மாற்றங்கள் என்றும் மாறாதவை


"காதல் தந்த பார்வையும் மங்கும்
காமம் தந்த உடலும் கூனும்
காடுகள் அழிந்து நகரங்கள் தோன்றும்
காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது"

"காலியான குளமும் நிரம்பி வடியும்
காசுகள் தொலைந்து வறுமை வாட்டும்
காவலர்கள் கூட கொள்ளை அடிப்பர்
காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது"

"உற்சாகம் தரும் வெற்றியும் தோல்வியாகும்
அற்புதமான உடலும் கருகிப் போகும்
முற்றத்து துளசியும் வெறிச் சோடும்
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது"

"ஏற்றமும் இறக்கமும் மனதை மாற்றும்
ஒற்றுமை குலைத்து பகையை கூட்டும்
குற்றம் இழைத்தவனும் அரசன் ஆவான்
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது"


✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


No comments:

Post a Comment