[சீரழியும் சமுதாயம்]
நீலிசவாதி
[nihilist] என்பவன், எந்த அதிகாரத்திற்கும் தலைவணங்காதவன், விசுவாசத்தின்
பெயரில், எந்த கொள்கையையும்,
அது எவ்வளவு மதிப்பிற்குரியதாக கருதப்பட்டாலும் ஏற்காதவன் [who does not accept any principle on faith, however much that
principle may be revered.], இப்படித்தான்
நான் அதை நம்புகிறேன். என்றாலும் நீலிசத்தைப் பற்றிய தப்பபிப்பிராயம், அதிகமாக 1860 ஆண்டில்
ஏற்படுத்தப் பட்ட நீலிச இயக்கத்தால் [“Nihilist
Movement”] ஏற்பட்டிருக்கலாம்.
இது அன்றைய சகல அதிகாரத்தையும் நிராகரித்ததால்,
அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வன்முறையை
முன்மொழிந்தவர்கள் என ஐரோப்பா முழுவதும் இவர்களை அன்று அடையாளப் படுத்தினார்கள்.
இதனால் தான் நீலிசம் உண்மைக்கு புறம்பாக திரித்துக் கூறப்பட்ட ஒரு நிலையை [distorted idea of Nihilism] அடைந்தது எனலாம். பலவிதமான நீலிச வகைகளை நாம் காணலாம், என்றாலும்
முக்கிய மூன்று வகைகளை இங்கு தருகிறேன்
முதலாவது
வகை நீலிசவாதிகள் [Epistemological
Nihilist / அறிவாய்வியல்
நீலிசவாதி], உண்மையான அறிவு என்று ஒன்றும் இல்லை என்றும், நீங்கள்
ஒருபோதும் எதையும் உறுதியாக நம்ப முடியாது என்றும் நம்புகிறார்கள். ஏன் என்றால், என்றென்றும்
நீங்கள், உங்கள் தலையில் அல்லது மனதில் சில கருத்துக்களை பதிந்து
அல்லது ஒட்டி வைத்துள்ளீர்கள், அத்துடன் உங்கள் சூழலுக்கு, உங்கள் உணர்வு
உறுப்புகள் சொல்லுவதனூடாகவே அணுகுகிறீர்கள் என்பதால் என்கிறார்கள் [you are forever stuck in your head and have access to
the environment only via what your sense organs tell you],
இரண்டாவது வகை [Existential
Nihilist / இருத்தலியல்
நீலிசவாதி] நீலிசவாதிகள், வாழ்க்கை ஒரு உள்ளார்ந்த கருத்தையோ அல்லது ஒரு நோக்கத்தையே
கொண்டது அல்ல என்கிறார்கள் [denies
that life has any inherent meaning or purpose] பிரபஞ்சத்தின் கண்ணோட்டத்தில், எதுவுமே
ஒரு மதிப்போ அல்லது நோக்கமோ கொண்டதல்ல [From
the perspective of the universe, nothing has any value or purpose] என்கிறது.
மூன்றாவது வகை [Ethical Nihilist / நன்னெறி
நீலிசவாதி], இவர்கள் சமுதாயம் அல்லது சமூகம் சொல்லுகிறதே என்பதற்காக, அதன்
பொருட்டு மட்டுமே ஒன்றையும் செய்ய மாட்டார்கள் [who does not do what society says is ought to be done for just the
sake of it.]. உதாரணமாக, ஏதாவது
ஒன்று செய்ய எந்த காரணமும் இல்லை என்றால்,
அதைச் செய்வதால்,
சமூகம் அவர்களை எவ்வளவு மதிக்கக்கூடும் என்பது அவர்களுக்கு
முக்கியமல்ல, அவர்கள் கட்டாயம் அதை செய்ய மாட்டார்கள் [If there is no reason do something, no matter how
much society might value doing it, an Ethical Nihilist will not do it]. அவர்களுக்கு பின்பற்றவென்று உள்ளார்ந்த ஒழுக்கங்கள், மதிப்புகள்
அல்லது விதிகள் [no inherent
morals or values or rules] என்று
ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு ஒன்றை தெளிவாகச் சொல்கிறேன், இதன்
கருத்து அவர்கள் வன்முறை மற்றும் கொலையாளிகள் என்பதல்ல, இதன்
கருத்து அவர்கள் நடத்தை ரீதியாக, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்தில்
எடுக்காதவர்கள் [behaviorally
immune to what others think] என்பதே
ஆகும். இதனால் நீலிசவாதிகள் வன்முறை,
சுயநலம் மற்றும் ஒழுக்கக்கேடானவர்கள் [violent, selfish and immoral] என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் நீலிசவாதிகளும்
மனிதர்களே என எண்ண தவறுகிறார்கள். மனிதர்கள் ஒழுக்க ரீதியாக நடந்து கொள்ள, உயிரியல்
ரீதியாக பரிணமித்தவர்கள் [human beings
have biologically evolved to behave “morally”] என்பதை மறந்து விட்டார்கள் . நீங்கள் மனிதனின் இயல்பான
நடத்தையை, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளுடன், குழப்ப
வேண்டாம் [Do not confuse natural human
behavior with what ought to be done]. ஒரு நீலிசவாதி,
தர்க்கரீதியாக நன்மை பயக்கும் அல்லது அதைச் செய்ய வேண்டும்
என்று அவர் உணருவதால் செய்கிறார் [he
does either because it is logically beneficial or because he feels an urge to
do it], ஆனால் என்றென்றும்
ஒரு சமுதாயம் சொல்லுகிறதே என்று மட்டும் செய்வதில்லை. அது தான் வித்தியாசம்.
