[The religion of the ancient Tamils] :
[தொகுத்தது:கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]
[முகவுரையும்
சிந்து சமவெளி நாகரிகமும்]
PART 01:BEFORE 2000
BC[INTRODUCTION & Indus Valley civilization]
தனி மனிதனைக் கடந்து
அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை(கடவுள் , இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும்,
ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன்
நடத்தையை (நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல்) அமைத்துக்கொள்ள உதவியாய்
அமைந்த ஒரு கோட்பாடு எனலாம்.
[1]மொழி சார்ந்த குழு:திராவிட மொழிக் குடும்பம்/Dravidian
இனம்:திராவிடர்
இந்தியாவிற்கு
குடியேறிய காலம்:10-8000 BC
சமயம் [மதம்]:Proto-Tantra
ஆதிமுன்னோர் சார்ந்த
சடங்கு
திராவிடரும்,
வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான
கருத்து. இது, பெரும்பாலும்
வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர்
மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு
சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால்
அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். இந்தியாவுக்குத்
தெற்கே, பல
மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா
எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம்
என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில்
சிலர் வாதிட்டனர்.ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர்
பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
[2]மொழி சார்ந்த குழு:ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின்
பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த/Indo-European
இனம்:காக்கேசிய
இனத்தவர்
இந்தியாவிற்கு
குடியேறிய காலம்:6-4000 BC
சமயம் [மதம்]:Rig-Veda
இருக்கு வேதம்[வேத முறை]
நான்கு வேதங்களையும்
கற்று பாராயணம் செய்வதே ஞானத்தை அடையும் வழியாக
கருதப்பட்டு வந்தது.இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல
வேள்விக்கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப்
(பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள்
கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே
காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர்[தமிழர்கள்] எனபடும்
இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.[ கி.மு.
2000 அளவில் மத்திய
ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பல நாடோடிக் குழுக்கள் இந்தியாவிற்குட்
புகுந்தன எனவும் இவையே இந்தியாவிற்குள் முதன் முதலிற் புகுந்த ஆரியக் குழுக்கள்
எனவும் எடுத்துக்கொண்டனர்..இந்தியாவிற்குட்
புகுந்த காக்கேசிய ஈரானிக் குழுக்கள்
இவர்கள்.]
3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித
இயற்கை வழிபாட்டையே பின்பற்றினார்கள்.
பண்டைய சிந்து சமவெளி
நாகரிக மக்கள் பொதுவாக தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள். "ஹரப்பா" என்ற சொல்லை ஹர+அப்பா என
பிரிக்கலாம் .இங்கு ஹர என்பது சிவா என்பதையும் அப்பா என்பது தந்தையையும்
குறிக்கிறது. ஹரப்பா நகரம் சிவா விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடமாக கருதலாம்.இந்த சிவா வை இந்திய பண்பாட்டின்
தந்தை என குறிப்பிடலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டையும்,
வரலாற்றையும் அறிய இரண்டு வழி முறைகள் வரலாற்று அறிஞர்களால்
கையாளப்படுகிறது. ஒன்று தொல்பொருட்கள்(கல்வெட்டுகள்,மனித மிச்சங்கள் ) மற்றொன்று இலக்கியம். சிந்து-சரஸ்வதி
நாகரிகத்தீன் சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்று முகத்தில் கொம்புகள் கொண்டு விலங்குகள் சூழ
அமர்ந்திருக்கும் பசுபதி வடிவம்.இந்த தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே
சிவவழிபாடு ஆகும் .சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது
என்பது இதனால் அறியப்படுகிறது.
ஆரியர்
அல்லாதவர்களின் ஆன்மீக அணுகுமுறை பொதுவாக தந்திர முறை யாகும்.இது ஆரியர்களின்
வேத வழக்கத்தில் இருந்து வேறு பட்டது
.இது ஒருவர் தனது எண்ணங்களையும்
உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும்.ஆகவே
ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான,வெளிப்புற சடங்கில் இருந்து மாறுபட்டது .தந்திர வழிபாட்டு
முறையின் வேர்களை அறிய வேண்டுமெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க
வேண்டும்.சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை .
ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்திருக்க சுற்றி மிருகங்கள் நிற்பதுபோல்
வரையப்பட்டிருக்கும் சிற்பம். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு
பெண் சிற்பம். இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்ததென வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.
முன்னோர்களின் நினைவாக நடுகல் பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில்
சைவர்களின் நடுகற்கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின்
நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும்,
யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக
லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு
சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப்
பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தந்திரம்,
காமத்தின் வழியாக கடவுளை அடைய முனைபவர்கள் பின்பற்றிய
வழிமுறை எனவும் கூறலாம்.
ஏறத்தாழ ஏழாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தின்
உச்சியில் இருந்தார்கள் .அவர்கள் தந்திர முறையை
மனதையும் உடலையும்
ஒருங்கிணைப்பதற்கு அப்போதே பாவித்தார்கள். தந்திர முறையில் உடம்பு,மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும்
சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும். காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு பதிலாக
நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும்பொழுது நமது கவனச்
சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப்பாகவும் ,
கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது . இதுதான் தந்திர
முறையின் தொடக்கம்.அதாவது மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தந்திர முறையின்
முக்கிய கூறு. உடலையும் மனதையும்
தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறைகள் ஆகும்.
ஆரியர் வந்த
காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர்
வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு கைப்பற்றியதாக வேதத்திற்
கூறப்பட்டிருக்கிறது .ஆரியர்கள், பழங்குடி மக்களை
கீழோர்,தம்மை
விடத் தாழ்ந்தவர் என் கருதினர் .உதாரணமாக இராமாயண கதையில் இவர்களை குரங்கு
என்றும் அரக்கன் என்றும் குறிக்கப்
படுகிறது.
ஆரியர்க்கும் ஆரியர்
அல்லாதவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்
நடவடிக்கையின் போது,ஒரு பிரசித்தி
பெற்ற நபர் பிறந்தார் .அவரின் பெயர் சதா சிவா .சிவனை,
"மகாசிவன்'
என்று அழைப்பதற்கு பதிலாக, "சதாசிவன்' என்ற பெயரால் அழைப்பர்.
சிவனுக்கு மட்டுமே, "சதா' என்ற சிறப்புச் சொல் உண்டு. வேறு எந்த தெய்வத்தின்
பெயரிலும், "சதா'வைப் பயன்படுத்துவதில்லை. "சதா'
என்றால், "எங்கும், எப்போதும்' என்று பொருள் கொள்ளலாம். எங்கும் சிவம்,
எதிலும் சிவம், எப்போதும் சிவம்' என்று சதாசிவத்தைப் பொருள்படுத்தலாம்.இவர் ஒரு பெரிய ஆன்மிக
குரு.இவரின் பிறப்பிற்கு முன்பே தந்திர
முறை செயல் பாட்டில் இருந்தாலும், மனித வர்க்கத்திற்கு இவரே முதல் முறையாக ,
முறையான , ஒழுங்கான ஆன்மீக உணர்வு/ இயல்பு ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இவர் ஒரு மிக சிறந்த
ஆன்மிக குரு மட்டும் அல்ல ,இவரே பாரதத்தின் ஆடலுக்கும் இசைக்கும் ஒரு அமைப்புமுறை
நிருவியவர்.இதனால் தான் இவரை சில நேரம் நடராஜர்[நடராசர் ] எனவும் அழைப்பர்.
நடராஜ
தத்துவம்:
திருமுகம்-எல்லையற்ற
அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.
பனித்தசடை-சடை
சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.
கங்கை-இறைவன்
பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.
