நிகழ்வினை
கூறி எச்சரித்து கொள்வது பிரமாதம்.
வாழ்வில் சிறு ஏமாற்றத்தினை கண்டாலே தற்கொலை முடிவுக்கு செல்லும் பெண்களுக்கு உறுதியான நம்பிக்கையூட்டும் இத்திரைக்
கதைக்கு பாராட்டுக்கள்.
ஆனால் வியாபாரத்தில் வளர்ந்த நாயகி லிமோவில்
செல்வது சற்று அல்ல கடும் அதிகமாகவே தோன்றியது.
ஏமாற்றத்தினைக் கண்டு துவளும் நாயகி வாழ்ந்து
காட்டப் புறப்பட்டு தனியே வியாபாரத்தில்
வளர்ந்து ,அதனை
வாழ்க்கையின் வளர்ச்சியாகக் காட்டிட முற்பட்டத்தில், சற்று விதிமுரணப்பாடாகவே எமக்கு தோன்றுகிறது.
ஏனெனில் இல்லறவாழ்க்கையே மனித இனத்தின்
நோக்கம் என்பதுவும் , அதில் ஒரு
பகுதியே தொழில் என்பதுவும் தயாரிப்பாளர் அறியாத விடயமல்ல. கீழ்நிலையில் வாழும்
ஏமாற்றியவர்களும் கண்டு பிரமித்திட ,ஒரு
குடும்ப வாழ்வுடன் திரைக்கதையினை இணைத்து முடித்திருந்தால் பார்வையாளரின் முழுமையான
திருப்தியினை திரைப்படம் பெற்றிருக்கும்.
இருந்தாலும் ஈழத்தவரின் திரைப்பட வரலாற்றின்
உச்சம் என்றே 'ஒருத்தி' யை கணிக்கலாம். ஒருத்தியை குடும்பமாகப் பார்த்து மகிழக்கூடிய சிறந்த திரைஓவியம் என தீபம்
சஞ்சிகை கருத்துகிறது. இப் படத்தினைப் பார்த்து மகிழ தற்போது youtube சென்று oruthi என பதிந்து பார்க்கலாம்.
குறிப்பு: ஈழத்தவர் திரைப்படங்கள் வெளியிடும் காலத்தில் அவை பற்றிய அறிவித்தல்கள்/விமர்சனங்கள் அவர்கள் எமக்கு அனுப்பும் நிலையில், இலவசமாக நாம் தீபத்தில் வெளியிடுவது வழமையாகும் என நினைவூட்டுகிறோம்.
குறிப்பு: ஈழத்தவர் திரைப்படங்கள் வெளியிடும் காலத்தில் அவை பற்றிய அறிவித்தல்கள்/விமர்சனங்கள் அவர்கள் எமக்கு அனுப்பும் நிலையில், இலவசமாக நாம் தீபத்தில் வெளியிடுவது வழமையாகும் என நினைவூட்டுகிறோம்.
📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽
0 comments:
Post a Comment