பிரபலமான ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல,
நீலிசம் ஒரு அவநம்பிக்கை அல்ல, நீலிசவாதிகள்
ஒரு மனநோயாளி அல்ல,
தர்மம்
அல்லது தியாகம் அல்லது காணிக்கை [alms
or sacrifice or offering] போன்ற
ஒன்றும் இல்லை, நல்லது அல்லது தீய செயல்களின் [good or evil deeds] அடிப்படையில் புண்ணியம் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன்
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் கூறுகளால் [four elements] கட்டப்பட்டுள்ளது. அவன் இறக்கும் பொழுது பூமி பூமிக்கு
போகிறது, நீர் நீருக்கு போகிறது,
நெருப்பு நெருப்புக்கு போகிறது அதே போல காற்று காற்றுக்கு
போகிறது. அவனின் உணர்வுகள் விண்வெளியில் மறைந்து விடுகின்றன. இந்த உலகில் இருந்து
அவன் எந்த உலகிற்கும் போகவில்லை. மறுபிறவி என்று ஒன்றுமே இல்லை, தாய்
அல்லது தந்தைக்கு ஆற்றும் சேவையிலிருந்து நீங்கள் ஒரு புண்ணியமும் பெறப்போவதில்லை.
சரியான பாதையென ஒன்றில் சென்று, பரிபூரணத்தை [perfection]
அடைந்தவர்கள் என எந்த துறவிகளும் பிராமணர்களும் [ascetics or Brahmins] இல்லை. இந்த உலகையும் இதற்கு அப்பால் உள்ளதையும்
அறிந்தவர்களோ அல்லது அனுபவித்தவர்களோ இல்லை. நாலு பேர் உன் சவத்தை காவிச்
செல்கிறார்கள். அவர்கள் சுடலைக்கு போகும் மட்டும் வீண் பேச்சு பேசுகிறார்கள்.
அவரின் எலும்பு கருகுகிறது. அவரின் தியாகங்கள் சாம்பலில் முடிகிறது. உடல் இறக்கும்
பொழுது முட்டாளும் ஞானியும் [fool and
wise] அழிந்துவிடுகிறார்கள். எனவே
இவர்கள் பயனற்ற வெற்று பேச்சும் மற்றும் பொய்களும் பேசுகிறார்கள் என்கிறார் கி மு 600 ஆண்டை
சேர்ந்த இந்தியாவின் அஜிதா கேஷாகம்பலி [Ajita
Kesakambali] என்ற தத்துவவாதியும்
முனிவரும். இவர் இந்த பதிலை, ஆற்றல் மிக்க கொடுங்கோண் அரசனாகவும் தனது தந்தை
பிம்பிசாரனைக் கொன்று அரசை கைப்பறியவனனுமான,
பேரரசர் அஜாதசத்ரு ஹரியங்காவின் [Ajatashatru Haryanka] கேள்விக்கு விடையாக கூறுகிறார். இங்கு நாம் ஒருவித நீலிசம்
காண்கிறோம். மேலும் பழங்கால கிரேக்கர்களிடையே,
உதாரணமாக கி மு 483-378 ஆண்டை
சேர்ந்த கோர்கியஸ் [Gorgias] என்பவர்
"எதுவும் இல்லை. ஏதாவது இருந்து இருந்தாலும் அதை அறிய முடியாது அல்லது
தெரியாது இருக்கும். ஒரு வேளை அதை அறிந்திருந்தால், அது பற்றிய அறிவு
பிறருக்குக் எடுத்து கூற முடியாததாக இருக்கும் " [“Nothing exists. If anything did exist it could not be
known. If it was known, the knowledge of it would be incommunicable.”] என்று கூறியதை,
நீலிசத்தின் [நிஹிலிஸின்] ஒரு அடிப்படைக் கொள்கையாகவும்
கூறலாம்
வாழ்க்கை
அர்த்தமற்றது என்ற நம்பிக்கையில், அனைத்து மத மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் [religious and moral principles] நிராகரிப்பது நீலிசம் எனப்படுகிறது. எனவே, வாழ்க்கை
அர்த்தமற்றதாக இருப்பதாக நீங்கள் நம்பினால்,
நீங்கள் அல்லது மற்றவர்கள் செய்யும் எதையும் ஆதரித்து
எந்தவிதமான வாதமும் நீங்கள் செய்ய தேவையில்லை. உங்களிடம் எந்த ஒழுக்கக் கோட்பாடும்
இல்லை என்றால், உங்களிடம் சரியோ பிழையோ என்று தீர்மானிக்கும் அளவுகோல்
இல்லை. எனவே அது இல்லாமல், எந்த காரணத்தை கொண்டு ஒரு சமுதாயத்தை ஆதரிப்பதற்கு, மக்களை
ஊக்குவிக்க அல்லது அதை நம்பவைக்க முடியும்?
