பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும்.இந்த நிகழ்வு பிற்காலத்தில்,ஆரியரின் நாகரிகக் கலப்பால்,தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளியானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை.விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்?மேலும் தீபாவளிப் பண்டிகை,கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை.ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.
"உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர வருக தில் அம்ம
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித்
தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்"
உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக்
கிடக்கிறது.உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது.ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடுவார்கள்.இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள்.அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.
உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை.ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம்,ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது.அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே.ராவணன் அரக்கனும் அல்ல,கடவுளும் அல்ல.அவன் ஒரு சாதாரண மனிதன்.அவன் தவறுகள் விட்டுள்ளான்.நான் அவனை மூடிமறைக்க

முயலவில்லை.நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன்,ராமனை சித்தரிக்க கையாளுகிறேன்.அவ்வளவுதான்.கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது ,ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான்.மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள்,பண்புகள் கொண்டுள்ளனர்.ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்? ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள்.ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா?இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு,எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும்.அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம்.இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம்.கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு!அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை,மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை!இளைஞனாக இருக்கும் பொழுது,அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை,ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக,யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை,'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டுவருகிறேன். இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து,காடு சென்று,இறுதியாக தற்கொலை செய்கிறாள்.அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது,'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே!தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை? அவன் வாழ் நாள் முழுவதும்,பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே,எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!!
இதுவரையில் நாம் அலசியதிலிருந்து, ஆரியரின்
தந்திரமான புராண செருகலின் விளைவு , தமிழரின் தொன்மை வாய்ந்த தீப
ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது
அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். [இதேபோன்றுதான் தமிழரின் சிவ வழிபாடு , முருகன் வழிபாடு, நாக வழிபாடு என்பனவும் இந்து சமய போர்வைக்குள் இழுக்கப்பட்டு கொச்சைத்தனமான கதைகளும் புனையப்பட்டு ஆரியர்கள் அதில் வெற்றி கண்டனர்.] எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப
+ ஆவளி', அதாவது, 'தீப' (என்னும்
வடசொல்லும்) + 'ஆவளி' என்ற
இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என
பொருள்படும்,
தீப
ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு
என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!
ஆரியர்கள் இந்தியாவினுள் ஊருடுவ முன் அனுப்பிய ஒற்றர்கள் கூறிய செய்தி [நான் படித்த ஞாபகம்.]இந்தியா ஆன்மிகத்தில் மூழ்கியுள்ளது.என்பதாகும்.எனவே ஆன்மிக கதைகளை புகுத்தி அவர்களை அடிமைகொள்ளலாம் என ஆரியர்கள் முடிவு செய்தார்களாம் .எனவே தங்கள் அட்டுழியங்களை இறைவன் விளையாடல்களாக மக்களிடம் விதைத்து அடிமை கொண்டார்கள்.அது இன்றும் ஆட்சி புரிகிறது.
ReplyDeleteஆரியரின் நோக்கம் எம்மை நல்வழிப்படுத்துவது அல்ல. இந்தியாவில் ஊடுருவ முன் இந்தியர்களின் ஆன்மிகத்தின் ஆழத்தினை ஒரு பலவீனமாக எடுத்துக்கொண்டு தமது தலைகளை தேவரின் வம்சமாக புனைகதைகள் சூடி நாம் வணங்கும் தெய்வங்களை தம்மோடு இணைத்து ,கொச்சைத்தனமான கதைகளையும் உருவாக்குவதன் மூலமும் , ஆலய கோபுரங்கள்,,தேர் என்பவற்றில் உடலுறவு பொம்மைகளையும் இருத்தி , இளைய சமுதாயத்தினை திசை திருப்பி தங்களுக்கு எதிராக கிளம்புவதை தடுத்தும் , தங்கள் மது,மாது களியாட்டங்களுக்கு தடையாக இருந்த எமது ஊர் தலைவர்களை அசுரர் என பெயர்சூடி திட்டமிட்டு அழித்து வெற்றிகண்டனர். ஆனால் இத்தனை மாற்றங்கள் உலகில் நடந்தும் , அவர்கள் ஆட்சி இன்றும் திறம்பட நடப்பது தான் ஆச்சரியமாக உள்ளது. எங்களை அழித்த சூரன் போரை நாங்களே செய்துபார்த்து சந்தோசம் அடைகிறோம் என்பது அவற்றில் ஒன்று
ReplyDelete