வக்கீல்: டாக்டர்!
விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக்
கூற முடியுமா?
டாக்டர்: 8:30 மணி இருக்கும்
வக்கீல்: விநாயகம்
அப்ப இறந்திருந்தார் அல்லவா?
டாக்டர் (கிண்டலாக):
இல்லை,
பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப்
பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.
………………………………………………………………………
*நேற்று என்
கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
*வரணும்னுதான் சார்
நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.
………………………………………………………………………
ஒருவன்: டேய்! ஏன்டா
பேணை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்:எங்கப்பாதான்
சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி
சாப்பிடனும்ன்னு!
……………………………………………………
*ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?
*சில்லறைத்
தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா
இருந்துதுங்க. அதான்
…………………………………
*யோவ் ராப்பிச்சை உன்
பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?
*அவனாவது ஃபாரின்ல
போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.
………………………………………
*கொலையும் செய்வாள்
பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?
*என் மனைவி சமையல்
பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...
…………………………………………
காதலன் : டார்லிங்
நாம இரண்டு பேரும்
மோதிரம் மாத்திக்கலாமா ?
காதலி :
வேணாம்
காதலன் :
ஏன் ?
காதலி :
உன் மோதிரம் ரெண்டு கிராம்.
என் மோதிரம் எட்டு கிராம்.
……………………………………………
ஒருவன் : என்னுடைய
அகராதியில் முடியாது என்கிற வார்த்தையே கிடையாது.
மற்றொருவன் : இப்ப
சொல்லி என்ன பிரயோசனம், அகராதியை வாங்கும் போது
பார்த்து வாங்கியிருக்கணும்.
……………………………………………
நண்பன் :
உங்க பொண்ணுக்கு ஏதாவது
மாப்பிள்ளை கிடைச்சுதா?
பெண்ணின் அப்பா
: என்னத்த சொல்ல
ஒன்னு இருந்தா,ஒன்னு இல்ல . ஆமா, உனக்கு தெரிஞ்ச
நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லேம்ப்பா .
நண்பன் :
என் அக்கா பையனுக்குத்தான் வரன்
பார்த்துட்டு இருக்கோம். பையன் ராசா மாதிரி
இருப்பான்.
பெண்ணின் அப்பா
: ரெம்ப
நல்லதா போச்சு...ராசா மாதிரி
இருந்தாத்தானே இப்போ இருக்கிற
விலைவாசிக்கு கட்டுப்படி ஆகும்.
…………………………………………
பேஷண்ட் :
இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு
சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு
ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
…………………………………………
டாக்டர்: இந்த
டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
நண்பர் : ஏன் டாக்டர்
பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும்
பொழைக்கறதில்லை..
……………………………………
கணவன்: அடுத்த
ஜென்மம்னு ஒன்னிருந்தா நான் பூனையா பிறக்கணும்னு ஆசைப்படறேன்.
மனைவி: பூனையாவா? ஏங்க?
கணவன்: பூனையைப்
பார்த்தா மட்டும்தானே நீ பயப்படறே?
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
No comments:
Post a Comment