உலக சுகாதார நிலையம்
இது பற்றி கண்காணித்து கொண்டு நாளாந்தம் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
கொரோனா வைரஸ்கள் ஒரு
பெரிய குடும்ப நோய்க் கிருமிகளாகும்.. அவை விலங்குகள் அல்லது மனிதர்களுக்கு நோயை
ஏற்படுத்தும்.
மனிதர்களில்,
கொரோனா வைரஸ்கள் கடுமையான சுவாச நோய் தொற்றுக்களை
ஏற்படுத்தும்.
இதன் பொதுவான
அறிகுறிகள், காய்ச்சல்,
சோர்வு மற்றும் வறட்டு இருமல். வலி மற்றும் நாசி நெரிசல்,
மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், வயிற்றுப்போக்கு என்பன ஆகும்.
சுமார் 80% மான நோய் கண்ட
மக்கள் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள். 6 பேரில் 1 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மூச்சு விடுவதில் சிரமத்தை
அடைகிறார்கள். வயதானவர்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் அல்லது நீரிழிவு போன்ற மருத்துவ
பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த
நோயால் சுமார் 2% பேர்
இறந்து விட்டனர்.
எப்படிப் பரவுகிறது?
நோய் கண்ட ஒருவரில்
இருந்து இன்னொருவருக்கு இது பரவுகிறது. இருமல் அல்லது சுவாசிக்கும்போது நோயாளி
மூக்கு அல்லது வாயிலிருந்து சிதறும் சிறிய
துளிகளால் இந்த நோய் பரவுகிறது. இந்த துளிகள் நபரைச் சுற்றியுள்ள பொருள்கள் மற்றும்
பரப்புகளில் படிந்து . மற்றவர்கள் தொட்டு, பின்னர் அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலம் பீடிக்கிறது.
இது காற்று வழியாக
பரவ மாட்டாது.
தப்புவதற்கான வழிமுறைகள்?
* கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுதல் அல்லது ஆல்கஹால்
சார்ந்த கை திரவங்களினால் கழுவுதல்.
* இருமல் அல்லது தும்மும் எவருக்கும் இடையில் குறைந்தது 1 மீட்டர் தூரத்தை பராமரித்தல்.
* கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்த்தல்.
* எல்லோரும் நல்ல சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுதல்.
* இருமல் அல்லது தும்மும்போது வளைந்த முழங்கை அல்லது ரிசியு
வினால் முற்றாக மூடி, அதை அப்புறப் படுத்தல்.
தடுப்பூசி ஏதாவது?
இன்றுவரை,
தடுக்க அல்லது சிகிச்சையளிக்க மருந்தொன்றும் இல்லை
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள்
அறிகுறிகளைப் போக்க கவனிப்பைப் பெற வேண்டும். கடுமையான நோய் உள்ளவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். பெரும்பாலான நோயாளிகள் மேலான
கவனிப்புகளால் குணமடைகிறார்கள்.
உடல்நிலை
சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு காய்ச்சல்,
இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால்,
மருத்துவ சிகிச்சை பெற முன்கூட்டியே அழைக்கவும்.
வருமுன் காப்போம்!
இப்பெரும் பிணியில் இருந்து தப்பிக் கொள்வோம்!
⇶⇶⇶⇶✍செ.சந்திரகாசன்⬱⬱⬱⬱
0 comments:
Post a Comment