Mother's Day [22 Mar 2020 / 10 May
2020]
அன்னையர்
நாள் விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna
Jarvis] அவர்களால் மேற்கு
விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச்
சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில்
கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர்,
சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும்,
அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும்
கொண்டாடுகின்றன. சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந் ஜார்விஸ் [Mrs. Ann Marie Reeves
Jarvis] என்ற பெண்ணின் மகள்
அனா ஜார்விஸ் [Anna Jarvis] முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள
மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை சிறப்பு
வழிபாடு ஒன்றை நடத்தினார். அதன் பின், அனா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை
அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு
அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று
விரும்பினார். தம் எண்ணத்தை, அனா ஜார்விஸ் பென்சில்வேனியா மாநில அரசுக்குத்
தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.
இங்கிலாந்தை பொறுத்த வரையில் அங்கு பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்த விழா
கொண்டாடப் பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அங்கு “லென்ற்” [Lent]
என்ற வழிபாடு இருந்ததாகவும், “லென்ற்”
என்ற வார்த்தையின் அர்த்தம், இளவேனிற் காலத்தின் முதல் நாள் என்றும்,
பனியும் குளிரும் முடிய, பயிர் போடும் காலம் இது என்றும்,
அது பின் சமய மயப்பட்டது என்றும் கூறுகின்றனர். அதனை
தொடர்ந்து, 16ம்
நூற்றாண்டில் தாய்மை ஞாயிறு ["MOTHERING
SUNDAY"] என்ற நாள் முதன்
முதலாக அனுசரிக்கப் பட்டதாகவும், அதுவே பின்னாளில் அமெரிக்காவின் தாக்கத்தால்
இங்கிலாந்திலும் அன்னையர் நாள் ["Mother's Day"] என மாறியது என்கின்றனர்.
Mother's Day is a celebration
honoring the mother of the family, as well as motherhood, maternal bonds, and
the influence of mothers in society. It is celebrated on various days in many
parts of the world, most commonly in the months of March or May, For example,
the most of countries such as Canada, Sri Lanka, India, Germany, Italy, Japan,
New Zealand, Ausralia, America etc celebrates on May and few countries such as United Kingdom & Ireland on
March. The origin of Mother’s Day as we know it took place in the early 1900s.
A woman named Anna Jarvis started a campaign for an official holiday honoring
mothers in 1905, the year her own mother died. The first larger-scale
celebration of the holiday was in 1908, when Jarvis held a public memorial for
her mother in her hometown of Grafton, West Virginia. Over the next few years,
Jarvis pushed to have the holiday officially recognized, and it was celebrated
increasingly in more and more states around the U.S. Finally, in 1914,
President Woodrow Wilson signed a proclamation making Mother’s Day an official
holiday, to take place the second Sunday of May. In the UK, actually they don’t
have “Mother’s Day”. Although it’s popularly referred to as Mother’s Day, due
to American influence, the correct term is “Mothering Sunday”, which began as a
religious festival in the Middle Ages and is many hundreds of years older than
the purely secular and commercial Mother’s Day, celebrated in the USA and some
other countries. Historians believe it evolved from the 16th-century Christian
practice of visiting mothers in the season of Lent.
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான்
வணங்கும்
தெய்வமும் தாயம்மா -என்
கண்கண்ட
தெய்வமும் நீயம்மா"
"என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான்
வாழ்ந்திடும்
வாழ்க்கையும் உனதம்மா-என்
தாய்மையிற்
பூத்திட்ட பூங்கொடி நீயம்மா"
"என் உழைப்பும் உயர்வும் உன்கனவேயம்மா...உன்
வாசனைப்
பூக்களும் என் உயிர்ப்பேயம்மா....நான்
மீண்டும்
வேண்டுவது உன் கருவறையம்மா"
"வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே
பாரோடி
பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா -என்
வாழ்விற்கு
ஓளி விளக்கும் நீயம்மா"
"தாயின் காலடியும் ஒரு ஆலயமே....அன்பு
சந்நிதியாய்
அது எனக்கு நிம்மதியே -நான்
கண்ட
முதல் வைத்தியரும் நீயம்மா"
"மண்ணும் பெண்ணும் என்சுவாசமே அம்மா....தாய்மை
பண்பினை
போற்றிடும் கற்புடைமை அம்மா -என்
அழுகையில்
பதறி, சிரிக்கையில்
மகிழ்ந்தவளே"
"நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே
என்றும்
நான் உன் மழலை அம்மா....தெய்வம்
உனக்கு
தந்த குழந்தை அம்மா"
"In my heart,
The god I pray is you
Mother is only my prime god"
"My Sincerity & honesty-is
you
The life,I am living-is yours
You become flowered creeper with my
pregnant"
"Again I need one more time-
your womb
My work & advancement -is your
dream
your smelling flower-is my
life"
"Even shoot from roots-wood
apple is wood apple
Even child fly anywhere-it is your
feather
My light house for my life-is you
"
"Even scent from your foot
step-is a temple
which is a peace of mind for me
You are my first doctor "
"Earth & woman are breath
for life
Chastity is a cultured behaviour of
you
You felt fear on my cry & felt
happy on my laugh"
"I call you as "Amma"
-is your blessing
I am Always your -hailing toddler
Your god gifted child -is me "
🤶[Kandiah Thillaivinayagalingam]
0 comments:
Post a Comment