யாரோ?
நான் யாரோ
?
தெருவோர மதவில் இருந்து
ஒருவெட்டி வேதாந்தம் பேசி
உருப்படியாய் ஒன்றும் செய்யா
கருங்காலி தறுதலை நான்
கருமம் புடிச்ச பொறுக்கியென
வருவோரும் போவோரும் திட்ட
குருவும் குனித்து விலக
எருமை மாடு நான்
வருடம் உருண்டு போக
வருமாணம் உயர்ந்து ஓங்க
கருணை கடலில் மூழ்க
மிருக-மனித அவதாரம் நான்
தருணம் சரியாய் வர
இருவர் இரண்டாயிரம் ஆக
ஒருவர் முன் மொழிய
தரும-தெய்வ அவதாரம் நான்
ஊருக்கு கடவுள் நான்
பாருக்கு வழிகாட்டி நான்
பேருக்கு புகழ் நான்
பெருமதிப்பு கொலையாளி நான்
குருவிற்கு குரு நான்
குருடருக்கு கண் நான்
திருடருக்கு பங்காளி நான்
கருவிழியார் மன்மதன் நான்
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
There are few Tamil spelling errors.
ReplyDelete