சீனாவின்
விண்வெளி அறிவியல் தொழில் நுட்பக் குழுமத்தின் எதிர்கால முக்கியத் திட்டப்பணிகள்
இக்குழுமத்தின் பொது மேலாளர் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் அறிவித்தார்.
🌜.2020ஆம்
ஆண்டுக்குள்,
சந்திரனில்
இருந்து மாதிரிகளைப் பெற்றுத் திரும்புவது,
🌜.பெய்தோ புவியிடங்காட்டி
அமைப்பின் உலகத் தொகுதியை உருவாக்குவது,
🌜.செவ்வாய்க் கிரகத்தில்
முதல்முறையாகத் தரையிறங்கி ஆராய்வது
முதலிய முக்கியத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள், செவ்வாய்க்
கிரகம் மற்றும் சிறிய கிரகங்களில் மாதிரிகளைப் பெற்றுத் திரும்புவது உள்ளிட்ட
முக்கியத் திட்டப்பணிகள் நனவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், 2021ஆம்
ஆண்டில், செவ்வாய்க்
கிரகத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கி, செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி
ஆய்வு மற்றும் மேற்பரப்பில் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
🌑🌒🌓🌔🌕🌖🌕🌔🌓🌒🌑
0 comments:
Post a Comment