[சீரழியும் சமுதாயம்]
இது வரை
நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது, இந்த
நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது போல் எமக்கு காணப்படுவதுடன்,
அதற்கு
காரணமான பலவிதமான சமூக கெடுதி களையும் அங்கு அடையாள படுத்தப் பட்டுள்ளதையும்
காண்கிறோம். அவை பொதுவாக குற்றம், விவாகரத்து,
இளம்
வயது பாலுறவு, இளம் பருவ மகப்பேறு,
போதைப்பொருள்
துஷ்பிரயோகம், யுத்தம், மற்றும்
அறநெறி மற்றும் மதநெறியில் ஏற்பட்டுள்ள சரிவு [crime,
divorce, teenage sex, teenage births and drug abuse; war; and a general decline
in personal morality and religiosity.] ஆகும். அது
மட்டும் அல்ல, வளமான வளர்ந்த நாடுகளுக்கும் வறிய மூன்றாம்
உலக நாடுகளுக்கும் இடையில், நவீன
விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வாழ்க்கை நிலைமைகளும் மற்றும் கல்வி வாய்ப்புகளில்
ஏற்பட்டுள்ள இடைவெளிகளும் ஆகும். இந்த கருத்து அல்லது நம்பிக்கை தான் மதச்சார்பற்ற
இடதுசாரியையும் மதச்சார்பான வலதுசாரியையும் இன்று உண்டாக்கியுள்ளது. என்றாலும்
சுருக்கமாக சொல்வதென்றால், விஞ்ஞானம்
அல்லது தொழில் நுட்பம் தான் சமுதாய சரிவுக்கு காரணமென்றோ அல்லது மதம் தான் முழுக்க
முழுக்க காரணம் என்றோ அறுதியிட்டு கூற முடியாது. மறுபுறம்,
பல
திரு மணங்கள் இன்று விவாகரத்தில் முடிவடைகின்றன, அதே
போல பல குழந்தைகள் திருமணத்திற்கு வெளியே பிறக்கின்றன,
பல
குழந்தைகள் ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்படுகின்றன, வர்த்தகத்தில்
மிக அதிகமான மோசடி காணப் படுகின்றன, இனவெறியும்
இன சமத்துவமின்மையும், மற்றும்
பாலின வாதமும் பாலின சமத்துவமின்மையும் [Racism and racial
inequality, and sexism and gender inequality] தொடருகின்றன.
இவை எமது மனநிறைவுக்கு, உன்னதமான
மனித வாழ்விற்கு முற்றிலும் பொருத்தம் அல்லாதவை ஆகும்.
நாம்
இன்றைய உலகை - ஆயுட்காலம், கல்வியறிவு,
பசி,
ஆரோக்கியம்
மற்றும் அரசியல் வன்முறை [life span, literacy, hunger, health,
political violence] போன்றவற்றின் அடிப்படையில் பரவலாக உற்று
நோக்கும் பொழுது, ஒட்டுமொத்த
உலகமும் முன்பை விட கூடுதலான நாகரிகம்
பெற்றுள்ளது. மேலும் நாம் எப்படி பண்டைய சமுதாயம் / நாகரிகம் அழிந்தது என்பதை
ஆராய்ந்தால், அவை அதிகமாக, அவற்றின்
சரிவின் போது அல்லது அதற்கு சற்று காலத்திற்கு முன்பு சுற்றுச்சூழல் அழிவு,
முக்கிய
வளங்களின் தட்டுப்பாடு [உதாரணமாக நீர்,விளைநில
மண் மற்றும் மரம்], பஞ்சம்,
அதிக
மக்கள் தொகை, சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை,
சமத்துவமின்மை,
படையெடுப்பு,
நோய்
[environmental destruction, depletion of vital resources
(such as water, arable soil and timber), famine, overpopulation, social and
political unrest, inequality, invasion or other forms of devastating warfare,
and disease.] போன்றவையே மேலோட்டமாக அடையாளம் காணக் கூடியதாக
உள்ளது. மற்றும், சமூக
மற்றும் அரசியல் அமைதியின்மை, சமத்துவமின்மை
போன்றவற்றிற்கான அடிப்படைக் காரணத்தையும் நாம் அறியவேண்டும். எனவே தொழில்
நுட்பத்தின் முன்னேற்றம், உண்மையில்
எந்த வித பெரும் பாதிப்பையும் அல்லது அச்சுறுத்தலையும் எமக்கு பொதுவாக ஏற்படுத்தாது என்று நம்புவதற்கு
ஒரு சிறிய காரணத்தை அல்லது ஆறுதலை இது தருகிறது எனலாம்.
