கவி ஒளி - வண்டியில் போகிறார்


போலிச்சாமிவண்டியில்போறார்

திருட்டு          முழி            முழிக்க

திரும்பி       பார்த்து          பார்த்து

திருநீர்         அள்ளி            தூவி

திருநங்கை   ஒன்றை  தேடுறார்

 

குருவி     சாஸ்திரம்     கூறி 

குருட்டு   நம்பிக்கை    வளர்த்து

குருவாய்   தன்னை     நினைத்து

குருதி       கொதிக்க     குழைகிறார்

 

அருள்      வேண்டி       பத்தினி 

அருகில் நெருங்கி  வந்தாள்

அருமை  பெருமை     பேசி 

அருந்ததி   காட்ட     நிற்கிறார் 

 

உருண்டு   போகுது   வண்டி

உருவம்   மெல்ல    தெரியுது

உருவந்து   ஆடிய   வேலன்

உருக்குலைய  அதில்  இருக்கிறார் 

 

சுருட்டு   வாயில்    கொதிக்க

சுருக்கி    ஆடை      உடுத்து

சுருதி      விலகாது   மீட்க

சுருண்டு   வேலன்   படுக்கிறார்

 

கருமம்    வாழ்வில்   ஒழிய

கருணை    மழை       வேண்டி

கருப்பு       சாமி      ஆடியவன்

கருவிழி   மார்பில்   சாய்கிறார் 

 

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


1 comment:

  1. கவிக்குரிய மரபு மொழியும்,கருவின் பொழிவும் அருவியாய் பாய்கிறது.

    ReplyDelete