நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்
வாழ்வில் அன்றாடம் கலந்திருக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது பால்தான். பால்
என்பது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும். பால்
அனைத்து விதத்திலும் ஆரோக்கியமாக இருந்தாலும் அதிலும் பல பக்கவிளைவுகளும் உள்ளது.
பொதுவாக பால் எலும்புகளை பலப்படுத்தும் என்று அனைவரும்
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல. பாலில் உள்ள கால்சியம்
எலும்புகளை வலுப்படுத்துவது உண்மைதான் என்றாலும் அதிகளவு பால் குடிப்பது உங்கள்
எலும்புகள் முறிவடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள்
கூறுகிறது. பாலும் எலும்பு முறிவும் சமீபத்தில் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடத்தப்பட்ட ஆய்வில்
அதிகளவு பால் குடிப்பது எலும்பு முறிவு, இதய கோளாறுகள், வயதானவர்களிடையே
புற்றுநோய் ஏற்படும் அபாயம் என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று
கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் அதிகளவு பால் குடிப்பது நடுத்தர
வயதில் இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 15 சதவீதம்
அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பெண்களுக்கான பாதிப்பு பொதுவாக ஆண்களுக்கு பாலால்
ஏற்படும் பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட குறைவுதான்.
ஆண்களுக்கு பாலால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களை விட 12
சதவீதம் குறைவு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் பெண்கள் அதிகளவு சீஸ்
மற்றும் தயிர் சாப்பிடும்போது அது அவர்களின் இறப்பு விகிதத்தை அதிகரிப்பதுடன்
எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியம்
நீங்கள் தினமும் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தால் இந்த ஆய்விற்காக பயந்து
அதனை நிறுத்த வேண்டாம்.
ஆனால் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், சீராக்கவும்
பாலை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம். ஏனெனில் பாலில் உங்களுக்கு போதுமான அளவு
கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கால்சியத்தால் ஏற்படும் பிரச்சினை
எலும்புகளின் ஆராயத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்று. இது பாலில் அதிகம்
உள்ளது. ஆனால் இது மட்டுமே எலும்புகளை பலப்படுத்தாது ஏனெனில் அதற்கு பல
ஊட்டச்சத்துக்களும் தேவை. எனவே சத்துள்ள உணவுகளையும் உங்கள் உணவில்
சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் எலும்புகளை பலப்படுத்த பின்வரும்
ஆரோக்கிய முறைகளை பின்பற்ற வேண்டும்.
மாற்று வழியில் பாலை எடுத்துக்கொள்ளவும்
தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் பாலை விட குறைவான ஆரோக்கிய பாதிப்புகளையே
ஏற்படுத்தும். தினமும் மூன்று டம்ளர் பால் குடிப்பதை விட காலை நேரத்தில் ஒரு கப்
தயிர் அல்லது சீஸ் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கும். திட
பொருட்களான இவற்றில் பாலை விட அதிக சத்துக்கள் உள்ளது. பால் குடிக்கவில்லையெனில்
கால்சியம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுங்கள் சோயா, பட்டாணிகள், கீரைகள், ப்ரோக்கோலி, பாதாம், பீன்ஸ்
போன்ற பொருட்களில் பாலில் இருக்கும் அளவிற்கு கால்சியம் உள்ளது. பால் குடிப்பது
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சோயா பால் அல்லது பாதாம் பாலை குடிக்கலாம்.
காய்கறிகள் போதுமான அளவு காய்கறிகள், பழங்கள், தானியங்கள்
மற்றும் புரத உணவுகளை அதிகளவில் சாப்பிடுங்கள். இவை பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின்
கே, வைட்டமின்
சி குறிப்பாக கால்சியம் அதிகம் உள்ளது. இவை உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு
அதன் அமைப்பையும் சீராக்குகிறது.
🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛
0 comments:
Post a Comment