மறைந்த கலைஞர் விசு அவர்களின் மறையாத நினைவுகள்



விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶தனிப்பட்ட வாழ்க்கை
இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.

⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶திரை வாழ்க்கை
இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶திரைத்துறையில்..
1977 பட்டினப்பிரவேசம்,
1978சதுரங்கம்,
1980 அவன் அவள் அது,
 1980          மழலைப் பட்டாளம்,
1981 தில்லு முல்லு,
1981 நெற்றிக்கண் ,
1981கீழ்வானம் சிவக்கும் ,
1981குடும்பம் ஒரு கதம்பம்,
 1982          கண்மணி பூங்கா,  
1982 சிம்லா ஸ்பெஷல், 
1982 மணல் கயிறு,           
1982 புதுக்கவிதை,
1983 டௌரி கல்யாணம்,  
1984 நல்லவனுக்கு நல்லவன் ,
1984 புயல் கடந்த பூமி,
 1984          ராஜதந்திரம்,
1984 வாய்ச்சொல்லில் வீரனடி
1984 நாணயம் இல்லாத நாணயம்,
1984 ஊருக்கு உபதேசம்
1985 புதிய சகாப்தம்
1985 அவள் சுமங்கலிதான்  
1985 கெட்டிமேளம்  
1985 சிதம்பர ரகசியம்       
1986 மிஸ்டர். பாரத் 
1986 சம்சாரம் அது மின்சாரம்
1986 ஊமை விழிகள்
1986 மெல்லத் திறந்தது கதவு
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு          
1986 ஆனந்தக்கண்ணீர்  
1987 அடடே ஆதாரம்
1987 திருமதி ஒரு வெகுமதி 
1987 காவலன் அவன் கோவலன்
1988 பெண்மணி அவள் கண்மணி
1988 வீடு மனைவி மக்கள்  
1988 மாப்பிள்ளை சார்            
1988 சகலகலா சம்மந்தி           
1990 வரவு நல்ல உறவு 
1990 வேடிக்கை என் வாடிக்கை 
1992 மன்னன்       
1992 உரிமை ஊஞ்சலாடுகிறது  
1992 நீங்க நல்லா இருக்கணும்  
1993 உழைப்பாளி
1993 சின்ன மாப்ளே 
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வா மகளே வா
1994 வனஜா கிரிஜா 
1995 மாயாபசார்
1995 காட் பாதர் 
1996 இரட்டை ரோஜா
1996 மீண்டும் சாவித்திரி
1997 நேசம் 
1997 அரவிந்தன்          
1997 அடிமைச் சங்கிலி            
1997 வாசுகி 
1997 அருணாச்சலம் 
1997 சிஷ்யா          
1997 வாய்மையே வெல்லும்
1998 பகவத் சிங்
1999 அன்புள்ள காதலுக்கு          
1999 மன்னவரு சின்னவரு            
2000 காக்கைச் சிறகினிலே            
2000 வானவில் 
2001 சிகாமணி ரமாமணி
2001 கிருஷ்ணா கிருஷ்ணா 
2001 மிடில் கிளாஸ் மாதவன்
2001 வடகுபட்டி மாப்பிள்ளை
2001 லூட்டி 
2003 தித்திக்குதே
2004 மகா நடிகன்
2005 ஜி 
2007 சீனாதானா
2007 நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்
2008 எல்லாம் அவன் செயல்          
2009 இன்னொருவன்
2013 அலெக்ஸ் பாண்டியன் 
2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து  
2016 மணல் கயிறு 2

⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶சின்னத்திரை/தொலைக்காட்சியில்
சன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.

2016-ம் ஆண்டு வெளியான 'மணல் கயிறு 2' படத்தின் கதாசிரியராக இருந்து, அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு அவருடைய வயோதிகம் காரணமாகவும், தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்து வந்ததாலும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.


வாரத்துக்கு 2 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தவருக்கு, 3 முறை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடந்த 10 நாட்களாகவே மோசமடைந்து இருந்தது. இன்று (மார் 22) மிகவும் சோர்வாகக் காணப்பட்டவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 74

இவருடைய மனைவியின் பெயர் சுந்தரி. இவருக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது.

⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶விசு கடந்து வந்த பாதை
நாடகத்திலிருந்து 1977-ம் ஆண்டு 'பட்டினப் பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானவர் விசு. அதனைத் தொடர்ந்து 'சதுரங்கம்', 'அவன் அவள் அது', 'மழலை பட்டாளம்' என கதாசிரியராகவே பல படங்களுக்குப் பணிபுரிந்து வந்தார். அவற்றில் 'தில்லு முல்லு', 'நெற்றிக்கண்', 'குடும்பம் ஒரு கதம்பம்', 'மணல் கயிறு', 'மிஸ்டர் பாரத்', 'சம்சாரம் அது மின்சாரம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

'சம்சாரம் அது மின்சாரம்' என்ற படத்துக்காகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதற்கான தேசிய விருதை வென்றார். மேலும், 1992-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நீங்க நல்லா இருக்கணும்' படத்துக்காக சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த படம் என்பதற்கான தேசிய விருதினை வென்றார். தமிழக அரசு விருதினையும் வென்றுள்ளார்.

திரையுலகில் நுழையும் முன்பு பல நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே இருக்கும். அதனாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமன்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரட்டை அரங்கம்', ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'விசுவின் மக்கள் அரங்கம்' ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம்.

விசுவின் இழப்பு கண்டிப்பாக நாடக உலகிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு. இவரது இயக்கத்தில் நடித்த பலரும் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⇶⬱⬱⬱⬱⬱⬱⬱⬱⬱


No comments:

Post a Comment