வெள்ளை நிறக் காய்கறிகளின் மகிமை:- வெள்ளை நிற காய்கறி மற்றும் உணவு வகைகள் நல்ல நோய்
எதிர்ப்புச் சக்தி அளிக்கின்றன.
உடலில் உள்ள கொழுப்பு மற்றும்
ரத்த அழுத்த அளவை சீராகப் பராமரிக்கவும் வெள்ளை நிறக் காய்கறிகள் பயன்படுகின்றன.
வெங்காயம், பூண்டு போன்றவற்றில் சல்பைடுகள் நிறைந்திருக்கின்றன.
மேலும் ஆல்லிசின் என்ற பைட்டோ கெமிக்கலையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இவை உடலில் கட்டிகள் ஏற்படாமல்
தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளன. ரத்த கொழுப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு
மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.
வெள்ளை நிறத்திலான முள்ளங்கியில்
நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஈரப்பதம் நிறைந்த இந்த காய் உடலுக்கு குளிர்ச்சியை
அளிக்கிறது. முள்ளங்கி இயற்கையான மலமிளக்கியாகவும் பயன்படும்.
தோலுக்கும், கண்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் ஆற்றல் முள்ளங்கியில்
உண்டு.
சாக்லேட்டுகள் உடலுக்கு நல்லதே!:- 10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த
சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம்
அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
பாரி காலேபாட் என்ற நிறுவனம்
உலகின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந்த நிறுவனம்தான் உணவுப்பொருள்
தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே
ஆகியவற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு
பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க்
சாக்கலேட்டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த ஓட்டம் சீரடைகிறது என்று லேப்
ரிப்போர்ட்டை அளித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் தங்கள்
உணவுப்பொருள் தயாரிப்பு பெக்குகளின் மேல் உரிமை கோரும் மருத்துவ குறிப்புகள்
உண்மைதான் நம்பலாம் என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக
அறிவித்துள்ளது.
மரபான சாக்கலேட் தயாரிப்பு
முறைகளில் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும் பிளாவனால்கள் சிதைக்கப்படும், ஆனால் தங்கள் தயாரிப்பு முறைகளில் இது பாதுகாக்கப்படுவதாக
அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் அதிகாரபூர்வ
விஞ்ஞான ஆய்வுகளிலும் சாக்கலேட் சாப்பிடுவதால் ஆரோக்கிய கேடு ஒன்றுமில்லை என்று
கூறப்பட்டுள்ளதோடு, சில அதிகாரபூர்வ ஆய்வுகளில் சாக்கலேட்டுகளின் மருத்துவ
பயன்களும் கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.
No comments:
Post a Comment