ஆன்மீகம்-வாழ்க்கையில்..

வாழ்க்கையில்………

பிறருக்குத் துன்பம் கொடுத்து அதில் இன்பம் காண்பது மிருக இயல்புபடைத்தவர்களின் குணம். பிறருக்கு துன்பம் கொடுக்காமல் தனக்கு இன்பம் தேடுவது நாகரீகப் பண்பாடு. பிறருக்கு இன்பம் கொடுத்துத் தானும் இன்பமடைவது தெய்வீகம். தனக்கு துன்பம் நேர்தாலும், பிறருடைய துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பம் தருவது தான் ஆன்மீகம் என்று இந்து தர்ம சாத்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஆன்மீக வாழ்வியலில் தான் இறைவனைக் காணமுடியும்.

ஆன்மீகத்துக்கு ஆரம்ப நிலையென்று எதைக் கூறுவீர்கள்?

நான், எனது என்ற அகந்தையை ஒழிப்பது தான் ஆரம்ப நிலையாகும். ஞானிகள் பேசும் பொழுது “நான்” என்பதற்குப் பதிலாக எப்பொழுதும் “நாங்கள்” என்றே பேசுவார்கள்.

ஆலயத்துக்குச் சென்று இறைவன் எம்மைப் படைத்து வாழவைத்தமைக்கு நன்றி செலுத்தி இறைவனை வணங்க வேண்டுமென்றே ஆன்மீகப் பேரறிஞர்கள் கூறுகின்றார்கள். இதை நாங்கள் காணிக்கை செலுத்துவதன் மூலமாகத்தான் பெறவேண்டு மென்றில்லை. இறைவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் தூய அன்பு ஒன்றை மட்டும்தான்.

கடவுளுக்குக் கொடுத்தால் தருவாரா?

மூலஸ்தானத்தில் இருக்கும் குருக்கள் பூசாரிகளிடம் தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் போக்க கடவுளுக்கு அர்ச்சனை செய்யச் சொல்லி குருக்களிடம் கேட்கிறார்கள்.

குருக்கள் என்ன செய்கிறார்?

வேண்டுகிற மக்களின் வேண்டு கோளை நிறைவேற்றும்படி, கடவுளுக்குப் புரிந்த சமஸ்கிருத மொழியிலேயே அர்ச்சனை செய்கிறார்.

பணக்கஷ்டத்தில் இருந்து மற்ற எல்லா கஷ்டங்களும் தீர்ந்து விடுமா சாமி என்று மக்கள் குருக்களைக் கேட்கிறார்கள்.

பணக் கஷ்டத்தில் இருந்து மற்ற எல்லா கஷ்டங்களும் பஞ்சுபோல பறந்து ஓடிப் போகும் என்று குருக்கள் சொல்லிக் கொண்டே பூசைத் தட்டை மக்களிடம் நீட்டுகிறார்.

குருக்கள் எதற்காகப் பூசைத் தட்டை நீட்டுகிறார்?

மக்களைக் காசு பணம் போடச் சொல்லித்தான் தட்டை நீட்டுகிறார்.

காசு பணத்திலிருந்து, மக்களுக்கு எல்லாம் தரச் சொல்லி கடவுளிடம் சிபாரிசு செய்கிற குருக்கள் வரும் தனக்கு வேண்டிய காசு பணத்தை கடவுளிடமே வாங்கிக் கொள்ளலாமே! மக்களிடம் எதற்காகத் தட்டை நீட்ட வேண்டும்!!

இதிலிருந்து என்ன தெரிகிறது?

மக்கள் பூசைத் தட்டில் பிச்சைப் பணம் போடவில்லை என்றால், பூசாரி குருக்கள் உயிர் வாழ முடியாது என்று தெரிகிறது.

இந்த பூசாரிக்கே கிடையாதது நமக்குக் கிடைக்குமா?என்று நம் தமிழ் மக்கள் இன்று வரைக்கும் நினைத்துப் பார்த்தார்களா?

பூசாரிக்கு கொடுப்பதனை மக்களின் கல்வி,தொழில் வளம்பெறக் கொடுத்தால் அனைவரும் இன்பமடைவர்களே! அவ்வின்பம்தானே தெய்வீகம். அதைவிடுத்து இன்னும் பிராமணர்களை வளர்த்துக் கொண்டிருப்பதலாய பயனென்ன?

அண்மைய செய்தி ஒன்றில் ஆலயம் ஒன்றில் அம்மனுக்கு காவலாக பாம்பு நின்றதாம்.அது பெரும் அற்புதமாம்.

ஆலயம் ஒன்று தான் பாம்புக்கு பாதுகாப்பான இடம் ஏனெனில் அங்கு அடியவர் யாரும் அதனை அடிக்கமாட்டார்கள். அதனால் அவை பயமின்றி உலவும் இடம் அது. அது இருக்க.அம்மனை வணங்கும் பக்தர்கள் பலமிகுந்தவளை பாம்பு காத்ததாக கூறி அவளை அவமதித்ததாகவே எனக்குப் படுகிறது.

சரி ,இது அற்புதமாக இருந்தாலும் இதனால் மக்களுக்கு என்ன பயன்? பயனில்லாத ஒன்றுக்கு மக்கள் வீழ்ந்தடிப்பது அறியாமையே அல்லாது வேறொன்றுமில்லை.
இப்படியாக பலரும் ஏமாந்து ,வாழ்வின் பெரும்பகுதியினை வீணடித்துக்கொண்டிருப்பது ,  மனித வாழ்க்கையின் நோக்கத்தனையே வீணடித்துவிட்ட்து. 

💧s.ஜெயகாந்த்


3 comments:

  1. கடவுளுக்கே தண்ணி காட்டப் பார்க்கிறார்கள்.காசைக் கண்டு மிரள கடவுள் என்ன மனிதனா?

    ReplyDelete
  2. நம்ம கடவுளுக்கு சமஸ்கிருதம் தான் புரியும்; அல்லாவுக்கு அரபு மொழிதான் தெரியும். நமக்கு பூசகர் தரும் பிரசாதத்தால் நன்மை விளையும்; ஆனால் சவூதி அரேபியாவில் ஸம் ஸம் என்ற புனித நீரைக் குடித்ததால் வலிப்பு நோய் மாறியதாம் நமது பெண்ணொருவருக்கு. அதனால் அவர் மதமே மாறிவிட்டாராம். ஏன்தான் உந்த நாடுகளில் தேவை இல்லாமல் ஆஸ்பத்திரிகள், வைத்தியர்கள், வைத்திய உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள் என்று மினைக்கெட வேண்டும்? பேசாமல் அந்தத் தண்ணியை எல்லோருக்கும் ஒரு கரண்டி அளவைக் கொடுத்துவிட்டுப் பேசாமல் இருக்கலாமே? இந்த அறிவிலிகள் எப்போதுதான் ஒழியப்போகின்றார்களோ! பலவீனர்கள்தான் இப்படியான விடயங்களில் மாட்டுப்படுவார்கள்!

    ReplyDelete
  3. மனிதனை மனிதன் வதைப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு அவன் மிருகங்களை விடக் கேவலமான நிலைக்குச் சென்றுவிட் டான் என்பது பல்கலைக் கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகள் எடுத்துக் காட்டுகின்றன. மிருகங்கள் தங்கள் இனத்தினைமட் டுமல்ல ,ஏனைய இனங்களையும் துன்புறுத்துவதில்லை.தமக்கு ஆபத்து,அல்லது உணவு காரணங்களுக்கு மட்டுமே அடுத்தனவற்றை தாக்குகின்றன.

    ReplyDelete