பிறைசூடுதல்-சரண் என
அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
இவரே[சிவனே ] சித்த
வைத்தியத்தை நிருவியவர் .
"நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம் நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச்
சொன்னார்" -அகத்தியர் -
சமுதாய சூழலிலும்
அவர் ஒரு பெரும் பங்கு ஆற்றி உள்ளார்.சாதி சமுக அமைப்புகளுக்கு அப்பால் ,இருவரும்
ஒருவருக்கு ஒருவர் பொறுப்பு
உணர்ந்து தமது திருமணம் வெற்றி
அடைய ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தினார்
அது மட்டும் அல்ல ,ஆரியன் அரசிளங் குமாரியை திருமணம் செய்ததின் மூலம்,
முரண்பாடான கும்பலை
ஒன்றாக்கினார் .இதன் மூலம் மனித
நாகரிகத்தின் தந்தை என இவர் அழைக்கப் படுகிறார் .
ஆன்மிக வளர்ச்சிக்கு
/வெற்றிக்கு நல்ல ஒரு குருவும் நல்ல ஒரு சீடர்[மாணாக்கர்] வேண்டும் என்பதை சிவா
விளங்கப் படுத்தி உள்ளார் .
தந்திர முறை ,தியானம் யோகா
இவைகளின் ஒன்று சேர்த்தலை விட மேல்
அதிகமானது .யோகா உடலையும் மனதையும்
தனித்தனியே பிரிக்க முற்படுவது.தந்திர முறையின் படி,போட்டி , போராட்டம்
வாழ்வின் சாரம். எல்லா விதமான
தடைகளுக்கும் எதிராக போராடி குறைபாடான , நிறைவுறாததில் இருந்து
பூரணமாக்க , முழுநிறைவாக்க முயலும் முயற்சி ,
பிரயத்தனமே தந்திர
முறையின் உண்மையான மெய்பொருள்.
சிந்துவெளி நாகரிகக்
காலத்தில் லிங்க வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள்
இடிபாடுகளுக்கிடையில் கிடைத்துள்ளன.அத்துடன் சிவன் அல்லது பசுபதி ,"ஆமுவான்/Ahmuvan" போன்ற கடவுளரும் இருந்துள்ளனர்.சிவா என்பது ஒரு திராவிட
சொல் .அது சிவந்த அல்லது கோபத்தை குறிக்கும்.சிவனது மூலம்,
சிந்து வெளி, மொகாஞ்சிதாரோ, ஹரப்பா நாகரீகங்களுடன், தொடர்பு பட்டது!"ஆமுவான்/Ahmuvan
" முருகனை ஒத்த
வடிவத்தை கொண்டுள்ளார்.அனால் அங்கு கோவில் இருந்தத்திற்கான ஒரு அடையாளம் ஒன்றும் இல்லை. பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய,
“இளமை’ கடவுளை வணங்கினர்.
அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட
பெயர்கள் வழங்கப்பட்டன.அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து
காணப்படுகிறது.அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன்
சேர்த்துவிட்டார்கள்.ஆரியக் கலப்புக்குப் பின்னரே
முருகன்-கார்த்திகேயன்[ஸ்கந்தன்] ஆனான்! திருமால்- விஷ்ணு ஆனான்!* சிவன்-
ருத்திரன் ஆனான்!உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை,
ஆரியர்கள்
கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள்.அடிமைப் படுத்தப்
பட்ட மக்களை, வென்றவர்களின்
கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும்.அதாவது
தமிழர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம்,
இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு,
சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன.உலக வரலாறு நெடுகிலும்,
ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் தந்திரம் அது.தமிழரின்
நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில்
ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட,
மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும்,
சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை,
தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. தமிழில் உள்ள,
முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத்
தெரிகின்றது. முருகனுக்கு தமிழில் வள்ளி என்ற மனைவி இருந்தார். ஆரியத்தோடு
சேர்ந்து ஸ்கந்தன் இந்திரனின் மகளான தெய்வானையும் மனைவியாகச் சேர்ந்து கொண்டார்.
இதன் மூலமே, தேவேந்திரனுடன்
சொந்தமாகின்றார்!இதன் பின்னராக சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக அண்ணன்,
தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவுமுறை உருவாக்கப்பட்டன. முருகனும்,
பிள்யைாரும் சிவனுக்குக் குழந்தைகள். திருமால் மைத்துனர்
.......
சுருக்கம்:சிந்துவெளி
நாகரிக மக்களின் சமய நம்பிக்கை:
இன்றைய சைவ சமயத்திலே
காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின்
முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணிவாகும்.
சில சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி
நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண்
தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட
தெய்வங்களை முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல்,
முதலில் அன்னைத் தெய்வத்தையும்,
அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும்,
மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக்
கூறியுள்ளார். பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய
சமுதாயத்திலே தாய்வழிமுறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும்
உண்மையாகும்.அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.
பெண்தெய்வ (சக்தி)
வழிபாடும் மூலச்சிவ வழிபாடும் இருந்ததைப் மேலே
பார்த்தோம். இவற்றின் பிணைப்பாக இலிங்க வழிபாடு நிலவியது. மொகஞ்சதரையிலும்,
ஹரப்பாவிலும் கணக்கற்ற, நீண்டு குவிந்த அல்லது முக்கோணக் கற்களும் களிமண்
பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள் என
எடுத்துக்காட்டினார். இலிங்க வழிபாடானாது உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்த புராதன
நாகரிகங்களிற் காணப்படும் வழிபாட்டு முறையாகும். "நீண்டு குவிந்த கல்வடிவு
ஆண்குறியின் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்குறியின்
அடையாளமாகவுமே முன்னையோராற் கருதப்பட்டது"ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைக்
காலந்தொட்டு இலிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர
நூலானும் அறியக்கிடக்கின்றது.
"சக்தியுஞ் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும்
பெண்ணும் உயர்குண குணியுமாக
வைத்தனன் அவளால் வந்த
ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்
இத்தையும்அறியார்பீடலிங்கத்தின்
இயல்பும் ஓரார்."
என்று
சிவஞானசித்தியார் தத்துவ விளக்கத்தோடு உரைப்பது பண்டுதொட்டு வந்த உண்மையே
யென்பதில் ஐயமில்லை.
பிற்காலத்தில் சைவசமய
தத்துவ அடிப்படைகளிலே முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மரங்களை வழிபடுவதும்
சிந்துவெளி நாகரிகச் சமய முறைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. எண்ணற்ற சிந்துவெளி
முத்திரைகளின் அரச மரம் இடம்பெற்றுள்ளது.
சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட ஓர் இலச்சினையில் இரு அரச மரக்கிளைகளுக்
கிடையிலே ஆடைகளின்றிப் பெண் தெய்வமொன்று காணப்படு கின்றது. நீண்ட கூந்தலும்
கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. மக்கள் உருவங்களும் விலங்குருவங்களும்
அவ்வன்னைத் தெய்வத்திற்கு அடிபணிந்து அஞ்சலி செய்து நிற்கின்றன. அரச மரமும்
அதனுடன் சேர்ந்த அன்னை வழிபாடும் ஆரியர் காலத்துக்கு முற்பட்டன என்பதற்கு இதனையும்
சான்றாகக் கொள்வர் வரலாற்றாசிரியர்.
கிறித்துவிற்கு முன் 2,500 ஆண்டளவில் சிறப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகம் கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்து
விடுகிறது. ஏறத்தாழ அக்காலப் பகுதியில் அலையலையாக இந்தியாவிற்குள் வந்த நாடோடி
மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகததின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது
இப்பொழுது ஆராய்ச்சியாளர்
முடிவாகும்.மேலும் சிந்துவெளி நாகரிகத்துக்கும் திராவிடருக்கும் நெருங்கிய
தொடர்புண்டு என வரலாற்றாசிரியர் கூறுவர்.
"இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய (ஆரியர்களுடைய)
எதிரிகளை (தமிழர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக்
கையில் ஏந்துகிறோம்."
மண்டலம் 1,
அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3
"இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை)
கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி
ஒழிக்கவும்".
மண்டலம் 7,
அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும்
மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு
போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே
மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த
வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப்
பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10,
அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8
வச்சிராயுதம் ஏந்திய
வேதகால ஆரியக் கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று
வேதங்கள் பாடும். பெண் தெய்வம் (அன்னை) சிவன், இலிங்கம், முதலிய தெய்வங்களை இந்திரம் வென்றதுடன் சிந்துவெளி
நாகரிகத்தின் சுற்று மதில்களும், கோட்டைச் சுவர்களும், அரண்களும்,
அகன்ற வீதிகளும், அன்னை ஆலயமும், தானியக் களஞ்சியமும் மண்ணோடுமண்ணாயின. நீண்ட நாடகம் ஒன்றின்
முதலாம் அங்கம் முடிவடைந்ததுபோல மேடையில் திரை வீழ்கிறது. வெற்றி வீரனான
இந்திரனும் அவனது சகாக்களும் சோமபானம் அருந்திக்களிக்கும் எக்காளச் சிரிப்பு
மட்டும் எமக்குக் கேட்கிறது. ஆனால் மீண்டும் திரை விலகும்போது தோற்றவர்களை
மட்டமின்றி வென்றவர்களையுமே காணவில்லை. வேதகாலத்திற்குப் பிற்பட்ட இந்து சமய
வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். இந்திரன்,
வருணன், மித்திரன், பிரஜாபதி, மத்திகவன் முதலிய கடவுளர்கள் முதலிடம் இழந்து பின்
வரிசைகளில் காணப்படுகின்றனர். சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி முதலிய புதிய தெய்வங்கள் நமது மதிப்பையும்
கவனத்தையும் கவருகின்றனர்.
சிந்துவெளி நாகரிகம்
சிதைவுற்று ஆயிரம் ஆண்டுகளுக்குத் தென்னிந்திய வரலாறு எவ்வாறிருந்தது என்று இன்றைய
நிலையிற் கூற முடியாமலிருக்கிறது. கி.மு. ஏழாம்
நூற்றாண்டளவிலே திரைவிலகும்போது,கடைசி தமிழ் சங்க காலத்தில் திராவிட மக்கள் ஓரளவு நாகரிகம் பெற்றுத்
தென்னிந்தியாவில் வாழ்வதனை நாம் காண்கிறோம்.
அடுத்த
முறை கடைசி தமிழ் சங்கத்தில்[700 B C to 300 A D ] சந்திப்போம்
{பகுதி 02:கி மு 700 இருந்து கி பி 300 வரையான கால பகுதி
[கடைசி தமிழ் சங்கம்] தொடரும்}
[கடைசி தமிழ் சங்கம்] தொடரும்}
பகுதி 02 இனை வாசிக்க கீழே அழுத்துங்கள் ↴↴
Theebam.com: பண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]:
Theebam.com: பண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]:
இந்த லெமோரியாக் கண்டம் எனப்படுவது நமது இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் குமரிக் கண்டம்தான் என்று தமிழ் எழுத்தாளர்கள் கூறினாலும், அகழ்வாராய்ச்சியாளர்கள் அப்படி ஒரு லேமொரியாக் கண்டம் இருந்தது என்பது நிறுவப் படவே இல்லை என்று
ReplyDeleteசாதிக்கிறார்கள்.