சீரழிவு
என்பதற்கு, அதை சீர் + அழிவு என்று பிரித்து,
தரம்
கெடுதல்; தகுதிக் கேடு என்று பொதுவாக பொருள் கூறலாம்.
மனிதன் வேட்டை நாகரிகம் முடிந்து ஒரு இடத்தில் நிரந்தரமாக வசித்த போது கலாச்சாரம்
அல்லது பண்பாடு என்ற ஒன்று ஆரம்பமாகியது அல்லது வளர்ச்சி அடைந்தது எனலாம்.
விவசாயம் செயத்த பின்னர் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அவன் சிந்தனை வளர்ந்து,
அதன்
பயனாக உடை, கலை, மொழி,
பழக்கம்,
சமயம்,
பண்பு,
என்பன
உருவாகி தொடர்ந்து வளர்ந்தன. இதுவே அவனின் கலாச்சாரமாகியது. என்றாலும் இன்று ஒரு
உதாரணமாக, சீரியல் என்று சொல்லப்படும் நாடகங்களை
எடுத்தால், அவை பொதுவாக, இவைகளுக்கு
புறம்பாக அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
அடுத்தவர்கள்
சொத்தை எப்படி அபகரிப்பது? மாமியாரை
எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?மருமகளை
எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது? பெற்றோருக்கு
தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது? எந்த
தவறை எப்படி மறைப்பது? அக்கம்பக்கத்தினர்
உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது? மற்றவர்களை
பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
கணவருக்கு
எப்படி ஒத்துப்போகாமல் நடப்பது? மனைவியை
எப்படி அடிமை படுத்துவது? எப்படி
பழிக்கு பழி வாங்கலாம்?ஆபாசமாக
பேசுவது எப்படி?
போன்ற
விடயங்களுக்கு முக்கியம் கொடுத்து அழகாக, தெளிவாக
சொல்லியும் கற்றும் தருபவையாக இருக்கின்றன. பொழுதுபோக்கு என்ற பெயரில்
"எதை" வேண்டு மானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான்
இன்று உண்மையாகிவிட்டது. நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் தான் ஒரு சிறந்த
சமூகத்திற்கான அடையாளம், ஆனால்
ஒரு மாற்றமாக இப்படி புகுத்தி, பொதுவாக
பெண்களை இதற்கு அடிமையாக்குகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் சீரழிவும் பல
பலவாகும்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 15B வாசிக்க அழுத்துங்கள் → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி:15B [தொடர்-ம...
பகுதி 01 வாசிக்க அழுத்துங்கள் →Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 01A:
ReplyDeleteசிறப்பான பதிவு.எத்தனை மனித மணித்தியாலங்கள் இந்த தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னே கழிகிறது.உண்மையில்
இந்த சீரியல்களினால்
தீமைகளே அதிகம்.
ReplyDeleteஇந்த நவீன சமூதாயமும் ஓர் உண்மையான வீழ்ச்சியில் இருப்பது போல் தெரிவதற்குரிய அடையாளங்களின் எடுத்துக் காட்டுங்கள் மிகவும் கருத்துள்ளனவாக உள்ளது. தொடரும் கட்டுரையின் கருத்துக்கள் அணைத்தும் சிறப்பு. அதி கூடிய விஞ்ஞானாம், அஞ்ஞானம், சுற்று சூழலின் சம நிலை அழிவு, வறுமை....... எல்லாமே கருத்துள்ள பதிவாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசமுதாய சிந்தனைகள் மற்றும் சமூக நீதி பற்றி மிக மிக அழகாக சொன்னீர்கள் சகோ மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
நாம் ஒவ்வொருவரும் நம்மை சீர்திருத்திக் கொண்டால் இந்த உலகம் திருந்தி விடும்.
நாம் மனிதனாய் வாழ பாரிய சமூக சேவைகளும் பல பெரிய உதவிகளும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை..
யாருக்கும் தீங்கு நினைக்காத மனது நமக்கு இருந்தாலே போதும்.!
நம்முடைய முகத்திற்கு அழகை தருபவை நல்ல எண்ணங்களும், ஞானச் செயல்களும் மட்டுமே.
ReplyDeleteதொடர் சிரியல் தொடர்ந்து பார்ப்பதில் தப்பில்லை...அதைப்போல் நாம் வாழ நினைப்பதுதான் தப்பு..
புதிய காலங்கள் புதிய கண்டுபிடிப்புக்கள் அனாகரிய வாழ்க்கைக்கே சென்றாலும் அதில் நண்மைகளும் உண்டூ..
நாம் பார்க்கும் பார்வையிலே...தான்...எல்லாமே இருக்கிறது...