எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [நாகப்பட்டினம்]போலாகுமா ?








நாகப்பட்டினம் (Nagapattinam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது.

சொற்பிறப்பு
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது, இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. தொலெமி என்பவர் நாகப்பட்டினத்தை நிகாம் என்று குறிப்பிடுகிறார், மேலும் இது பண்டைய தமிழ்நாட்டின் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் "நிகாமா" அல்லது "நிகாம்" என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது. நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் போர்த்துகீசியர்களாலும் "கோரமண்டல் நகரம்" என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான அப்பரும், திருநானசம்பந்தரும், தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை "நாகை" என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் "நாகை" என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.

வரலாறு
அண்டை துறைமுகமான காவிரிப்பூம்பட்டினம், சங்ககாலத்தில் சோழ இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது பட்டினப் பாலை போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது.
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டினம்" -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்நகரின் முக்கிய தொழில் என்பது வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.
இந்நகரில் விவசாயமும் செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.

பௌத்த மையம்
நாகப்பட்டினம் நகரில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மிய வரலாற்று எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு அசோகரால் கட்டப்பட்ட புத்த விகாரை இருந்ததற்கான ஆதாரமாக இது விளங்குகிறது.
நாகப்பட்டினம் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் பௌத்த மையமாக இருந்தது. அக்கால கட்டத்தில் அங்கு தாது கோபுரம் இருந்தது. ஆனால் பின் வந்த காலத்தில் இங்கிருந்து அது மறைந்துவிட்டது. ஆனால் மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் தழைத்தது. (எச்.பி.ராய், தி வின்டஸ் ஆப் சேஞ்ச், தில்லி 1994, பக்கம். 142) 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் ராஜராஜ சோழனின் உதவியுடன் சூடாமணி விகாரையை சாவக மன்னனான ஸ்ரீவிஜய சூளாமணிவர்மன் புதுப்பித்துக் கட்டினார். குலோத்துங்க சோழனின் "அணிமங்கலம் செப்பேட்டில்" புத்தத் துறவியான “காசிப தேரர்” நாகநாட்டு புத்தத் துறவிகளின் உதவியுடன் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயிலை புதுப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த "நாகர் அன்னம் விகாரை" பிற்காலத்தில் நாகனவிகாரை என அழைக்கப்பட்டது. இங்கு பௌத்தம் 15 ஆம் நூற்றாண்டுவரை தழைத்தோங்கி இருந்தது, விகாரையின் கட்டடங்கள் 18 ஆம் நூற்றாண்டுவரை இருந்தன.

வானூர்தி போக்குவரத்து
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
காயாரோகணேசுவரர் கோயில் மற்றும் சவுந்தரராஜப்பெருமாள் கோயில் இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.
நாகப்பட்டினத்தில் நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகிய நகரங்கள் சுற்றுலா தளமாக விளங்குகிறது.





குறிப்பு: ஒவ்வொரு மாதமும் ஒருநாள் பதிவாக உங்கள் ஊரும் இடம்பெறலாம். உங்கள் ஊர் தொடர்பான கட்டுரையினை s.manuventhan@hotmial.com க்கு அனுப்பி வையுங்கள். நன்றி.


No comments:

Post a Comment