சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பகுதி 16


முக்தி/C/தொடர்ச்சி.......


1.            கர்ம முக்தி    (தொழில் ஒழுக்க உயர்வு)
2.            தேக முக்தி         (சரீர ஒழுக்கம்)
3.            சீவ முக்தி         (சீவன் ஒழுக்கம்)
4.            மன முக்தி     (மனகட்டுபாடு ஒழுக்கம்)
5.            ஆன்ம முக்தி        (தன்னையறிதல்)

1.            கர்ம முக்தி என்பது நமக்கு வெற்றி 
தரக்கூடிய தொழிலை சரியாக     தேர்ந்தெடுத்து செய்தல். செய் தொழிலை விழிப்புணர்வுடன் செய்துபுகழையும், பொருளையும் அடைவது. (கர்மம் - தொழில்).

2.            தேக முக்தி என்பது நமது சாரீரத்திற்கு தீமை தரும் உணவுகளை நீக்கிநன்மை தரும் உணவுகளை மட்டும் உண்டு, சாரீரத்தை வலிவும்
 வனப்பும், வாலிபமும் கொண்ட தாய் அமைத்து கொள்வது. தேகத்தில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றுதத்துவத்தையும்
      சமநிலைபடுத்தி வைத்துக் கொள்வது. இது தேக முக்தி, சரீர முக்தி ஆகும்.

3. சீவமுக்தி என்பது நமக்கு வாழ்வில் தீமைகளை உண்டு பண்ணும் அனைத்து செயல்களையும், நட்பு, உறவு என அனைத்தையும் நீக்கி,      
 நன்மைகளை மட்டும் உண்டாக்கும் செயல்களை மட்டும் செய்து, எப்போதும் தன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன், வாழ்வது, வாழும்
 போதும், வாழ்ந்து மறைந்த போதும் நாம் செய்த செயல்களால் மற்றவர்கள் நம்மை பெருமைப்படுத்துவது சீவ முக்தி ஆகும்.

4.             மனதின் முக்தி என்பது நமது மனதினை சரியான பாதையில் மட்டும் செலுத்தி வாழ்வது, மாயையின் வசம் ஆட்படாமல் வைத்து           கொள்வது, இயற்கையின் உண்மை தத்துவம் புரிந்து வாழ்வது. மனசலனம் நீக்கி எப்போதும் எதற்கும், மனதினை அமைதியாக வைத்துக் கொண்டு வாழ்தல், சமுதாய மாற்றத்தை,   சமூகத்தை  புரிந்து தன்னை காத்துக் கொள்தல் மனமுக்தி ஆகும்.

5.  ஆன்ம முக்தி என்பது இந்த பிறவியில் நாம் பிறந்த காரணம் அறிவதுஊழ்வினையை உணர்வது  நம் வாழ்வில் உண்டாகும் நன்மை,
 தீமைகளை பகுந்து ஆராய்ந்து தீமைகளை நீக்கி, நன்மை தரும் செயல்களை அறிதல், நன்மை தீமை, பகை, நட்பு, உயர்வு, தாழ்வு என எல்லாவற்றையும் சமமாக பாவித்தல், தன்னையறிதலே ஆன்ம முக்தி ஆகும்.
                இந்த ஐந்து ஒழுக்கநிலைகளிலும் யார் வாழ்வில் சரியாக வாழ்ந்து வருகின்றார்களோ, அவர்களே முக்தி அடைந்தவர்கள், என்பது சித்தர்கள் அருளிய சித்தாந்தம் கூறும் முக்தியாகும்.
                 இன்றைய நாட்களில் சித்தர்கள் பெயரை சொல்லி, கடவுள் பெயரை சொல்லி சிலர் [பணக்காரர்களுக்கான]அன்னதானம், மடம் என மற்றவர்களிடம் பணம், பொருள், பறித்து கொஞ்சம் பிறருக்கு கொடுத்து, மற்றவற்றை எல்லாம் தன் சுகத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றார்கள். இந்த போலி மடாதிபதிகளை நம்பி தவறான வழியில் பொருள் சேர்த்தவர்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்தால் தான் செய்த பாவம் தீரும், பிறரை ஏமாற்றி சொத்து சேர்த்த பாவம் தீரும் என்று கூறி செயல்பட்டு வருகின்றார்கள். இப்படி செய்வதால் ஏமாற்றும் போலி குருவிற்கும் முக்திகிட்டாது. இந்த திருடர்களுக்கும் முக்திகிட்டாது.
                இதனை விடுத்து நாம் செய்யும் பரிகாரமும், பூசையும், யாகமும், ஹோமமும், அலங்கார வழிபாடும் தவறினை செய்து, தவறான வழியில் சேர்த்த பொருளால் செய்யும் தானமும், தர்மமும், கோயிலுக்கு தரும் பணம், பொருள், காணிக்கைகளும் நமக்கு முக்தியை தராது. "பிராப்த விதியினை" மாற்றாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பக்தி, ஞான, முக்தி நிலையை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
                 ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் அறிவை, ஆற்றலை, இயற்கையான திறமையை அறிந்து  அந்த கலையில் நம் குழந்தைகளை வல்லவர்கள் ஆக்குங்கள். இனி வரும் சந்ததிகளுக்கு, நம் வாரிசுகளுக்கு இயற்கையின் உண்மை ஞானத்தை போதியுங்கள். சித்தர்கள் அருளிய சைவ சித்தாந்த ஞான கருத்துகளை, போதித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள். சாத்திரம், சடங்கு உங்களுடன் முடியட்டும். சித்தர்களை பற்றியும், அவர்கள் கூறிய "வாழும் கலையான சைவ சித்தாந்தத்தை" உலகிற்கு உணர்த்துங்கள். ஒளிமயமான வாழ்வை அமைத்து கொள்ளுங்கள்.

             "சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்".

No comments:

Post a Comment