என் அம்மாவுக்கு அர்ப்பணம்


என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான்
வணங்கும் தெய்வமும் தாயம்மா -என்
கண்கண்ட தெய்வமும் நீயம்மா....

என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான்
வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா -என்
தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியேம்மா....

என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா
உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே....நான்
மீண்டும் ஒருமுறை வேண்டுவது உன் கருவறையம்மா…

வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை
பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என்
வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா....

தாயின் காலடியும் ஒரு ஆலயமே....அன்பு
சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான்
கண்ட முதல் வைத்தியரும் நீயேயம்மா....

மண்ணும் பெண்ணும்  என்சுவாசமே  அம்மா....தாய்மை
பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என்
அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே.....

நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே
என்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம்
உனக்கு தந்த குழந்தை அம்மா

🤶ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்


1 comments:

  1. vinothiny pathmanathan dkThursday, September 20, 2012

    தாய்மையைப் பற்றிய அருமையான ஒரு பதிவு.ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் தாய் அன்புக்கு ஈடாகாது .great job

    ReplyDelete