கொக்கோ
கோலா கார்பன்டைஆக்ஸைடு கலக்கப்பட்ட ஒரு மென்குடிபானம். இதில் பாஸ்பாரிக் அமிலம், காஃபீன், மக்காச்
சோளத்திலிருந்து உண்டாக்கப்படும் சர்க்கரைக்கலவை, இயற்கைச்
சுவைகள் மற்றும் வண்ணம் கொடுக்கும் நிறப்பொருட்களும் இருக்கின்றன.
ஒரு
லிட்டர் கொக்கோ கோலாவில் இருக்கும் 140 மிகி பாஸ்பேட் நமது
உடம்புக்குள் கால்சியம் செல்வதற்கும், அதன் வளர்சிதைமாற்றதிற்கும்
பிரச்சினையை உண்டாக்குகிறது. நல்ல எலும்பின் அடர்த்திக்கு கால்சியம்தான் தேவை.
இங்கு உண்டாகும் கால்சியம்,பாஸ்பேட்டினால் இந்த வேலையைச் செய்ய
முடியாது. எலும்பின் அடர்த்தி குறைந்தால் ஓஸ்டியோபோரோஸிஸ் உண்டாகிறது.
கொக்கோ
கோலாவில் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் எல்லா நவீனப் பதனிடப்பட்ட
உணவுகளிலும் பாஸ்பேட் நிறைந்துள்ளது. இவையெல்லாம் நமது உடல் நலத்துக்கு மோசமானவையே.
ஹார்வர்ட்
பொது சுகாதாரப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆராச்சியின்படி, கொக்கோ
கோலாவை தொடர்ந்து குடித்த இளம் பெண்களுக்கு விளையாடும் போது, கொக்கோ
கோலா குடிக்காத பெண்களைவிட ஜந்து மடங்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக
கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
கொக்கோ
கோலாவில் உள்ள பாஸ்பரஸ் அமிலம் பற்களின் எனாமலில் உள்ள கால்சியதை நீக்குகிறது.
இங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இது கொக்கோ கோலாவுக்கு மட்டுமல்ல, பாஸ்பேட்
உள்ள எல்லா மென்குடிபானங்களுக்கும் பொருந்தும். நாள் முழுவதும் மெதுவாக உறிஞ்சி
இரசித்துக் குடிக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வாய்
எப்பொழுதும் அமிலத்தன்மை நிறைந்ததாகவே இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எனாமல்
சேதப்பட்டு,
காரியஸ்
நோய் வருகிறது.
எச்சரிக்கை:கொக்கோ
கோலா அல்லது பாஸ்பேட் நிறைந்த மற்ற பானங்களைக் குடித்தவுடன் பல்லைத் தேய்க்க
வேண்டாம். உடனடியாகப் பல் தேய்த்தால் கால்சியம் இழப்பு அதிகமாகிவிடும்.
கொக்கோ
கோலா உருவாக்கும் செலவைக் குறைப்பத்ற்காக 1985 முதல் மக்காச் சோளத்திலிருந்து
உருவாக்கப்படும் இனிப்பு (சீனி, பழச்சர்க்கரைக் கலவை) உபயோகப்படுத்தப்
படுகிறது. இதில் இரண்டு ஆபத்துக்கள் இருக்கின்றன. இரத்தச் சர்க்கரையின் அளவு
கூடும். அதிக சீனியும், பழச்சர்க்கரையும் ஈரலில் கொழுப்பாக
மாற்றப்படும். எடை கூட, சர்க்கரை வியாதி வரும் ஆபத்தும் கூடும். இந்த
மக்காச் சோள இனிப்புப் பாகு மரபணு மாற்றப் பட்ட மக்காச் சோளத்திலிருந்தும் வரலாம்.
பழச்சர்க்கரை
ஈரலில் வளர்சிதைமாற்றம் அடைகிறது. மதுவும் சுற்றுப்புறச் சூழலால் உடம்பில் சேரும்
நச்சுப்பொருட்களும் ஈரல் வழியாகத்தான் வெளியேற்றப் படுகின்றன. ஈரலின் வேலைப் பளு
மிக அதிகமாகிறது.
அதிகமாக
கொக்கோ கோலா குடித்தவர்களின் இரத்த சர்க்கரை அளவு 80 மி.கிக்குக்
கீழே வந்தால்,
அவர்கள்
எப்போதும் சாப்பிடுவதை விட கூடுதலாகச் சாப்பிடுவார்கள். உணவு,அளவுக்கு
அதிகமாக உண்பதனால் ஏற்படும் நோய்கள் உருவாகக் காரணமாகலாம்.
இனியாவது
கோலாப் பானத்தினை தண்ணீர் போல் விழுங்கி நல வாழ்விலிருந்து விழாது எம்மை பாது
காத்துக் கொள்வோமாக!
↭↭↭↭↭↭↭↭↭
0 comments:
Post a Comment