ஜெர்மன் சனநாயகக் குடியரசு
ஜெர்மனி (அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².
ஜி8, ஜி4, நேட்டோ, ஐக்கிய நாடுகள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஒரு உறுப்பு நாடாகும். 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது.
ஜெர்மனி கிழக்கு-ஜெர்மனி மற்றும் மேற்கு-ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது.
கிழக்கு ஜெர்மனி) 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அக்டோபர் 7, 1949 இல் சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் இதன் தலைநகராக இருந்தது.
1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். நேட்டோப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி பனிப்போர் எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த பேர்லின் சுவர் நவம்பர் 9, 1989 இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் மார்ச் 18, 1990 இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3, 1990இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.
1989 இல் சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.
ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
நாட்டின் தேசிய கீதமாக” Auferstanden aus Ruinen” பண் இசைக்கப்படுகிறது.
ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்தக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும். கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்தக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், பாலற்றது எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - பொதுப்பால்) எனும் அடை மொழி சேர்க்கப்படுகின்றது.
ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 865 கி.மீ. நீளம் கொண்டது. எல்ப மற்றும் டணூப ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.
செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், சீஸ், பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண்வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை Abendbrot (இரவுப்பாண்) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை பட்டர், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், சீஸ் போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிளாஸ் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது.
வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு பிரபலம். இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.
ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது. ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர்.
2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் பேருக்கு 470 தம்பதிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ள 230 தம்பதிகள் விவாக ரத்துப் பெற்றுள்ளனர் என அரச புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது .
ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன. பல நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்கிறார்கள்.
ஏறக்குறைய 60,000 தமிழர்கள் யேர்மனியில் வசிக்கின்றார்கள். பெரும்பாலானவர்கள் 1983 க்கு பின்பு இலங்கை இனப்பிரச்சினை காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.
யேர்மனியில் முதன்முதலாக 1990 இல் தமிழ்ப்பாடசாலை தொடங்கப் பெற்றது. தற்சமயம் யேர்மனியில் 133 தமிழ்ப்பாடசாலை, தமிழாலயம் என்ற பெயரில் இயங்குகின்றன.
⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃⭃
No comments:
Post a Comment