ஆன்மீகம் என்ற
பெயரில் அச்சுறுத்தல் தொடர்ச்சி........../C
அன்பர்களே சித்தர்கள்
காலமாக இருந்தாலும், இன்று நாம்
வாழும் காலமாக இருந்தாலும் "ஆன்மீகம்" என்பது ஒரு மனிதன் தன்னுடைய
ஆன்மாவை அறிந்து கொள்வது தான். தன்னையறிதலே ஆன்மீகம் ஆகும். தன்னை அறிந்து கொள்ள
தமிழ் தேச சித்தர்கள் அருளிய "சித்தாந்தம்" ஒரு பாதையை காட்டுகின்றது.
வடநாட்டைச் சேர்ந்த, வேதம் படித்து, வேத வழிபடி வாழும் மக்கள் கூறும் "ஆரிய வேதாந்தம்" ஒரு வழியை கூறி
இதுவே ஆன்மீக பாதை என்று கூறுகின்றது.
தமிழ் தேசத்தை சேர்ந்த
பதினெட்டு சித்தர்கள் கூறும் சைவ தமிழ் சித்தாந்த கோட்பாடுகள், ஆன்மாவை அறிய கூறும் வழிமுறை, நெறிமுறைகள், தற்போது கடவுள் பக்தி இல்லாத, நாத்திக கொள்கை கொண்டவர்கள்
கூறுவது போன்ற, கருத்துக்களை கொண்டது போல் தோன்றும் வேதாந்தம்
கூறிய வழியில் வாழ்ந்து, கடவுளை
வழிபடுவோர் ஆன்மீக வாதி என்றும் "ஆரிய வேதாந்த கருத்துக்களை ஏற்றுக்
கொள்ளாமல் வாழ்பவன்" நாத்திகவாதி வாதி என்றும் தற்காலத்தில் மக்களிடையே
கூறப்பட்டு வருகின்றது.
இந்த நாத்திகம், ஆத்திகம் என்ற பெயர், பிரிவினை
வாதங்கள் இடைப்பட்ட காலத்தில், பிற்காலத்தில்
சுயநலமிக்க சிலர், தங்கள்
சுயநலத்திற்காக மக்களை பிரித்து வைத்த சூழ்ச்சியான செயல் ஆகும். வேதம், புராணம், சாத்திரம் என மாயாவாதங்கள் பேசும் மத வாதிகள்
மக்களை ஏமாற்றி, தாங்கள் பிழைப்பதற்காக ஆத்திகம், நாத்திகம் என கூறி மக்களிடையே கருத்துக் குழப்பங்களை, சாதி, இன, பிரிவினை
சண்டைகளை உண்டாக்கி, மக்களை ஏமாற்றி
பிழைத்து வருகின்றார்கள்.
சித்தர்கள் வாழ்ந்த
காலத்தில் இந்த ஆத்திகம் கிடையாது. நாத்திகமும் கிடையாது. அன்றும் மக்கள் இடையே
இருந்தது, சித்தர்களின் சைவ சித்தாந்த வழி வாழ்க்கை முறை, ஆரிய வேதாந்த வழி வாழ்க்கை முறை என இரண்டு வகைதான். ஒரு மனிதன் ஞானம் அடைய
தன்னையறிதல் வேண்டும் என்பது சித்தாந்த வழி, ஞானம் அடைய வேதம், புராணம், சாத்திரம் கூறிய வழியில் வாழ சொல்வது, ஞானத்தை, ஆன்மாவை வெளியில் தேட சொல்வது ஆரிய வேதாந்த
முறை ஆகும்.
இன்றைய காலத்திலும்
ஆத்திகம், நாத்திகம் என இரண்டு பிரிவு கிடையாது. இவைகளில்
உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைய மனிதர்கள்
இடையே மாயை மறைந்து இருப்பது உண்மை. ஞானத்தெளிவு இல்லாமல் இருப்பது மட்டும் உண்மை.
இன்றைய மனிதர்கள் இடையே
சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த கொள்கைபடி தனக்குள்ளே தன்னை தேடுபவன், தன் விதியை, தன் வாழ்வின் நிலையை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் இருக்கும் ஏமாற்றுகளை புரிந்து கொண்டு, கடவுளை போன்ற வேறு சக்திகளை நம்பாமல், தன்னையும், தன் உழைப்பையும்,தன் விதியையும்
உணர்ந்து வாழ்பவன், சித்தர்கள்
கொள்கைகளை ஏற்று, அவர்கள் கூறியபடி
தன்னையறிந்து வாழ்பவன் நாத்தீகன் என்று கூறலாம். இந்த சைவ சித்தாந்த கொள்கைபடி
வாழும் நாத்தீகன் எப்படி இருப்பான் என்பதை என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே கூறி
அடையாளம் காட்டி உள்ளார்.
தன்னையறிந்தொழுகுவோர்
தன்னைமறைப்பார்
தன்னை யரியாதவரே தன்னை காட்டுவார்
பின்னை யொரு கடவுளை பேண
நினையார்
போரொளியை பேணுவார்
ரென்றாடாய் பாம்பே
என்று கூறியுள்ளார். இது
சித்தாந்தம் கூறும் வழி வாழ்பவன் நிலை.
ஆரிய வேதாந்தம் கூறும்
மாயாவாதம் பேசி, ஆன்மீகம் என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து கொள்ள, தன் விதியை
மாற்றிட, தன் ஆன்மாவை பூசை, யாகம், வழிபாடு என மாயையின் துணை கொண்டு, வெளியில் தேடி அலையும், வேதாந்த கொள்கை
கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன என்பதையும் என் குரு
பாம்பாட்டி சித்தர் அன்றே அடையாளம் காட்டி
ஏட்டு சுரைக் காய்கறிக்
கெய்திடாது போல்
எண்டிசைதி
ரிந்துங்கதி யெய்தலிலையே
நாட்டுக்கொரு
கோயிற்கட்டி நாளும் பூசித்த
நாதன்பாதங்
காணார்களென் றாடாய் பாம்பே.
என்று வேதாந்திகளை
பற்றியும் கூறிவிட்டார்.
எனவே நாத்திகம், ஆத்திகம் என்பது பிரச்சனைக்குரிய வாதம் அல்ல தற்போது நடைபெற்றுக் கொண்டு
இருப்பது ஞானத்திற்கும், மாயைக்கும் இடையே
நடக்கும் போராட்டம்தான்.
இப்போது உங்களுக்கு
புரியும் நாத்திகமும், ஆத்திகமும்,சித்தாந்த ஞானமும், வேதாந்த
மாயையும் என்னவென்று.
அடுத்த பகுதி 09 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...09
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07
ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07
0 comments:
Post a Comment