யார் விஞ்ஞானி
ஒருமுறை அமெரிக்கவிஞ்ஞானிகள் தயாரித்த
ரொக்கெற் விண்ணில் ஏவ முயற்சித்தபோது அது இயங்க மறுத்துக்கொண்டது. ரஷ்ய விஞ்ஞானி, சீன
விஞ்ஞானி ,ஜப்பான்
விஞ்ஞானி என ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானியும் வந்து முயற்சித்தனர்.
இயங்கவில்லை.இறுதியாக இந்திய விஞ்ஞானியை அழைத்தனர். இந்திய விஞ்ஞானி வந்து அதனை 45 பாகை
சரித்து வைத்துவிடு ஏவினார்.அது விண்ணைநோக்கிப் பறந்தது. ஆச்சரியமுற்ற ஊடகவியலாளர்
அவரை சூழ்ந்துகொண்டனர். எப்படி இது சாத்தியம் என வினாவினார்.அதற்கு இந்திய
விஞ்ஞானி ''எங்க
ஊர்ல ஸ்கூட்டர் ஸ்ரார்ட் பண்ணாட்டில் இப்பிடித்தான் ஒருபக்கம் விழுத்திப்போட்டு
காலால் உதைப்போம்.''என்றாரே பார்க்கலாம்.
அவசரம்
(மாப்பிள்ளயாகப்போகும்
நபர் தொலைபேசியில் கோயில் ஐயரிடம்)
நபர்:- வணக்கம் ஐயா.ஐயா என்னுடைய
கலியாணவீட்டுக்கு ஒரு
நல்லநாள் பார்த்துச்சொல்லுங்கோ ஐயா.
ஐயர்:-நல்லவிசயம் பாருங்கோ.உங்கள் அதிஷ்டம்..
இந்த மாதம் ஒவ்வொரு சனி, ஞாயிறும் மதியம் 12 இலிருந்து
01 மணி வரை
நல்லநாட்கள்.ஆனால் இந்தமாதம் கடந்தால் அவ்வளவு நல்லா யில்லைத்தம்பி .
நபர்:-என்ன ஐயா!அப்படிச் சொல்லுறியள்
பொம்பிள்ளை இந்தமாதக்கடைசியிலதானே ஐயா வருகிறா.
ஐயர்:-ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம்
பாருங்கோ.அடுத்த மாதம் எண்டாலும் முதல் சனி 01
மணியிலிருந்து 02
மணிவரை சுபமுகூர்த்தம் தம்பி .
நபர்:-(தனக்குள்) என்ன!... என்னைவிட ஐயாவுக்கேல்லோ அவசரமாயிருக்கு!
புத்திசாலிகள்
சீதா: பாத்தியாடி!இந்தமாதம் ஷொப்பிங்கிலை ஒரு
டொலர் மிச்சம் பிடிச்சிருகேனே!
மாதா:எப்பிடியடி?
சீதா:இந்தமாதம் நாலு முறை ஷொப்பிங்
போயிருந்தேன் .ஒருமுறையும் 25 சதம் போட்டு ஷொப்பிங் கார்ட் எடுக்கவில்லையே!
மாதா:ஊகூம்.இது என்ன சேவிங்.நான் ஷொப்பிங்
செய்யும்போது காசே செலவில்லையே!
சீதா: எப்பிடியடி?
மாதா:எல்லாத்தையும் கிரடிக்ட் கார்ட்
பார்த்துக்கொள்ளுதே.
படகு ட்ரைவர்
திருமண மண்டபத்திற்கு ஒருமுறை ஒரு பஸ்
பிடித்து 30 பேர் சென்றனர். ஆழமான ஆற்றைக்கடக்கவேண்டி எல்லோரும் இறங்கி
படகு ஏறும் கரைக்கு வந்தனர். படகு ஓட்டியை காணவில்லை. எனவே தம்முடன் வந்த பஸ்
ட்ரைவரினை அப்படகினை ஒட்டும்படி கேட்டனர்.அவரும் சம்மதித்து ஒட்டிச்
சென்றார். மிக ஆழமான நடு ஆற்றுப்
பகுதியில் படகு இயங்காது நின்றுவிட்டது. அனுபவம் மிக்க அந்த ட்ரைவர் பயணிகளை நோக்கிக் கூறினார் '' சரி ,எல்லோரும்
இறங்கித் தள்ளுங்கோ!''
No comments:
Post a Comment