முதலாம் மாதம்
வாழ்க்கையில் தனது முதலாம் மாதத்திலிருந்து, உங்கள் குழந்தை மனித குரல்களில், முக்கியமாகத் தன் பெற்றோரின் குரல்களில் உறுதியான அக்கறை கான்பிப்பான். அவன்
இசையையும் இரசித்துக் கேட்பான். உங்கள் குழந்தை எரிச்சலடையும்போது இசை மிகுந்த
கவனச் சிதறுதலைக் கொடுக்கும். ஒரு இசையை இசைக்க அல்லது அவனுக்காகப் பாட்டுப் பாட
முயற்சிக்கவும். அவன் அழுவதை உடனே நிறுத்திவிடலாம்.
இந்த மாதம் உங்கள் குழந்தை தனது குரலை பரிசோதிக்கத் தொடங்குவான். அவனது
குரற்பெட்டி மேலும் வளைந்து கொடுக்கக்கூடியதாக மாறிக்கொண்டுவரும். “ஆ”, “ஏ”,மற்றும் “ஓ” போன்ற உயிரெழுத்துச் சத்தங்களை
எழுப்ப அனுமதிக்கும். அவன் இந்தச் சத்தங்களை எழுப்பக் கற்றுக்கொள்ளும்போது அது
அவனைக் குதூகலமடையச் செய்யும். அவன் அவற்றைத் திரும்பவும் திரும்பவும் பயிற்சி
செய்வான்.
இரண்டாம் மாதம்
இந்த மாதம் உங்கள் குழந்தையின் செவிகொடுத்துக் கேட்கும் திறன் தொடர்ந்து
முன்னேற்றமடையும். இப்போது அவனால் வித்தியாசமான சுருதிகள் மற்றும் தீவிரமுள்ள
சத்தங்களின் வேறுபாடுகளை உணரமுடியும்.
மக்களின் உரையாடல்களில் அக்கறைகொள்ளத் தொடங்குகிறான். செவி கொடுத்துக்
கேட்பதிலும் பேசுவதிலும் எப்படி மாறி மாறி சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளுகிறார்கள்
என்பதில் அக்கறை கொள்ளுகிறான். அவன் உங்களுக்காகச் சத்தங்களை எழுப்பி உங்கள்
பதிலுக்காகக் காத்திருக்கிறான். உண்மையில், உங்கள் குழந்தை அழும்போது அவனுடன் வெறுமனே பேசுவதன் மூலம் சிலவேளைகளில், அவனது கவனத்தைத் திசை திருப்பலாம்..
மூன்றாவது மாதம்
இப்போது, உங்கள் குழந்தை அருகிலிருந்து வரும் ஒரு சத்தத்தைக்
கேட்பதற்காக தனது தலையைத் திருப்பலாம். உதாரணமாக, தொலைபேசி மணி ஒலித்தால், மணிச் சத்தம் வரும் பக்கமாகத் திரும்பலாம்.
அவனது கண்களும் அதே திசையை நோக்கும்.
உங்கள் குழந்தை தொடர்ந்து தன் குரலினால் கவரப்படலாம். அவன் சந்தோஷம் மற்றும்
திருப்தியாக இருக்கும் போதெல்லாம் சத்தங்களை ஒலிக்கப் பயிற்சி செய்வான். நீங்கள்
அவனுடன் பேசும்போது அவன் பெருமளவில் உங்களுடன் “பேசுவான்”.அவன் உங்களை மாதிரி
நடிப்பதிலும் உங்களையும் அவனைப்போல நடிக்க வைப்பதிலும் சந்தோஷம் காண்பான்.
நாலாம் மாதம்
இந்த மாதம் உங்கள் குழந்தையின் செவிகொடுத்துக் கேட்கும் தன்மை தொடர்ந்து
முன்னேற்றமடையும். மென்மையான சத்தங்களைக் கேட்கும் அவனது திறமை முன்னேற்றமடையும்
இப்போது உங்கள் குழந்தை உயிரெழுத்துக்களை உச்சரிக்கப் பயிற்சி பெற்றுவிட்டான்.
