திருவள்ளுவரின் சமயம்



திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்கிற ஆராய்ச்சியில் அவர் சமணர், பெளத்தர், சைவர், வைணவர் மற்றும் கிறித்துவர் என்பது போல் சொல்லும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக சொல்ல முனைகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே இன்னும் அது போல் செய்யவில்லை, திருவள்ளுவர் கிறித்துவர் என்றாலே அவர் இஸ்லாமியர் என்பதாகும், எப்படியெனில் கிறிஸ்து சமயம் என்று ஒன்று அன்று கிடையாது ஆப்ரகாமிய மதங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பது கிறித்துவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்து அவர் இந்த மதத்துக்காரர் என்று சொல்ல முயற்சிக்கும் கொடுமை திருவள்ளுவருக்குத் தான் நடந்திருக்கிறது, இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் அவர் தின்றுவிட்டு தூங்கி இருப்பார். திருக்குறளில் இடம் பெறும் சில சொற்கள் குறிப்பாக எண் குணத்தான், மலர்மிசை ஏகினான், பகவன் என்ற சொற்கள் சமணம் மற்றும் பெளத்த மதத்தைச் சார்ந்த சொற்கள் என்பர், எனவே திருவள்ளுவர் இந்த இரு மதங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி. மற்றபடி திருவள்ளுவர் சைவரா, வைணவரா, கிறித்துவாரா என்பதற்கு சான்றுகள் குறைவு மற்றும் அன்று  அவர் காலங்களில் இவை மூன்றும் மதங்களாக/சமயங்களாக அறியப்படாதவை.
சைவம், வைணவத்தின் கூறுகள் பழந்தமிழர் மற்றும் பார்பனர்களின் வேத வழிபாடுகளின் கலவைகளால் ஏற்பட்ட பின்னாளில் சமயங்களாக வளர்ந்தவை, ஆதிசங்கரரை இவ்வாறு சைவம், வைணவம் என்று அடைப்பார்களா ? ஆனாலும் திருவள்ளுவரை ஏன் முயற்சிக்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது, அவ்வாறு முயற்சிப்பது அவரை சிறுமைப் படுத்தும் முயற்சியாகும், நான் திருவள்ளுவரை சமணர் பெளத்தர் என்று நினைக்கவில்லை, இருந்தாலும் அவ்வாறு இருக்க கூறுகள் மிகுதி என்பதை அறிஞர்கள் காட்டும் போது ஒப்புக் கொள்கிறேன்.
அதுவரையில் நாடக அரங்குகளிலும், உருவப்படங்களிலும் வள்ளுவரை திருநீற்றுக் குறிகளுடன் காட்சிப் படுத்துவதுதான் என்னால் சகித்துக்கொள்ள முடியாதுள்ளது.


[திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. திருவள்ளுவரின் மனைவி வாசுகி தனி சந்நிதி அமைந்துள்ளது. தினம் மாலையில் குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்லித் தரப்படுகிறது.]

[வள்ளுவருக்கு 1929-ல் வள்ளுவர் வழித்தோன்றல்களால் திருக்கோயில் ஒன்று  கட்டப்பட்டு இன்றுவரை ஆண்டுதோறும்  திருவிழாவும் ,தினசரி சிறப்பான வழிபாடு நடத்தி வருகிறார்கள் விருதுநகர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தினர்.]


                                                        

No comments:

Post a Comment