நம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா?


உருண்டை புழு:

இவைதான் மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் குடற்புழு. இது ஒரு மனிதனின் வயிற்றில் சராசரியாக 100 வரை இருக்கலாம். இந்த புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச் சாப்பிடும்.

கொக்கி புழு:
 
கொக்கு புழுக்கள் மற்ற வகை குடற் புழுக்களை விட மிகச்சிறியவை. இவை குடற் சுவரில் கொக்கி போல தொங்கிக் கொண்டிருக்கும். இவற்றின் குட்டிகள் மனித பாதத்தின் வழியாக நேரடியாக மனித உடலுக்குள் நுழையக் கூடியவை.

சாட்டை புழு:

இந்த வகை புழுக்கள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பசியே எடுக்காது. சத்தும் பிடிக்க மாட்டார்கள். மந்தமாகவும் அந்த குழந்தைகள் காணப்படுவார்கள்.


நாடா புழு:
மாடு மற்றும் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு இந்த புழு வயிற்றில் உருவாக வாய்ப்புள்ளது. இவற்றால் கல்லீரல்,மூளை,சிறுநீரகம் போன்றவற்றில் நீர்க்கட்டிகள் வளர வாய்ப்புள்ளது.

தீர்வு என்ன?

 மருந்துக்கடைகளில் பெரியவர்களுக்கு மாத்திரையாக, குழந்தைகளுக்கு டானிக் போலவும் குடற்புழு ஒழிப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனையுடன்  எடுத்துக் கொண்டால்,குடற்புழு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺



No comments:

Post a Comment