நீங்கள் கூறியவாறு ,குமரிக் கண்டம்/லெமோரியாக் கண்டம் கொள்கையை புறம் தள்ளி ,திராவிடர்கள்/தமிழர்கள் சுமேரியாவில் இருந்து இடம்பெயர்ந்து இந்து சம வெளி ஊடாக தென் இந்தியாவில் ,இலங்கையில் குடியேறினர் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு , சிவகணேசன் மற்றும் சில அறிஞர்கள் தமது சாட்சிகளை முன் வைக்கின்றனர்.கிழே தரப்பட்டுள்ள இரண்டு "வெப்-சைட்"டையும் பார்க்கவும்
Deletehttp://www.youtube.com/watch?v=Vb39zuykL8o&feature=relmfu (Discussion-GTV)
Exaltations- In-Anna(Tamil) - SumeruTamil Texts - Google Sites https://sites.google.com/site/sumerutamiltex/exaltations--in-anna
சுமேருத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் தமிழ் உரையும் விளக்கமும் : முனைவர் கி. லோகநாதன் ...
நன்றி
###முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை.
ReplyDelete###ஆரியர்க்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நடவடிக்கையின் போது,.... பிறந்தார் .அவரின் பெயர் சதா சிவா.
###ஆரியக் கலப்புக்குப் பின்னரே முருகன்-கார்த்திகேயன்[ஸ்கந்தன்]
****தலைவிரித்தசடையன் பரமேஸ்வரன் அக்கிரமங்கள் செய்த அன்னியர் ஆட்சியின் 3 கோட்டைகளை அழித்து திராவிடரை காத்து நல்லாட்சி செய்தான் என ஒரு இடத்தில் படித்திருக்கிறேன்.அதனாலேயே முப்புரமெரித்தவன் என இன்று அழைக்கப்படுகின்றான்.
நீங்கள் படித்த ஒரு இடம் ,இதுவாக இருக்கும் என நினைக்கிறேன் .சரியா மனுவேந்தனே ?இதோ அந்த பாடல் விளக்கத்துடன்
Deleteபுறநானூறு 55/Puram 55 Siva gave the gods victory over the three walled cities, using a mountain for his bow, a snake for its string. the king is said to be life itself, like the eye of Siva next to the crescent moon. Siva had a black throat.
திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார் பாடியது.
"ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5.பிறைநுதல் விளங்கு மொருகண் போல"
அருஞ்சொற்பொருள்:
1. ஓங்கு = உயர்ந்த; ஞாண் = கயிறு; கொளீஇ = கொண்டு. 2. கணை = அம்பு; எயில் = ஊர், புரம், மதில், அரண்; உடற்றுதல் = அழித்தல். 3.விறல் = வலிமை; அமரர் = தேவர். 4. மிடறு = கழுத்து; அண்ணல் = தலைவன், பெரியவன்; காமர் = அழகு; சென்னி = தலை, முடி.
உரை:
1]ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
---உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்
கொளுத்தி;
2]ஒரு கணைகொண்டு மூவெயில் உடற்றி --- ஒப்பில்லாததோ
ரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து;
3] பெரு விறல் அமரர்க்கு --- பெரிய வலியையுடையதேவர்கட்கு;
4]வென்றி தந்த --- வெற்றியைக் கொடுத்த;
5] கறை மிடற் றண்ணல்--- கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது;
6]காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல --- அழகிய திருமுடிப் பக்கத் தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல;
ReplyDeleteவியந்து பார்க்கும் அளவில் விரிந்து குவிந்து கிடக்கிறது இந்த அறிவுப் பெட்டகம். சிந்து வெளியின் சமய வழிபாடுகளை ஆய்ந்து அகழ்ந்து பரப்பியுள்ளார் கதாசிரியர். இயற்கை வழி பாட்டில் தொடங்கி இருக்கு வேதத்தின் பாதையில் நடந்து, 3000-4000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வாழ்வியலை அலசி, ஹரப்பா, சதா. யோகா, தியானம்,முருகன், சுப்பிரமணியன், விஷ்ணு, சக்தி வழிபாடு ஆதாரங்களுடன் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி.