இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது. கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.
🧡அப்பாவிற்கு_அழத்தெரியாது!!
❤குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
💛பிள்ளைகளின் பசியாற்ற
ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
#ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!
💙 மனைவியை நெஞ்சில்
சுமந்து!
💜 பிள்ளைகளை தோளில்
சுமந்து!
🖤 குடும்ப
பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
#நாம்_அவரை_கல்லெனவே #நினைத்துவிட்டோம்!
💗அம்மாவிடம்
ஒட்டிக்கொள்வோம்!
💓 அப்பாவிடம் எட்டி
நிற்போம்!
💖முகம் கொடுத்து பேசிய
வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில்
தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!தள்ளி நின்று உணர்ச்சி
வெள்ளத்தில்
#ததும்பும்_ஜீவன்_அது!
*⃣நாம் திண்ணும் சோறும்!
❎உடுத்தும் உடையும்!
❎படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!அம்மாவின் பாசத்தை
அங்கலாய்க்கும் நாம்!
#அப்பாவின்_பாசத்தை_உணரக்கூட #இல்லையோ!
🗣நமக்கு மீசை முளைத்தால்
அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன்
ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்…
#அப்பா_எப்போதுமே_இருப்பார்!
💝 அப்பாவிற்கு
பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
💟அப்பாவிற்கு கொஞ்ச
தெரியாது!
🚫 அப்பாவிற்கு
போலியாய் இருக்க தெரியாது!
❌அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
✅அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள
தெரியாது!
#அந்த_பைத்தியத்திற்கு
#அழவும்_தெரியாது!
🐏வளர்த்த கெடா மாரில்
பாய்ந்த போதும்!
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
#நம்_சந்தோசத்திற்காகவே_எதையும் #தாங்கும்_ஆன்மா_ அவர்!
💞பாசமோ!
✝மன்னிப்போ!
😢 அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!
😭 ஒருவேளை உங்கள்
நண்பனின் அப்பா
மரணமோ!
😭 உங்கள் அப்பா
வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!
😓உங்களை புரட்டி போட்டு!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிடும்போது!
😁வீட்டில் அப்பா…
சிரித்துக்கொண்டிருக்கலாம்…
புகைப்படத்தில்!!
✏ ✏ ✏ ✏ ✏Sri Kanaka✏ ✏ ✏ ✏ ✏
0 comments:
Post a Comment