இந்த புராணங்கள், இதிகாசங்கள் என்பன படிக்கும் போதும், அறிந்துகொள்ள முற்படும் போதும் மிக சுவாரசியமாக தான் இருக்கும். ஆனால் பெரும்பாலானவை பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது பிம்பங்களாய் உடைந்து போய்விடும். அப்படி ஒன்று என் நினைவுகளில்....
அநேகரை
போல் தான்,
எனக்கும்
சின்ன வயசில பக்தி,
புராண
படங்கள் பார்க்கிறதென்றால், புராண கதைகள் வாசிக்கிறதென்றால் அவ்வளவு பிரியம்.. யாழிலே மின்சாரம் வந்துவிட்டது,
கூடவே தொலைக்காட்சிகள் பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.
அப்போது
இந்தியாவின் தூர்தர்ஷன்
அலைவரிசை யாழிலே தெளிவாக வேலை
செய்யும். அதிலே சிறீ கிஷ்ணா
என்று ஒரு நாடகம் ஞாயிற்று கிழமைகளிலே நண்பகலில் ஒளிபரப்புவார்கள்.. அந்த நாடகத்தின் தீவிர விசிறியாக இருந்தவர்களில் நானும்
ஒருவன்.. நாடகம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தொலைக்காட்சி
முன் சென்று குந்திவிடுவேன்.. அந்த நாடகத்தில்
நடப்பதெல்லாம் எதோ ஒரு
காலத்தில் நடந்ததாக அசைக்க முடியாத
நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.
அதே போல
ராமாயணம், மகாபாரதம், சிறி
ஹனுமான் போன்ற புராண கதை புத்தகங்களை புரட்டி புரட்டியே தாள்கள் கிழிந்துவிடும்
அளவுக்கு அவற்றின் வாசிப்பு
மீது ஈர்ப்பு..
இவையெல்லாம்
பெரிதாக விவரம் தெரியாத வயசில் தான். ஆனால் சிறிது காலத்துக்கு பின்னர் இந்த புராண
கதைகள் பற்றி , சிந்திக்கும்
போதும், அவற்றை
நடைமுறையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் போதும் மிகவும்
ஏமாற்றமாக இருக்கும்.. "எப்பூடி
எல்லாம் ஏமாற்துறாங்களே.." என்பது
போன்ற உணர்வு..
அது போன்ற உணர்வுகளில் ஒன்று விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றில் மேல் எழுந்து
சிறு வயசிலே என்னை குழம்ப
வைத்தது. மீண்டும் இன்று இணையத்தில் அந்த கதையை வாசித்ததில் எழுத வேண்டும்
என்று தோன்றிச்சு.. நியாயத்தை வாசிப்பவர்கள் சொல்லுங்களேன்...!
பன்றி
தவிர்ந்து ஏனையவற்றால் சாகா வரம்
பெற்ற அரக்கன் தன் சக்தியால் பூமியை
காவி சென்று கடலுக்கடியில் ஒழித்து விடுவான்... பின் விஸ்ணு "வாரக
அவதாரம்" எடுத்து சென்று அரக்கனை
அழித்து பூமியை மீட்டு வருவார் என்பது
தான் கதையின் கரு .. இதை தொலைக்காட்சி தொடரிலே சர்வ சாதாரணமா, அரக்கன் கையிலே பூமியை காவி
காற்றில் மிதந்து சென்று
கடலுக்குள் ஒழிப்பதாக காட்டுவார்கள்..
இது
எவ்வளவு பெரிய முட்டாள் தனமான ஒரு
கற்பனை.
சரி, தன் சக்தியால் பூமியை காவுகிறான்
என்று வைப்போம்,
ஆனால்
,பூமியை
காவி கடலுக்குள் ஒழிப்பதென்பது .........?
அப்படியெனில், கடல் என்பது பூமி தவிர்ந்த பகுதியா?
என்னே
ஒரு லாஜிக்கே இல்லாத
ஏமாற்றுத்தனமான கருத்து.. ! ஆனால்
இது மட்டுமல்லாது,
ஒரு
படி மேலே
சென்று, வாரக அவதாரம் எடுத்த விஸ்ணு
ஆயிரம் வருடங்களாக கடலுக்கடியிலே அந்த அரக்கனுடன் போரிட்டு பூமியை
மீட்டு வருவாராம்..! சரி, அப்படி
என்றால் ஆயிரம் வருடங்களாக நீருக்குள் கிடந்த மக்கள்
நிலை.. அவனவன் ஒரு அஞ்சு நிமிஷம்
நீருக்க மூழ்கி கிடந்தாலே செத்துடுவான்
, இதில ஆயிரம் வருஷம் கடலுக்கடியிலயாம்...!!
இதையெல்லாம் நாமும் இது
வரை நம்பிக்கிட்டு தானே
இருக்கோம்.. இந்த சம்பவத்தை ஒட்டி "வாரகா ஜயந்தி" என்ற
விரதம் கூட நடைமுறையில் இருக்கிறது என்றால் பாருங்களேன்.
ஆனால் நம்மவர்கள் இப்படிப்பட்ட புராண கதைகளின் உண்மை
தன்மை / நம்பக தன்மை பற்றி ஆராய்ந்தோ, இல்லை சிந்தித்து
பார்ப்பதோ கிடையாது. முன்னோர்கள் செய்தார்கள் அதனால்
நாமும் செய்வோம் இல்லையெனில், தெய்வ
குற்றமாகிவிடும் என்ற மனநிலை
தான் இதற்கு அடிப்படையாக
இருக்குமோ...!
நன்றி கந்தசாமி
No comments:
Post a Comment