📓[ஏழு
நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என
அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love
you in silence" யின் தமிழாக்கம்
இதுவாகும்.]
"நான்
மௌனமாக நேசிக்கிறேன் உன்னை
மௌனத்தில்
நிராகரிக்க முடியாது என்பதால்
நான்
தனிமையில் காதலிக்கிறேன் உன்னை
தனிமையில்
நான்மட்டுமே சொந்தம் என்பதால்
நான்
தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை
தூரம்
அன்புவலிக்கு கவசம் என்பதால்
நான்
காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை
காற்று
உதடைவிட மென்மை என்பதால்
நான்
கனவில் அணைக்கிறேன் உன்னை
கனவில்
உனக்கு முடிவேயில்லை என்பதால்"
📤தமிழாக்கம் : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
No comments:
Post a Comment