இனிமேல் மெய்யெழுத்துக்களை உச்சரிக்கத் தொடங்குவான். உச்சரிப்பதற்கு மிகவும்
இலகுவான மெய்யெழுத்துக்கள் ம், க், க்க், ப் மற்றும் ப்ப் ஆகும். இந்த
மெய்யெழுத்துக்களுடன் சில உயிரெழுத்துக்களையும் சேர்த்து “க்கா” அல்லது “ப்பா”
என்று சொல்லத் தொடங்கலாம்.
ஐந்தாம் மாதம்
இந்த மாதம் உங்கள் குழந்தை ஒரு மிகவும் அற்புதமான சத்தத்தை எழுப்புவான்: அவனது
முதற் சிரிப்பு.
உங்கள் குழந்தை பாஷையைப் புரிந்துகொள்ளுதலில் தொடர்ந்து முன்னேற்றங்கள்
செய்வான். பேசுபவரின் குரல் அவனுக்கு மேலும் முக்கியமானதாகும். அதற்கேற்ப அவன்
பிரதிபலிப்பைக் காண்பிப்பான். அவனது சொந்தப் பாஷையின் வடிவம் மற்றும் சீரை
அடையாளம் காணத் தொடங்குவான்.
ஆறு முதல் பத்து மாதங்கள்
ஆறு மாதங்களில், உங்கள் குழந்தை சத்தங்களைப் பாவனை செய்யலாம்.
ஏழாம் மாதத்தில் அவனது பெயருக்குப் பிரதிபலிப்பைக் காட்டலாம். எட்டாம் மாதத்தில்
“டடா” மற்றும் “பபா” போன்ற வார்த்தைகளைச் சொல்வதற்காக அவன் தனது சொற்பகுதிகளைச்
சேர்க்கத் தொடங்குவான்.
அவன் மழலைப் பேச்சைத் தொடர்ந்து பேசுவான். ஆனால் அது படிப்படியாக நிஜமான
பேச்சுப்போல தோன்றத் தொடங்கும். பிற்காலத்தில் நிஜமான வார்த்தைகளை எப்படிச்
சொல்வது என்பதைக் கற்றுக் கொள்வதற்கு இந்தப் பயிற்சிகள் எல்லாம் அவனுக்கு உதவி
செய்யும். வார்த்தைகளுக்கும் சைகைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை விளங்கிக்
கொள்ளத் தொடங்குவான். உதாரணமாக, “குட்பை” என வார்த்தையில் சொல்வதும் சைகை மூலம்
“குட்பை” காட்டுவதும் ஒரே அர்த்தத்தை உடையது என உணரத் தொடங்கிவிடுவான்.
ஒன்பதாம் மாதமளவில்,அவனது குடும்ப அங்கத்தினரின் பெயர்கள் உட்பட
அநேக வார்த்தைகளின் அர்த்தம் அவனுக்குத் தெரியலாம்.
உங்கள் குழந்தை ஆண் குரல் எப்படி ஒலிக்கும் மற்றும் பெண்குரல் எப்படி
ஒலிக்கும் என்பதை அடையாளம் கண்டுகொள்வான். இதன் விளைவாக, ஒரு பெண் ஆண்குரலில் பேசினால், அல்லது ஒ ருஆண் பெண்குரலில் பேசினால் அவன் ஆச்சரியப்படலாம்.
11 முதல் 12 மாதங்கள்
இந்தக் கடைசி இரண்டு மாதங்களில், சிலசமயம் உங்கள் குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசலாம். உங்கள் குழந்தை
இந்த மைல்கல்லை எட்டும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும்
கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. காலப்போக்கில், நீங்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளவும் உரையாடலைக் கொண்டிருக்கவும் உங்களால்
முடியும்.
உங்கள் குழந்தையின் முதல் வருட முடிவில், அவனால் ஒரு சில வார்த்தைகளைச் சொல்லமுடியும். ஆனால் பெரும்பாலும் அவனால் 100 க்கு மேற்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தை
வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள உதவிசெய்வதற்காக அநேக “குறிப்பு”களை
உபயோகிப்பான். சைகைகள், உடல் மொழி, மற்றும் ஒருவரின் பேச்சுத் தொனி என்பன எல்லாமே, வித்தியாசமான வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன என ஒரு குழந்தை
கற்றுக்கொள்ள உதவி செய்யும்.
No comments:
Post a Comment