உங்களைப்போல ஒருவர் ,
உலகில் ஒருவர் கூட
இருக்கமுடியாது.
உலகில் ஒருவர் கூட
இருக்கமுடியாது.
குழந்தைகளை
வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்களுக்குத் தாங்களே அழுத்தத்தினை
வரவழைத்துக்கொள்கிறார்கள். இந்த அழுத்தம் எதனால் என்றால், நீங்கள்
முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு உயிர்களை ஒப்பிட்டுப்
பார்க்கிறீர்கள். உங்கள் குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது. தனித்தன்மை வாய்ந்த
அக்குழந்தையினை ஒப்பிட்டுப் பேசுவது உங்கள் தவறான கண்ணோட்டமே!
உங்கள்
குழந்தையை அவரின் அறிவு வளர்ச்சியை கருத்தில் கொண்டா பாடசாலைக்கு அனுப்புகிறீர்கள்? அவர்கள்
படித்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று கருதுவது
துரதிஷ்டமனதாகும்.
அறிவுக்கான
தாகம் குழந்தைக்கு தூண்டி விடப்பட்டால் அவன் கற்பதை யாராலும் தடுத்து விட
முடியாது. ஆனால் அவ் ஆர்வத்தை துண்டாமல் நீங்கள் அதனை அடக்குகிறீர்கள். ஏனெனில்
உங்களைப் பொறுத்தவரையில் பணமும், சமுக அந்தஸ்த்தும் நோக்கம். அதனை அடைவதற்காக நீங்கள்
கொடுக்கும் நிர்ப்பந்தங்கள் பிள்ளைகளை சோக நிலைக்குத்தள்ளிவிடுகின்றன.
உங்கள்
குழந்தை எப்படியாவது எல்லாப்பாடங்களிலும் 100 புள்ளிகள் எடுக்கவேண்டும் என்பதே உங்கள் அவா. அவர்கள்
கல்வியிலோ, அறிவு வளர்ச்சியிலோ உங்களுக்கு அக்கறை இல்லை. பிள்ளை
உச்சாணியில் அமரவேண்டும் என்பதே உங்கள் நோக்கம். ஆனால் எல்லோரும் எக்காலத்திலும் உச்சத்தில்
இருந்துவிட முடியாது. எனவே இந்த நோய்த்தன்மை மாறவேண்டும்.
பல்கலைக்
கழக சான்றிதழ்கள் உங்கள் புள்ளிகளால் கிடைக்கலாம்.
அப்புள்ளிகள்
எல்லோருக்குமே வாழ்க்கையில் வெற்றிபெற உதவிடாது. கல்வியில் கற்கவேண்டியவை
இரண்டு. முதலாவது ஒருமனிதன் சம்பாதிப்பதுக்கு தயார் செய்வது எப்படி? இரண்டாவது
இவ்வுலகில் வழ்வதுக்கு தன்னை தயார் செய்வது எப்படி? என்பன. நாம் குழந்தையை
இந்த நவீன உலகில் வாழ்வதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். அதே நேரத்தில் புதுமை
என்கிற பெயரில் நடக்கும் முட்டாள் தனத்திலும் அவன் சிக்கி விடப்படாது.
எந்தவித
கருத்துக்களும் திணிக்கப்படாமல் இருந்தால் ஒரு குழந்தை தனக்குத் தேவையான கல்வியை
தானே தானே தெரிவு செய்யும்போது. அக்குழந்தை தனது நிலையினை உள்நோக்கிப்
பார்கின்றபோது அதாவது தாமாகவே சிந்திகின்றபோது அவனுக்குள் நிகழும் அனுபவம்
வாழ்க்கைகல்வியின் ஆரம்பநிலை. சுய
புத்திசாலித்தனத்துடன் வாழ ஆரம்பித்தாலே ஆனந்தமாய் மாறுவது இயல்பாய் மாறுவது
அவனுக்குள் நிகழும்.ஆனந்தமாய் மாறுவதுதான் இறுதி இலக்கு இல்லையா?
--சற்குரு வாசுதேவ்.
No comments:
Post a Comment