நிலையானதை தேடி
விலையற்ற அன்பை
விலை கொடுத்து வாங்கும்
மூளை யற்ற மனிதன்
நிறம் பார்த்து பழகி
நிலை கண்டு பேசி
நிழலான வாழ்க்கையில்
நிஜமானதை இழக்கும்
நிம்மதியற்ற மனிதன்
புறம் பேசி வாழ்ந்து
மற்றவர் குறை கண்டு
மகிழ்தல்
மகிழ்தல்
தரம் என்று எண்ணி
நிரந்தரத்தை மறக்கும்
மந்தையான மனிதன்
பொருள் தேடி வாழ்தல்
பெரும் புகழ் என்று எண்ணி
நல் பொழுதுகளை இழந்து
புழுதியாய் போகும்
புகழற்ற மனிதன்
-s.sampasivam
0 comments:
Post a Comment