"இருபது இருபது ஒரு பெண்ணாகி
தனக்கு தானே
நிகரென கூக்குரலிட்டு
இருபது பத்தொன்பதை எட்டி உதைத்து
தம்மை அழகியென
எமக்கு காட்டுகிறாள் !"
"அருகே வந்து எம்மை ஆரத்தழுவி
தன் இதழால்
முத்தம் பகிர்ந்து
கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில்
தலை காட்டும் விண்மீண் தானாம் !"
"சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும்
பெருத்த
மார்புடனும் நீண்ட கழுத்துடனும்
அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் .
பெட்டி
பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"
"ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும்
பெரிய பட்டை
சுற்றிய இடையுடனும்
நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும்
பெண்டு வந்து
போதை அள்ளிவீசுகிறாள் !"
"தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து
இருபது பத்தொன்பதை
குறை கூறி
பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று
இறுமாப்புடன்
எமக்கு சத்தியம் செய்கிறாள் !"
"என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ
இன்பம் பொங்கி
ஒற்றுமை ஒங்க
தன் நலமற்ற தலைவர்கள் தந்து
இருளை நீக்கி
ஒளியை தருவாளாம் !"
"மானிடர் செழிக்க மலரும் ஆண்டே
நம்பிக்கை
விதைத்து பேதம் ஒழித்து
பனி விலத்தி துணிவு தந்து
எம்மை காத்து
அருள் புரியாயோ !"
"கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு
தும்பையும்
கயிறாக்கி பிடித்து எழும்ப
இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென
எம்
உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment