எந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] போலாகுமா?


ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அயலில் மானிப்பாய், நவாலி, தாவடி, வண்ணார்பண்ணை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்
இது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு மையம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை, உரோம மட்கலன்கள், லட்சுமி நாணயம் ஆகியவையைக் கொள்ளலாம். இவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகின்றன.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த புகழ் பெற்றவர்கள்
ஜி. எஸ். வசந்தகுலசிங்கம், புல்லாங்குழல் வித்துவான்
நடிக கலாமணி எஸ் சிலுவைராஜா
கலைஞர் புளுகு சின்னத்துரை
கலைஞர் தம்பித்துரை
கலைஞர் திரவியம்
எஸ். நவம், கலைஞர்
எஸ். அகஸ்தியர், எழுத்தாளர்
ந. செல்வராஜா, நூலகர்
வீகே, ஓவியர்
ரி. ராஜகோபால், வானொலி, மேடை நடிகர்
கிறகோரி (கே) டானியல்(சாகித்திய மண்டல பரிசு பெற்ற நாவலாசிரியர்
மேலும் ஆனைக்கோடடை பற்றியறிய காணொளியினை அழுத்துங்கள்⏬

குறிப்பு: ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் தமிழன் ஊர் தொடர்பான சிறப்புக் கட்டுரை வெளிவரும்.உங்கள் ஊர் பற்றிய பெருமைகளை s.manuventhan@hotmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் வருகைக்கு நன்றி.
🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼

0 comments:

Post a Comment