[சீரழியும் சமுதாயம்]
உலக அளவில்
நாம் பார்க்கும் பொழுது, இன்று சிரியாவில் ஐஎஸ் ஐஎஸ் [ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய
அரசு / ISIS] அமைப்பினர், ஈராக்
நாட்டில் மிகப் பழைமையான, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைக்ரிஸ் (Tigris) ஆற்றின்
கரையில் உள்ள உலகின் ஒரு மிகப் பெரும் சாம் ராஜ்யமாகத் திகழ்ந்த புராதன அசிரியன் [Assyrian] நகரான
நிம்ருட்டை [Nimrud] ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். பழமை வாய்ந்த வரலாற்று
நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் கலைப் பொருட்கள, அழித்தும்
எரித்தும் வரலாற்றை இன்று அழிப்பதை காண்கிறோம். இப்படி எத்தனையோ வரலாற்று அழைப்புகள்
இந்தியா உட்பட இன்று நடை பெறுகின்றன. உண்மையான வரலாற்றை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அது
திருப்ப திருப்ப நினைவூட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமலும் அவதியுறும் ஒரு
இனத்தின், ஒரு குழுவின் செயல் பாடு இதுவாகும். எமது அரசியல் மற்றும்
சமூக போராட்டம் , கட்டாயம் வரலாற்றை அளிக்கக் கூடாது, அது
நல்லதோ கூடாதோ அவை வரலாறே, நாம் அவ்வாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டுமே ஒழிய
அவ்வற்றை அழித்து வரலாற்றை மாற்றி தமக்கு சார்பாக பொய்யாக ,உண்மைக்கு
புறம்பாக எழுதக் கூடாது. ஆனால் இதைத் தான் இலங்கை, இந்தியா அரசு
தமிழருக்கு எதிராக செய்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக, ஆரிய
கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க
இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்
நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி
அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு
செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக் கட்டை அல்லது இழுத்
தடிப்பு செய்யும் இந்தியா மத்திய அரசின் செயலை கூறலாம்.
இராணுவ
வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு ஒரு படையெடுப்பாளர்கள் அல்லது ஆக்கிரமிப்பாளர்கள்
அல்லது ஒரு பெருமப்பான்மையாளர்களைக் கொண்ட அரசாங்கம், மற்றவர்களின்
அல்லது சிறுபான்மையாளர்களின் உண்மையான வரலாற்றை மாற்றுகிறார்கள் அல்லது
அழிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்கள். தார்மீக நோக்கத்திற்காக [some sense of moral purpose] நாம் பண்டைய நாகரிகம் மற்றும் இராச்சியம் இவைகளின் வரலாற்று
சாட்சிகளாக மட்டும் இன்றி, கலாச்சார சாதனைகளாகவும்
இருந்தவற்றை அழிக்கிறோம் என்று பெருமையுடன் உரிமை கோரும் அமைப்புகளில், ஈராக்
மற்றும் சிரிய இஸ்லாமிய அரசசை[ ஐஎஸ்ஐஎஸ் / ISIS.]
முதல் தீவிர குழு [radical
group] என்று நாம்
கூறமுடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் / தலிபான் தீவிரவாதிகள் [Taleban], ஆறாம்
நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த உலகப் புகழ் பெற்ற 1,400
ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட 100 அடி உயரமுள்ள பாமியன் புத்தர் சிலைகளை [Buddhas of Bamyan] இதே காரணங்களுக்காக உடைத்து தள்ளினார்கள்.
ஆதிச்சநல்லூர்
தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால்
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வுவான கீழடி அகழாய்வின்
அகழ்ந்த கலைப்பொருட்கள் ஏன் தமிழ் நாட்டை விட்டு வெளியே பெங்களூருக்கு கொண்டு
போனார்கள் என்பது இன்று ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. இதனால், அவர்கள்
தமிழ் நாட்டு வரலாற்றை அழிக்க முயல்கிறார்களா என்று கேட்கவும் தோன்றுகிறது.
மேலும் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது
தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக
வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு
மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அரசியல் காரணமே இவைக்கு காரணம் போல் தெரிகிறது. உதாரணமாக,கண்டு
பிடிப்புகளை வெளியிடாமையும் , அங்கு கண்டுபிடிக்கப் பட்ட கலை பொருட்கள் வெளியிடாத
தகவல்களை வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக கிடைத்த தகவலும், மற்றும்
எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை
உண்மையில் எழுதவேண்டும், ஆனால் அதை மாற்றுவதும் அரசியல் காரணம் இருப்பதை எடுத்து
காட்டுகிறது. எது எவ்வாறாயினும் அதைக் கண்டு பிடித்த தொல்துறை ஆய்வாளர் திரு
அமரநாத் ராமதிருஷ்ணன் மீண்டும் தமிழகத்துக்கே மாற்றி கீழடிப் பணியை தொடர மதுரை
உயர் நீதி மன்ற அண்மைய அறிவிப்பு, நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மட்டும் அல்ல இன்று
" கீழடி நம் தாய்மடி ", என சிகாகோ வில் ஜூலை 2019 நடந்த 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் முழங்கியதும் குறிப்பிடத் தக்கது. எப்படி
சுமேரியாவிலோ அல்லது சிந்து வெளியிலேயே நதி நெடுகிலும் ஆற்றங்கரையில் பெரியதும்
சிறிதுமாக நகரங்களை உருவாக்கிய அதே பாணியிலேயே வைகை நதியெங்கும் நகரங்களை இது
உருவாக்கியது இன்று வெளிச்சத்திற்கு வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கை, இந்தியா
பெரும்பான்மையாளர்களின் ஆட்சியில் உள்ளது எனவே அங்கு சிறுபான்மையினரின் வரலாற்று
பெருமைகளை ஏற்பதில் அவர்களுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படுகிறது. சிறுபான்மையினர்
அங்கு தமது தொன்மையை சாட்சிகளுடன் கட்டுவது அவர்களின் நோக்கங்களுக்கு இடைஞ்சலாக
உள்ளது. அதனால் அவர்கள் இதை விரும்ப வில்லை. எந்த மொழியும் கலாச்சாரமும், பெரும்பாலானோர்
பேசும் மொழியிலும் அவர்களின் வரலாற்றிலும் தொன்மையாக [antiquity] காணப்பட்டு அவர்களுக்கு சவால் விடுவது அவர்களால்
பொறுக்கமுடியாது. எனவே படிப்படியாக அதை
அழிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இவைதான் வரலாற்று அழிப்பிற்கான முதன்மை
காரணமாகும்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 12 தொடரும்
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
No comments:
Post a Comment