பட்டை ஒன்றை கொத்துது"
"கட்டு மரத்தில் காதலியுடன்
சிட்டாய் மேலே பறக்குது"
"குட்டு பட்ட பூனைபோல்
கட்டை ஒன்றில் இருக்குது"
"வீட்டு முற்றத்தில் பூப்பறித்து
குட்டை கூந்தலில் சூடுது"
"பாட்டு வாத்தியம் ஓங்க
வீட்டில் விழா எடுக்குது"
"சட்டு புட்டுடென சொல்ல
பாட்டை வசை பாடுது"
"திட்டு ஒன்று காதில்விழ
சட்டி பானை உடையுது"
"பட்டு தாவணி காற்றடித்து
எட்டா தொலைக்கு பறக்குது"
"எட்டு திக்கும் பறையடித்து
ஆட்டம் மேடை ஏறுது"
"ஆட்டு குட்டி ஓடித்தாவி
மேட்டின் மேல் நிற்குது"
"மேட்டு நிலம் மண்சரிவில்
தட்டை ஆக மாறுது"
"தட்டு தாம்பாளம் வரவேற்பில்
திட்டம் ஒன்று அரங்கேறுது"
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
0 comments:
Post a Comment