தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 81(முடிவுரை )

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]        
பெர்லின் நகரத்தின் பேர்க்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு 12 வயது மதிக்கத்தக்க ஒரு சுமேரிய பையனின் எலும்புக் கூடு
எமக்கு எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது தெரியாது.அதே போல இவர்களின் வழித்தோன்றல்கள் யார் என்பதும் சரியாக தெரியாது.இன்று வரை இந்த பண்டைய சுமேரியர்களின் டிஎன்ஏ யை பரிசோதனை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை.என்றாலும் அண்மையில் பண்டைய சுமேரிய நாகரிகத்தின் தலை நகரமான ஊரில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 4500 ஆண்டை சேர்ந்த ஒரு முழுமையான எலும்பு கூடு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாந்தவியல், தொல்லியல் பற்றிய அருங் காட்சியகத்தில்[Penn Museum] 2014 ம் ஆண்டு திரும்ப கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பொதுவாக தொல் பொருள் ஆய் வாளர்கள் நிலத்தில் தான் அகழ்வின் போது இப்படியானவற்றை கண்டுபிடிப்பார்கள்.ஆனால் இதுவோ,அருங்காட்சி யகத்தின் சேமிப்பு அறையில் கடந்த 85 வருடமாக சவப்பெட்டி போன்ற பெட்டி ஒன்றில் பாதுகாத்து வைத்திருந்த இந்த எலும்பு கூட்டை கண்டுபிடித்து உள்ளார்கள்.இது 1929–30 ஆண்டில் பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் லியோனாட் வூல்லேயால்[Sir Leonard Woolley] கண்டுபிடிக்கப்பட்டது.இதில் ஆச்சிரியம் தரக்கூடிய விடயம் என்ன வென்றால்,இதின் கெடாத பல்லில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய போதுமான மென்மையான திசு அதிகமாக இருக் கலாம் என்பதே.அப்படி இருந்து பரிசோதனை செய்யும் பட்சத்தில்,இந்த முதலாவது நகர நாகரிக குடி மக்கள் எங் கிருந்து வந்தார்கள்,அவர்களின் சமகால வழித்தோன்றல்கள் யார் என்பதை விரைவில் வெளிப்படுத்தலாம்.சுமேரி யர்களின் இடம்பெயர்வு ஒரு மர்மமான சொல்லப்படாத கதையாகவே இருக்கிறது.எனவே டிஎன்ஏ பரிசோதனை ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம்.மேலும் நான் ஒரு தகவலை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும்,யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகளை அண்டியும்,இறுதியாக சிந்து நதி கரையிலும் அமைந்த முன் னைய நாகரிகத்தை அமைத்தவர்கள் அனைவருமே கருத்த தோல் மனித அடையாளத்தை கொண்டவர்கள். இது  தற்செயலாக அமைந்து இருக்க முடியாது.மேலும் இந்தியாவிற்கு இருதரம் 1288 இலும் 1293 இலும் பயணித்த இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது.இவர் அங்கு வாழ்ந்த தமிழரைப் பற்றி குறிக்கும் போதுமிகவும் மதிப்புடனும் கருப்பு நிறம் அற்ற மற்றவர்களை விட தான் நன்றாக வாழ்வதாக கருதும் கருத்த மனிதன் இங்கு இருக்கிறான்.நான் இந்த உண்மையை கூறவிடுங்கள்.இந்த மக்கள் தமது கடவுளை,விக்கிரகங்களை கருப்பாக சித்தரிக்கிறார்கள்.பிசாசுகளை பனி போன்ற வெள்ளையில் சித்தரிக்கிறார்கள்.அவர்கள் கடவுளும் எல்லா ஞானி ளும் கருப்பு என்றும் கெட்ட தேவதைகள் எல்லாம் வெள்ளை என்கிறார்கள்.அதனால் தான் நான் விவரித்த வாறு வர்ணிகிறார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆஃப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும்.ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள்.மற்ற இன்றைய மக்கள் அனைவ ரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்பவேண்டும்.முன்னைய ஆஃப்பிரிக்க மக்களின் ஆதி  இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால்,மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள்.அது மட்டும் அல்ல,ஆஃப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது.மனித இனம் பல கட்டங்களாக ஆஃப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள்.ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன் ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆஃப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு,ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.அது மட்டும் அல்ல இந்த காலத்திலேயே அவன் தீ உண்டாக்கக் கற்றுக்கொண்டான் என்பார்கள் அறிஞர்கள்.இன்றும் உலக மக்களின் பண்பாடுகளோடு பங்குகொள்ளாமல் தனித்து வாழும் சில தொல்குடி மக்கள் சிலர் தீக்கடைக் கோல் எனப்படும் மரக்குச்சியால் உரசியோ தேய்த்தோ,அதை  தீ உண்டாக்க பயன்படுத்துகின்றனர்.2000 ஆண்டுகளுக்கு முற் பட்ட தமிழில் இவற்றை ஞெலிகோல் என்றும் கூறிவந்தனர்.அதியமான் நெடுமான் அஞ்சி,வீட்டு இறைப்பில்செருகப் பட்ட தீக்கடை கோல் போல் தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்;என்று புறநானுறு 315 "இல்லி றைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன்;" என்று கூறுகிறது.மனிதக் கூர்ப்பில், கொரி ல்லா மற்றும் லூசி என்று பிரபலமாக அறியப்படும் ஆசுத்திராலோபித்தேக்கசு அஃபெரென்சிசு [Australopitheus Afarensis] க்குப் பிறகே ஹோமோ எரக்டஸ் என்னும் இந்த மாந்த இனத்தின் மூதாதையர் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்.இந்த ஆதிவாசிகளே முதன்முதலாக சமைத்து உண்டவர்கள்.இதே சமயத்தில் தான் நம் மூதாதை யர்கள் தாங்கள் உடல் உரோமத்தை இழக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.அதன் பின்,நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால்[Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்,ஹோமோசேப்பியன்ஸ்  [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன் இரண்டாவது அலையாக ஆஃப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது,ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் தற்போதைய மனிதர்களை விட நியான்டர்தால் மனிதர்கள் , புத்திசாலிகளாக இல்லாததால் அழிந்து போயினர் என ஆய்வு ஒன்று கூறுகிறது.சேப்பியன் (Sapien) என்பதற்கு அறிவு என்பது பொருள்.ஹோமோ என்பதன் பொருள் மனிதன் என்பதாகும்.இதனால்,மதிமனிதன் அல்லது அறிவு மனிதன் (Homo sapien) என இவனை அழைக்கின்றனர்.இவன்,அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர் களை வெற்றி கொண்டான் என்கின்றனர்.இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன் இந்த ஹோமோ சேப்பி யன்ஸின் சந்ததி ஆகும்.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தான்.இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் எப்படி பல கிலோ மீட்டர் கடல் பகுதியைத் தாண்டி தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் வந்திருக்க முடியும் என நீங்கள் ஆச்சிரியப் படலாம்?ஆனால், அந்த பழங்காலத்தில் கண்டங்கள் எல்லாம் இணைந்து இருந்தன,அவை பனியுகம் (Ice age) அல்லது "பனிப்படல யுக(Glacial Age) த்தின் பிறகே பிரிந்தன.18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளி யும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன.பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அப்போது உலகத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் தணிந்து,உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப் படுகிறது!ஆகவே அவர்கள் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இருக்கலாம்.ஆஃப்பிரிக்காவில் இருந்து பரந்த உலகிற்கான இந்த இடம் பெயர்வு பெரும்பாலும் 60,000-70,000 ஆண்டுகளிற்கு முன்பு நடைபெற்று இருக்கலாம்.இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள்[beachcombers] விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டு களுக்கு முன்பு அடைந்தார்கள்.அதன் பிறகு,கொஞ்சம் காலம் கடந்து,இரண்டாவது குழு ஆஃப்பிரிக்காவை விட்டு வெளியேறி,மத்திய கிழக்கு,தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.உலகின் ஒவ்வொரு மூலையையும் மனித இனம் ஒரு நாள் நிரப்ப இந்த இடம்பெயர்வே வழி வகுத்தது.அந்த தொடக்க துணிகர இடம் பெயர்வு காலத் தில்,வேட்டை மற்றும் உணவு சேகரிப்பதுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இன்னும் இருந்ததுSculpture of the celestial wedding of Shiva and Parvati at Meenakshi temple at Madurai.இந்த மனி தர்கள் சில நூறு தனிப்பட்டவர்களை கொண்ட சிறு சமுகமாக,அனேகமாக வாழ்ந்தார்கள்.சமூகப் பிணைப்புகள் அங்கு அவர்களுக்கு இடையில் உண்டாகி,அது இந்த சிறிய மக்கள் கூட்டங்கள் தங்களுக்கு இடையில் உணவு வளங்களை பகிரவும் ஒன்றாக இணைந்து வேட்டையாடவும் உதவின.இந்த பிணைப்பு மலர்ந்து,இன்று நாம் அறிந்த சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற ஒன்று அவர்களுக்கு இடையில் தோன்ற மொழி வளர்ச்சி உதவியது.இந்த மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான்,நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது எனலாம்.கி மு 14,000-9500 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. நாடோடிகளாக  வேட்டை யாடி உணவு சேர்ப்பதில் இருந்து அவர்கள் வாழ்வு மற்றம் அடைந்தது.இந்த கால கட்டத்தில் மழை வீழ்ச்சி உச்ச நிலையை அடைந்து சஹாரா,வட ஆஃப்பிரிக்கா போன்ற பகுதிகள் பசுமையா மாறின.இந்நிலையில்,வேளாண்மை அங்கு பிறந்தது;காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங் களை,தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்து கொண்டான்.அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை என்கின்றனர்.நைல் நதி,மற்றும் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த மெசொப்பொத்தேமியாவின் டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளை உள்ளடக்கிய இளம் பிறை வடிவம்[Fertile Crescent lands] கொண்ட செழுமையான பகுதியில் முதல் விவசாயி பிறந்தான் என நம்பப்படுகிறது.முதலில்,உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான்.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:
பகுதி 82 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:82

பகுதி :82 முடிவுரை தொடரும்...

1 comment:

  1. gasan santhiragasanFriday, October 02, 2015

    "எமக்கு எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது தெரியாது".

    இதை வாசிக்க எனக்கு விளங்கினது என்னவென்றால் எங்களுக்கும் சுமேரிய மரபணுதான் என்று. பிறகுதான் விளங்கிச்சு இன்னும் தெரியாது என்று.

    ஏனென்றால் 'எமக்கு' என்ற சொல் பின்னால்தான் வந்திருக்க வேண்டும். என்பதால்.

    "எங்கிருந்து பண்டைய சுமேரியர்களின் மரபணுக்கள் வந்தன என்பது எமக்கு தெரியாது" என்றால் சரி.

    இங்ஙனம்
    தமிழ்ப் பண்டிதர்.

    ReplyDelete