இந்திய , இலங்கை
போன்ற நாடுகளிலிருந்து பெண்கள் மேல் மேற்கொள்ளப்படும் பாலியல் கொடுமைகள்,கொலைகள் தொடர்பான
செய்திகள் நெஞ்சினை நெருடுகின்றன. அதற்குரிய தண்டனைகள் கடுமையாக்கப்படல் அவசியம்
என்ற குரல்களும் பல்வேறு திசைகளிலுமிருந்து ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இப்படியான நிலைமைகளுக்கு காரணம் , இன்றய
திரைப்படங்கள் ,தொலைக்காட்சி
,பல்வேறு
நவீன தொழில்நுட்பங்கள் தரும் தகவல்கள் , போதை தரும் குடிவகை , தூள்வகை, இலைவகை
எனப் பல்வேறு பாவனைகள் நம் நாடுகளில் பெருகியது எனலாம்.
இதில் பல கொலைகளுக்கும்,பாலியல்
சித்திரவதைக்கும் காரணமாக அமைந்திருப்பது தமிழ் திரைப்படங்களும் காரணங் களில்
ஒன்றாயினும் இன்றய அர்த்தமற்ற காதல் கொலைகளுக்கும் ,காதல்
எனும் போர்வையில் பெண்கள் மீதான சித்திரைவதைகளுக்கும் இக்காலத் திரைப்படங்கள்
காரணமாக இருப்பதனை சுட்டிக் காட்டுவதே
இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இன்றய திரைப்படங்களில் ,பெரும்பாலானவை
காதலுக்கு முக்கியம் கொடுக்கும் கதைகளிலேயே தங்கியுள்ளன. அது தவறல்ல. ஆனால் சகல
வகையான திரைப்படங்களும் ,
1. ஆண்
,பெண் இருவரும்
முகத்தை முகம் தற்சயலாகப் பார்த்துவிட் டால் ,
2. இருவரும் எதோ ஒரு விடயத்தில் பேசிப் பழக
நேர்ந்தால் ,
3.பெண்கள் தமக்குள் சிரித்த்ப்பேசி வீதியால்
வரும்போது ,
அச்சிரித்த
முகத்துடன் ஒரு கணம் , தற்செயலாக
ஒரு ஆடவனைப் பார்த்துவிட்டால் ,
அவள் காதலிக்கிறாள் என்ற மாயத் தோற்றத்தினை
இளையோர் மனங்களில் நீண்ட காலமாக விதைத்து வருகிறது. அது இளையோரிடம் ஆழமாகப் பதிய
திரைப்படத்தின் பங்கு நூறு வீதம் என்றே கூறலாம்.
இதனாலேயே
1. ஆண் கொண்ட
ஒரு தலை க் காதலுக்காக பெண்ணை
தொந்தரவு ,பாலியல்
தொல்லை தொடர்ந்து கொலை என்ற நிலைக்கு செல்லல்.
2.பெண்ணின் பலவீனங்களை அறிந்து அவளைச்
சம்மதிக்கச் செய்தல். சம்மதம் -பல நாட்கள் நீடியாமையினால் ஆண் அவன் பெண் மேல்
வன்முறை நிலைக்கு செல்லல்.
3. அவள் சம்மதியாவிடில் கட்டாயத் தாலி கட்டுதல்.
போன்ற அஜாரகங்கள் இன்று எம்மத்தியில் அரக்கத்தனம்
கொண்டு பல பெண்களை சீரழித்ததோடு ,ஆண்கள் தாமும் வாழ்வினை ,எதிர்காலத்தினை
இழந்து சிறை செல்கின்றனர்.
கல்யாண வாழ்வு என்பது ஒருவர் மேல் ஒருவர்
அன்புகொண்டு காதலித்தது உருவாகும் ஒரு குடும்ப பந்தம். ஒருவரின் அன்பினை கட்டாயப்
படுத்தியோ,
அல்லது
பணத்தினை இறைத்தோ பெற்றுவிட முடியாது, அல்லது அன்பு போல் நடித்தாலும்
அவ் வாழ்க்கை நீண்ட நாட்கள் சந்தோசமாக நீடிக்கப்போவதில்லை. அப்படியிருந்தும்
விரும்பாத பெண்ணுக்காக ஏன் ஆண்கள் முட்டி மோதி பெண்களையும் அழித்துத் தம்மையும்
அழித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.
ஆண் ,இன்னொரு
பெண்ணுக்கிடையில் சில கருத்து ஒற்றுமை இருக்கலாம். அது மனித இனத்தில் வழமை.
அதற்காக அப்பெண்ணிடம் காதல் கொள்ளவேண்டும் என்பது கட்டாயமல்ல. அவள் உன்னில் காதல் கொண்டால் ,நீயும்
காதல் கொள்ள வேண்டும் என்பதுவும் கட் டாயமில்லை. காதல் இருவருக்கும் உருவாக்க வேண்டும், காதலை
தொடரமுன் இருவரும் கலந்து ஆராய வேண்டும். ஏனெனில் இதுநீண்ட கால வாழ்க்கைக்கு திட்டமிடும் சந்தர்ப்பம் இது
.வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வம்பு செய்து அழிவதற்கல்ல .விருப்பமில்லாதவளை
திருமணம் செய்து பின் வாழ்வது வாழ்க்கையா? அதுதான் நரகலோகம். ஆண் அல்லது பெண் அவர்களுக்கு பலரில்
விருப்பங்கள் வந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவராக மட்டும் இருந்தாலே
இணைந்து சந்தோசமாக வாழலாம். எனவே காதல்
விருப்பம் இல்லாவிடின் விலகிட வேண்டும்.
அது இருவருக்குமே நல்லது. மனிதாபி மானமும் கூட .
✍செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment