அடைத்த பை உடலை கொண்டதெல்லாம் மனிதனா?
படைத்தவனுக்கே படையலிடும் அவன் மனிதனா?
படைத்தவனுக்கே படையலிடும் அவன் மனிதனா?
பகுத்தறிவை பயன்படுத்த முடியாத அவன் மனிதனா?
சிறுமைத்தனமாய் சினம் வளர்க்கும் அவன் மனிதன?
பொறுமையிழந்து பொல்லாமை புரிபவனும் மனிதனா?
அயலார் வீழ்ச்சியில் ஆனந்தமடையும் அவன் மனிதனா?
தயவே தங்காத நெஞ்சுடையானும் ஒரு மனிதனா?
கருணையே இல்லாத கொடும் கயவன் அவன் மனிதனா?
குருவையே பழித்துக் கூசாது பறைபவனும் மனிதனா?
செய்த நன்றிகள் மறந்து செல்பவன் மனிதனா?
பொய் மொழிகள் பொழியப் பேசும் அவன் மனிதனா?
கண்ட வழியில் காசைக் கொள்பவன் மனிதனா?
கொண்டகடனை அடையாக் கொள்ளையனும் மனிதனா?
சொன்ன சொல்மாற்றிச் சொல்பவனும் மனிதனா?
அன்னை மொழி மறந்து அலைபவன் அவன் மனிதனா?
பிறந்த நாட்டினை பிறரோடு இகழ்பவன் அவன் மனிதனா?
துறந்தே தன் இனத்திலிருந்து தூர வாழ்பவன் மனிதனா?
கதிரைக்காக இனத்தைக் காட்டிக் கொடுப்பவன் மனிதனா?
சதி கொண்டு சண்டைக்கு இழுக்கும் அவனும் மனிதனா?
இனத்தை ஒரு இனமழிக்க ஏவுபவன் மனிதனா?
மனத்தை மனித வழிப்படுத்த மறந்த அவனும் மனிதனா?
இறைவனை மனிதனாய் மரணித்த அவன் மனிதனா?
மதங்களை மோத விட்ட அவனும் மனிதனா?
குழந்தைமேல் கோரக் கண்கொள் இவனும் மனிதானா?
பெண் என்றால் கிள்ளி எறியும் வெறியனும் மனிதானா?
மனிதத்தை தொலைத்த பின்னும் இவன் மனிதனா?
புனிதத்தை கெடுத்தே வாழுமிவன் மனிதனா?
விலங்கினத்தில் பிறந்துவிடு ,
வாழ்வித்தைகள் கற்றுவிடு
✍---- செ.மனுவேந்தன்
nice .great job
ReplyDeleteமனிதனை விலங்கினத்தோடு ஒப்பிட்டு, விலங்கினத்தை இவ்வளவுக்கு கேவலப்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது!
ReplyDeleteஉங்கள் வருத்தத்திற்கு நியாயம் உள்ளது. நல்லமனிதர்களும் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மனிதர்கள் கீழ்த்தரமானவர்கள் எனும்போது வருத்தம் ஏற்படும் என்பது உண்மை..ஆனால் இன்று தமிழர்மத்தியில் ஆட்கடத்தல் ,கற்பழிப்பு,கொலை ,கள்ளத்தொடர்புக்காக கணவன் கொலை அல்லது மனைவி கொலை, அல்லது குழந்தை கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கொலை மட்டுமல்ல ,சடடத்திலிருந்து தப்பலாம் என்ற நினைப்பில் சடலத்தை எரித்தல்,அல்லது புதைத்தல் ,மதங்கள் மூலம் அமைதியின்மை , தற்கொலை எனப் பல கொடுமைகள் மலிந்துவிடடன என செய்திகள் மூலம் அறிகிறோம். எமது பக்கத்தில் செய்திகள் நிறுத்தப்படடமைக்கு இதுவும் ஒரு காரணம். அவற்றின் வெளிப்பாடே மேற்படி வரிகள்.உங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDelete