மதுரை (Madurai) இந்தியாவின், தமிழ்நாடு
மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது மதுரை மாவட்டத்தின்
தலைநகர் ஆகும். இந்நகரம் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய
நகரமாகும்.
பாண்டிய
மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது.
சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4
ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம்
நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச்
சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை
மரபுச்
சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு
ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால
சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள்,
மதுரை சுல்தானகம்,
விஜயநகரப் பேரரசு,
மதுரை நாயக்கர்கள்,
கர்நாடக இராச்சியம்,
ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
நகரத்தில்
பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை
நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை.
மதுரை
தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கிறது.
இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில்
நடைபெறுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப்
பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு,
உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண்
கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன.
பெயர்க்
காரணம்
இந்நகரம்
மதுரை, கூடல், மல்லிகை மாநகர்,
நான்மாடக்கூடல்,
திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது.
மருதத் துறை > மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது
மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும்,
(வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள்
மிகுதி). இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த
மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது. சிவனடியார்கள்
மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.
வரலாறு
கி. மு.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள்
கிடைத்துள்ளன. இலங்கையில் கி. மு. 570
ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன்
மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான
மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய
மதுரையையே.
கலாச்சாரம், சுற்றுலா
மற்றும் கொண்டாட்டங்கள்
மதுரை
நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக
அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று.
இந்தோ
சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப்
பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய
நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும்
மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன. இராணி
மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு,
தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது
நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம்
கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தல்லாகுளத்தில்
அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால்
அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில்
மட்டும் அனுமதி).
இது தவிர
மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது.
இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும்
உள்ளது.[129] இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு
கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன.[130][131]
"ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று
உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம்
மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக
உள்ளது.
விமானம்
மதுரை
பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகும்.
இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உளநாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு
விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும்
இயக்கப்படுகிறது.
சிறப்பு மிகு மதுரையினை சுற்றி ஒருமுறை வந்தால் சுகமான அனுபவம்தானே!
(Madurai)மதுரை⟰⤄⤄⤄⤄⤄⟰மதுரை (Madurai)
0 comments:
Post a Comment