அவள் ஒரு ராஜகுமாரி


ச்சரவிலாப்  பெற்றோர்
சாதித்துப் பிறந்தவள்
சித்தம் சிறந்தவளா
அவள் ஒரு ராஜகுமாரி!

ன்புச் சோதரர்கள்
சையுடன் பழகுவதற்கு
ணையான உறவெனில்
அவள் ஒரு ராஜகுமாரி!

ள்ளியின் படிப்பினிலே
பாடம் புகட்டுவோரின்
பிடித்தமான மாணவியா
அவள் ஒரு  ராஜகுமாரி!

ட்பு எனும் வட்டத்துள்
நாடி வரும் கூட்டத்துள்
நிலையான நண்பியா
அவள் ஒரு  ராஜகுமாரி!

ணவனுடன் கைபிடித்து
காதலிலே களிப்புற்று
கிறங்கிடும்  வாழ்வெனில்
அவள் ஒரு  ராஜகுமாரி!

ழலைகள் செல்வமது
மாந்தர்கள் கண்தங்கின்
மிதக்கும் மகிழ்ச்சியிலே
அவள் ஒரு  ராஜகுமாரி!

லமான உறவுகளவளை
நாடி க் கூடி யென்றும்
நிலையான வாழ்வினிலே
அவள் ஒரு  ராஜகுமாரி!
குறிப்பு: அனைவருடனும் கூடி வாழ்ந்தார் , அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் , நிலையாக இராஜகுமாரியாக எல்லோர் மனதிலும் வாழ்ந்திருப்பார் என இறுதிப் பந்தி கூறுகிறது.
✍✍✍✍✍✍✍✍✍✍ செ .மனுவேந்தன்     


No comments:

Post a Comment