சார்… ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே… என்ன ஆச்சு?
இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!
…………………………………………………………….
டொக்ரர்:உப்பு, உரப்பு, காரமெல்லாம் கூடாது. அரைவேக்காடாவே சாப்பிடணும்...!
நோயாளி:"கல்யாணமானதுலேருந்து அப்படித்தானே டாக்டர் சாப்பிட்டு வாரேன்...!
…………………………………………………….
நர்சு:ஏன் டாக்டர்... போஸ்ட் மார்ட்டமாவது ஒழுங்கா பண்ணக்கூடாதா...?
டொக்ரர்:ஏன் என்னாச்சு...?
நர்சு:சரியா உயிர் போகல போலேருக்கு. பாருங்க... நீங்க போஸ்ட் மார்ட்டம் பண்ணின பேஷண்ட் எழுந்து நடந்து போறதை...?
……………………………………………………………………..
மனைவி:என்னங்க!நாங்க செத்துட்டா husband&wife தனியாத் தான் இருக்கவேனுமாமே!!!
கணவன்:அதனாலதாண்டி அது சொர்க்கம் எண்டு சொல்லுறாங்கள் .
மனைவி:....???????
………………………………………………………………………
நோயாளி: டாக்டர்.வாய் நாறுது.
டாக்டர்:எப்போதிலிருந்து?
நோயாளி:நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து
………………………………………………………………….
.மாணவன்:ஒன்றும் தெரியாத எனக்கு எக்ஸாம் நேரம் கேள்விப் பேப்பரைத்தாறங்கள்.எல்லாமே தெரிஞ்ச வாத்தியாரிட்டை answer பேப்பரைக் குடுக்கிறாங்கள்.என்ன கொடுமை சார் இது?
……………………………………………………………………….
மகள்:மம்மி,எனக்குத் தம்பிப் பாப்பா வேணும்.
அம்மா: உங்க டாடி துபாய் போயிருக்கிறார்.வந்த உடனே யோசிப்போம்.
மகள்:நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் குடுப்போம் மம்மி.
அம்மா:….!!!!!
……………………………………………………………………….
நோயாளி: டாக்டர்.நீங்கள் எனக்கு ஒரு காரியம் பண்ணவேணும்.
டாக்டர்:சொறி,ஒப்பிரேசன் மட்டும் தான் நான் பண்ணுவன்.காரியம் நீங்க ஐயரை வைச்சுத் தான் செய்யவேணும்.
……………………………………………….
மனைவி:என்னங்க..திடீரென்று பூகம்பம் வந்துதுங்கஅப்பிடியே நிலத்திலை விழுந்திட்டேன்.
கணவன்:நல்லா யோசிச்சுப் பாரு..பூகம்பம் வந்த பிறகு நீ நிலத்தில விழுந்தியா?இல்லை,நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துதா?
……………………………………
டாக்டர்:உங்களுக்கு எப்போதிலிருந்து கை,கால் நடுக்கம் இருக்கிறது?
நோயாளி:என்ரை கலியாண நாளை மறந்திட்டன் டாக்டர்.
……………………………………………………………….
நோயாளி:ஒப்பிரேசன் பண்ணினா பிழைப்பேனா டாக்டர்?
டாக்டர்:நான் பிழைக்கிறதே ஒப்பிரேசன் பண்ணித்தானே!
………………………………………………………………………….
நோயாளி:வயித்துவலி தாங்க முடியலை டாக்டர். தற்கொலை பண்ணவேணும் போலை இருக்கு.
டாக்டர்:அதுக்குத்தான் ஒப்பறேசனுக்கு தேதி குறிச்சாச்சே.அதுக்குள்ளே ஏன் அவசரப்படுறீங்க.
will be in 2018/august/29 wednesday
ReplyDelete