உலகக் கவிதை நாள்
என்பது ஆண்டுதோறும்
மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும்
போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு
நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்டது
[World Poetry Day today 21st March
Poetry reaffirms our common humanity by
revealing to us that individuals, everywhere in the world, share the same
questions and feelings. Poetry is the mainstay of oral tradition and, over
centuries, can communicate the innermost values of diverse cultures.
In
celebrating World Poetry Day, March 21, UNESCO recognizes the unique ability of
poetry to capture the creative spirit of the human mind. A decision to proclaim
21 March
as
World Poetry Day was adopted during UNESCO’s 30th session held in Paris in 1999.]
நான் கிறிஸ்துவுக்கு
முன்பு எழுதிய தமிழ் சங்கத்தின் மூன்று பாடல்களை கீழே தருகிறேன். முதலாவது காதலின்
வலிமையை மிக அழகாக 'நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான
நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத
நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலை
பெற்று விட்டன' என்று கூறுகிறது. இது இலண்டன் பாதாளத் தொடர்வண்டி
வலையமைப்பில் 2001 இல் வெளியிடப்பட்டது, இரண்டாம் பாடல்
கணியன் பூங்குன்றனார் என்ற புலவரினது. இன்ப துன்பங்களைச் சமமாக கருதி வாழ வேண்டும்
என்றும்,
மக்கள் அனைவரையும் எமது உறவினராக மதிக்கவேண்டும் என்ற
உயர் கருத்தை போதிக்கிறது. மூன்றாவது பாடல் ஒரு
வாழ்வியல் பாடல். நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகள், ஒவ்வொன்றும் ஒரு நவரத்தினம்! அகத்திணை கருத்துக்களே
பெரும்பாலும் இடம்பெறும் கலித்தொகையில் இப்பாடல் வாழ்வியலுக்குத்
தேவையான ஒன்பது அறக்கருத்துக்களை ஒரே பாடலில்
சொல்லி யிருத்தல் ஒரு பெரும் சிறப்பு ஆகும்.
[I am giving below three Tamil sangam
poems, Which were written before Christ era. First one tell about what is real
love ,which is applicable even today, was exhibited in 2001 on the London
underground metro train service by the Poetry Society. Second one express
the universality of views and a comprehensive
range of vision about the very fundamentals of life, enjoyed by this ancient
race in that remote past and again applicable even today, written by Kaniyan
Poongunranar, and his famous Tamil quote "Yaadhum Oore Yaavarum
Kelir" ["All places are ours, all
our kith and kin"] is at present depicted in the United Nations
Organisation. Third one is an Ethical poem & the ethical values emphasized
in this poem are of great quality!!]
யாயும் ஞாயும் யார்
ஆகியரோ?
எந்தையும் நுந்தையும்
எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்
வழி அறிதும்?
செம் புலப் பெயல்
நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்
கலந்தனவே
[குறுந்தொகை 40]
["What could be my mother be
to yours?what kin is my fathe
to yours anyway?And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain:
mingled
beyond parting."]
[Kurunthokai 40]
யாதும் ஊரே யாவரும்
கேளிர்
தீதும் நன்றும்
பிறர்தர வாரா
நோதலும் தணிதலும்
அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது
அன்றே,
வாழ்தல்
இனிதென
மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ
யானாது
கல் பொருது மிரங்கு
மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம்
புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம்
என்பது திறவோர்
காட்சியில்
தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும்
இலமே,
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே.
(புறம்: 192)
["All places are ours,all our kith
and kin;
Good and evil come,not caused by others;
Pain and relief are brought likewise,not
by others;
Dying is not new;nor living gave us joy;
Misery we hated out. As in the flood,
Caused by clouds that poured in torrents
On a mountain top with lightning flash.
A raft goes in the direction of the
stream,
So the swarm of lives move onward
In the way of destiny.This we have discerned
From the teachings of sages strong in
wisdom
So we admire not the great;nor scoff at
the churl."
(Purananuru-192)]
"'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல்
நோன்றல்;
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர்
வௌவல்;
'பொறை' எனப்படுவது, போற்றாரை
பொறுத்தல்."
[கலித்தொகை 133]
"Goodness is helping one in
distress;
Support is not deserting one who is
dependent;
Culture is to act in unison with the ways
of the world;
Love is not surrendering ties with one’s
kin;
Wisdom is to ignore the advice of the
ignorant;
Honesty is not to go back on one’s words;
Integrity is to ignore others’ faults;
Justice is awarding punishment
without partiality;
Patience is to suffer the
ill-disposed."
[Kalithogai.]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/ Kandiah
Thillaivinayagalingam ]
No comments:
Post a Comment