அப்படி என்றால் நீலிசம் சமுதாயத்தை, அதன்
கட்டுக்கோப்பை குலைக்க வழிவகுக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. மேலும் நீலிசம்
அதீதமாக மக்களை இன்பமே நோக்கம் என்ற கொள்கைக்கு [hedonism] வழி நடத்துவதாகவும், இந்த
உண்மையை சமுதாயம் முழுவதும் ஓரளவு பார்க்கிறோம் என்பதும் ஒரு பொதுவான வாதமாகும்.
எனவே நீலிசம் ஒரு வன்முறை மற்றும் பயங்கரவாத
தத்துவமாக [violent and even terroristic
philosophy] கருதப்படுகிறது.
மேலும் வன்முறைக்கு ஆதரவாக நிஹிலிசம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எதோ உண்மை
தான். அது மட்டும் அல்ல பல ஆரம்பகால நீலிசர்கள் வன்முறை புரட்சியாளர்களாக [violent revolutionaries] இருந்தனர் என்பதும் உண்மைதான், உதாரணமாக
ரஷ்ய நீலிசர்கள் [Russian
Nihilists]. இவர்கள் பாரம்பரிய
அரசியல், நெறிமுறை மற்றும் மத நெறிகள் [political, ethical, and religious norms] எந்தவொரு செல்லுபடியாகும் அல்லது கட்டுப்படுத்தும் சக்தியை
தம் மேல் கொண்டு இருக்கவில்லை என்று நிராகரித்தனர். ஆனால், அவர்கள்
மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததுடன், சமுதாயத்தின்
ஸ்திரத்தன்மைக்கு எந்த வித அச்சுறுத்தலையும் கொடுக்கவும் வில்லை. ஆனால், அவர்களது
வன்முறை, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலாக இருந்தது
என்பது உண்மை தான்.
நீலிசத்தின்
ஒரு வரையறை, மனித வாழ்க்கை அர்த்தமற்றது, எல்லா மதங்களும், சட்டங்களும், தார்மீக
கோட்பாடுகளும், அரசியல் அமைப்புகளும் முற்றிலும் வெறுமையானது பொய்யானது [all religions, laws, moral codes, and political systems are
thoroughly empty and false] என்பதாகும்.
எனவே, சமுதாயத்திற்கு நீலிசம் தீங்கிழைக்கிறதா? என்ற ஒரு
கேள்வி எழுகிறது. "அவ்வாறு இருக்கலாம்,
ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றே
இதற்கு நான், என் அனுபவத்தில் இருந்து பொதுவாக பதில் அளிப்பேன். உதாரணமாக, அடிப்படையில்
மதத்திற்கு விரோதமாக என் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது. எனக்கு அதில் நம்பிக்கை
இல்லை. எனவே ஒரு மதத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. மற்றும்
நான் எந்த மத தூண்டுதல்களையோ அல்லது மத உணர்வுகளையோ கொண்டு இருக்கவில்லை. ஆனால், நான்
அடிப்படையில் அனைத்து சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறேன், மற்றும்
எனக்கு அர்த்தம் தருகிற தார்மீக கோட்பாடுகளையும், அரசியல்
தத்துவங்களையும் [moral codes
and political philosophy] கடைப்பிடிக்கிறேன்.
சட்டத்தை பொறுத்த வரையில், நான் அதை உடைக்க வேண்டும் என்று உணரவில்லை. அதே மாதிரி, ஒழுக்கம்
சார்ந்த நெறிமுறையை [morals] பொறுத்த வரையில்,
நான் அவையை என் பெறோர்களிடம் இருந்து, ஆனால்
நான் காரணங்களையும் அதில் உள்ள உண்மைத் தன்மையையும் உணாந்து நானாக கற்றுக்
கொண்டேன். என்னை இரு பெறோர்களும் வளர்த்தார்கள். நாங்கள் ஒரு சராசரி குடும்பம்.
சில நேரங்களில் செலவிட போதுமான பணம் எம்மிடம் இருந்ததில்லை, ஆனால்
என்றும் ஒருவரிடமும் இருந்து பணம் திருடவில்லை,
ஏமாற்றவும் இல்லை. நான் நாள் முழுவதும், சந்திக்கும்
எல்லோரையும், மரியாதையுடன் நடத்த முயற்சி செய்கிறேன். பெருபாலும் எந்த
உரையாடலுடனும், நான் மக்களை சுற்றி நகைச்சுவை செய்ய விரும்புகிறேன், எனக்கு, வாழ்க்கை
மகிழ்வாக வாழ்வதற்க்கே !
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி:
14
தொடரும்
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்↴
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
பகுதி 14A வாசிக்க
அழுத்துங்கள் ↴
No comments:
Post a Comment