கி பி 336 இல் இருந்து நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டாலும், உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்று, ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டை சேர்ந்த "Jesus refulsit omnium" ("Jesus, light of all the
nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்") ஆகும். என்றாலும் இது இன்று பரவலாக பலரால்
அறியப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. இதன் மூல லத்தீன் பாடலும், அதை தொடர்ந்து, கேவின் கவ்தொர்னின் [Kevin Hawthorne] ஆங்கில மொழிபெயர்ப்பும், என் தமிழ் மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. / Though, Christians have been celebrating Christmas since at least
AD 336, that’s supposedly when the Church first recognised December 25 as
Christmas Day, One of the earliest Latin hymns was "Jesus refulsit
omnium" ("Jesus, light of all the nations" / "உலக
நாடுகளின், அன்பு இரட்சகர்") , by Saint Hilary of Poitiers, around the 4th century (368), But it
isn’t widely-known today. The original poem in Latin are below with English
Translation by Kevin Hawthorne, PhD and Tamil Translation by me.
"Jesus refulsit omnium
Pius redemptor gentium
Totum genus fidelium
Laudes celebret dramatum
Quem stella natum fulgida
Monstrat micans per authera
Magosque duxit praevia
Ipsius ad cunabula
Illi cadentes parvulum
Pannis adorant obsitum
Verum fatentur ut Deum
Munus ferendo
mysticum."
[by Saint Hilary of
Poitiers]
"Jesus, devoted
redeemer of all nations,
has shone forth,
Let the whole family of the
faithful
celebrate the stories
The shining star,
gleaming in the heavens,
makes him known at his
birth and,
going before,
has led the Magi to his
cradle
Falling down,
they adore the tiny baby
hidden in rags,
as they bear witness to the
true God
by bringing a mystical
gift"
[Translation by Kevin Hawthorne,
PhD]
"உலக நாடுகளின், அன்பு இரட்சகர்
உலர்ந்த தொட்டிலில், பிரகாசித்த கதையை
நம்பிக்கை கொண்டு, குடும்பம் ஓங்கிட
தெம்பை கொடுக்கும், கேளுங்கள் அதை
ஆண்டவராகிய மீட்பர், அநிரை தொழுவில்
கண்டு பிடியுங்கள், அவன் தாள் வணங்க
வானத்தில் ஒளிர்ந்து, மினுங்கும் தாரகை
கானத்தில் நிற்பவருக்கும், வழி காட்டிட
மூன்று ஞானிகள், அறிகுறி அறிந்து
அன்பு தெய்வத்தை, தேடி வந்தனர்
காடுமலைகள் தாண்டி, மழலையை பார்த்திட
மேடுபள்ளம் நடந்து, பரிசுடன் வந்தனர்
பாலகன் மேலே, விண்மீன் நிற்க
இலக்கு உணர்ந்து, விழுந்து வணங்கினர்
உண்மை கடவுளை, சாட்சி பகிர்ந்து
மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்."
[மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment