"தாலி கட்டி
பொட்டு இட்டு
தாரம்
என்று ஊருக்கு கூறி
தானும் தன்
சுகத்திற்கு மட்டும்
தாகம் தீர
உடல் தீண்டுகிறான்!"
"காதல்
இல்லை கனிவும் இல்லை
காத்தரமான
ஒரு வாழ்வும் இல்லை
காலம்
முழுதும் நான் பணிசெய்து
காமம்
தணிக்கும் உடல் மட்டுமே!"
"அன்பு
வேண்டி உள்ளம் போராடுகிறது
அணைப்பு
தேடி உடலும் போராடுகிறது
அயர்ந்து
தூங்க கண்ணும் போராடுகிறது
அலுப்பு
தட்டி உயிரும் போராடுகிறது!"
"குடும்ப
கண்ணியத்தை மனதில் நிறுத்தி
குழந்தை
குட்டிகளை கவனத்தில் எடுத்து
குதூகலம்
மறந்து மௌனமாய் சஞ்சரித்து
குற்றுயிராய்
இன்று காதலுக்கு போராடுகிறேன்!"
✍[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment