அரைகுறை அறிவு


" [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]"
                                                 
                                               
Alexander Pope, a translator, poet, was born in London in 1688. He wrote “An Essay on Criticism” when he was 23. In Part II of this Essay on Criticism includes a famous couplet:  'A little Learning is a dangerous thing; Drink deep, or taste not the Pierian Spring ' . Translation of this in Tamil is given below. / கவிதை மேதை அலெக்சாண்டர் போப் (Alexander Pope, 1688-1744) 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில அறிஞராவர். இவர் தனது திறனாய்வுக் கட்டுரைகள் ['essay on criticism'] என்பதில், அற்ப அறிவோடு எல்லோரையும் விட தனக்கு எல்லாம் அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தோடு இருந்தால், அது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதில் முடியும் என சில எடுத்துக் காட்டுகளுடன் கவிதையாக குறிப்பிட்டு இருந்தார். அதை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், ஆனால் அவரின் கருத்தை அப்படியே இங்கு தருகிறேன். அத்துடன் கிரேக்க புராணங்களில் கலை அல்லது அறிவியலின் பாதுகாவலரான 'மூஸ்' அல்லது 'மியூஸ்' [Muse] தெய்வம் 'சரஸ்வதி'யால் பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கிரேக்க புராணத்தின் படி, பியரியன் ஊற்று [Pierian spring] என்பது பண்டைய கிரேக்கத்தில் இருந்த மாசிடோனியா ( Macedonia] என்ற ஒரு இராச்சியத்தில் காணப்படட தெய்வீக ஞான ஊற்று ஆகும். படிப்பு என்பதற்கு குறியீடாக, அந்த பியரியன் ஊற்றை போப்  பயன்படுத்துகிறார்.

"அரை குடத்தின் நீர் அலைகள்
தரை காண ததும்பி வடியும்
அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு
கூரை ஏறாமல் வானம் ஏறும் !"

"நிறை குடம் அமைதி கொண்டு
முறையாக கசடு அறக் கற்று
பாறை போல் தன்னை திடமாக்கி
பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !"

"குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி
பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி
கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று 
தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !"

"கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும்
கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும்
மஞ்சள் கிழங்கென தோற்றத்தை கண்டு
இஞ்சிபிடுங்கி தின்ற குரங்கு கதையாகும் !"

"வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் 
கள்ளம் கபடமற்ற ஞான பார்வையில்
உள்ளம் நிறைவு கொண்ட இளைஞர்கள்
கேள்விஞானம் பெற்று சிக்கலையும் புரிகிறார்கள் !"

"ஆழமற்ற குறுகிய மேலோட்ட பார்வைகள்
பலமரம் கண்டதச்சன் ஒருமரமும் வெட்டான் என்கிறது 
ஆழமான தெளிவான எமது அறிவியல்
குழப்பம்நீக்கி அறிவியல் எல்லைகளைத் திறக்கிறது!"

Here's the line in its original habitat from Alexander Pope's An Essay on Criticism (1709):

"A little learning is a dangerous thing;
drink deep, or taste not the Pierian spring:
there shallow draughts intoxicate the brain,
and drinking largely sobers us again.

Fired at first sight with what the Muse imparts,
In fearless youth we tempt the heights of Arts
Short views we take, nor see the lengths behind,
But, more advanced, behold with strange surprise
New distant scenes of endless science rise !"

[Kandiah Thillaivinayagalingam]

1 comment:

  1. அரைகுறை அறிவினால்தான் , வீட்டுப் பிரச்சனைகளையும் ,வெளியில் முகநூலில் கொட்டி ,தங்களைத் தாங்களே அவமானப் படுத்திக் கொள்கிறார்கள்.

    ReplyDelete