அடிக்கடி மயக்கம் வருது இதற்கு காரணம் என்ன
என்று கேட்டால், சிலர் உடம்பில் தேவையான சத்து இல்லை என்று
சொல்வார்கள். உண்மையான காரணம் அது கிடையாது. உடம்பில் அதிகப்படியான பித்தம்
இருந்தால் இந்த மயக்கம் ஏற்படும். ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு
பலகாரணங்கள் இருக்கும்.
மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு இரண்டுமே
மூளையுடன் தொடர்புடையது. கிறுகிறுப்பு மற்றும் மயக்கம் இரண்டுமே ஒன்றோடு ஒன்று
தொடர்புடையது என்று கூறலாம்.
வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு
இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்புகளை
இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்துகிறது. தீவிரமான கிறுகிறுப்பையே மயக்கம் என்று
சொல்லலாம்.
சரி இந்த தலை சுற்றல் சரியாக மற்றும் மயக்கம்
வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது படித்தறிவோம் வாங்க…
பித்த தலை சுற்றல் குணமாக (Vertigo home remedies):
சிலருக்கு உடலில் அதிகளவு பித்தம் இருந்தால்
அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த பித்தத்தை குறைக்க சிலவகை உணவு பழக்கங்களை
தவிர்த்து கொள்வதினாலும், சிலவகை உணவுகளை பின்பற்றுவதினாலும்
பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் சரியாகிவிடும்.
அதேபோல் டீ மற்றும் காபி அதிகம் அருந்துவதை
குறைத்து கொள்ளவும். மேலும் உணவில் எலுமிச்சை பழத்தினை அதிகம் சேர்த்து கொள்ளவும்.
இவ்வாறு செய்து வருவதினால் உடலில் உள்ள பித்தம்
குறைந்துவிடும், பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் சரியாகிவிடும்.
இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம் சரியாக (Vertigo home remedies):-
உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போதும்
மயக்கம் ஏற்படும். நாம் அதிக நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, நம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அப்போது மயக்கம் ஏற்படும்.
அந்த சமயத்தில் உப்பு அல்லது உப்பு அதிகம் உள்ள
உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிடுவதினால் உடலில் இரத்த அழுத்தம்
அதிகரிக்கும். ஏன்னெனில் உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.
வெயிலினால் ஏற்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம் சரியாக (Vertigo home remedies):
வெளியே நீண்ட நேரம் வெயிலில் செல்லும் போது, சூரியன் உடலில் இருக்கும் சக்தியை (எனர்ஜி) உறிஞ்சிவிடும். அதாவது உடலில்
இருக்கும் நீர்ச்சத்துக்களை சூரியன் உறிஞ்சிவிடுவதால், உடலில் அப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது போல் ஏற்படும் சில நேரங்களில் அதுவே
மயக்கமாக மாறிவிடும்.
எனவே எப்போதும் வெளியே செல்லும் போது, எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால்
மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.
No comments:
Post a Comment