[மனைவியை, தாயை இழந்து துடிக்கும் ஒரு குடும்பத்தின் ஒப்பாரி]
"திமிராய் நீ நடப்பாய்,
தினமும் உன்னைக்
காண்போம்
இல்லை எனக்கூறாய்,
இருப்பதை எமக்கு
அளித்தாய்
வாழ்வின் பொருளை,
உன்னில் நாம் கண்டோம்
வில்லங்கத்தில் இருப்பவனுக்கு,
நீ ஒரு கடவுள்
நாவிற்கு இனிய சுவையுடன்,
தினமும்
உணவு தந்தாய்
யகத்தில் வித்தாகி, மலராகி,
காயாகி, கனியாகி,
விதையானாய்
கண்டதையும் கற்று ப்பண்டிதையாகிய
ஒரு பல்கலைக்கழகமே
லிங்கவழிபாடு பின் விநாயகர்,
முருகன்
என்றும் முடியவில்லை
இங்கிதமாய் பழகிடுவாய்,
இன்று உன்னை எங்கு
காண்போம்
கண்டதும் கவர்ந்திடுவாய்,
கலகலப்பாய் பழகிடுவாய்
ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று,
பொட்டாய் வைத்துவிட்டாய்
இருளிற்கு ஒளிவிளக்காய்,
இருண்டாருக்கு மகா
காளியாய்,
ராகத்தில் மோகனமாய்,
ராமனின் சீதையாய்
சாதனையில் வெற்றி மகளாய்,
சாந்தோர்க்கு உறுதுணையாய்
இத்தனைக்கும் ஒரு வளாய்
இறுமாப்பாய் இருந்தாயே
திருடியது உன்னை யாரோ?
தீயில் சங்கமித்தது ஏனோ?"
✒️[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
0 comments:
Post a Comment