அருமையான சுவையில் ஓட்ஸை, மசாலா பொருட்கள் சேர்த்து ஓட்ஸ் மசாலா கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு, தட்டு கொண்டு மூடி வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.
ஓட்ஸானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கிளறி இறக்கி, இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஓட்ஸ் மசாலா கஞ்சி ரெடி!
📠📠📠📠தகவல்: கயல்விழி,பரந்தாமன்
0 comments:
Post a Comment