சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:7

ஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தல் /B
 ஆன்மீகம் என்பது தனி மனித முயற்சி ஆகும். தன்னையறிதலே ஆன்மீகம் அகத்தில் உள்ள ஆன்மாவை அறிவதே ஆன்மீகம்.

                     அகத்தில் உள்ள ஆன்மா இருள், மருள், தெருள், அருள் என்ற நான்கு நிலைகளை உடையது.
1. ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம் என்ற பக்தி நாட்டம் கொண்டவர்கள் இருள் நிலையில் வாழும் மக்கள்.
2. அச்சுறுத்தல் ஆன்மீகம், அவலட்சணம், அலங்கோல ஆன்மீகப் பாதையில் வாழ்பவர்கள் மருள்நிலையில் வாழும் மக்கள்.
3. போலியான ஆன்மீக செயல்களை செய்யாமல், தன்னை மட்டுமே சிந்தித்து வாழ்பவர்கள் தெருள்நிலை மக்கள் என கூறலாம். ஆனால் ஞானம் என்பது இவர்களிடம் இராது.
4. தன்னியறிந்து வாழ்பவர்கள், இயற்கையின் உண்மை தத்துவத்தை புரிந்து வாழ்பவர்கள். அருள் நிலையில் வாழ்பவர்கள். இவர்களால் உலகம் நன்மை பெற்று நாட்டையும், மக்களையும் நன்மையடைய செய்வார்கள். இந்த பூரண ஞானம் பெற்றவர்கள். இந்த பூரண ஞானம் பெற்றவர், ஆன்மாவை அறிந்த ஞான மனிதர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். விளம்பரபடுத்தி கொள்ள மாட்டார்கள்.
                      ஆன்மாவை அறிய அறிய போலி குருமார்கள் விலக்கி, பதினெட்டு சித்தர்கள் அருளிய "சைவசித்தாந்த கொள்கைகளை" கடைபிடித்து இருள்நிலை நீக்கி, மருள் குணம் மாற்றி, தெருள் நிலை உணர்ந்து, அருள் ஞான வழியில் வாழ்ந்தால், அகத்தில் உள்ள ஆன்மா நம்முடன் பேசும். ஆன்மீக முயற்சி வெற்றி கிட்டும், வாழ்வில் பேரும், புகழும், செல்வமும் குறையாது கிட்டிடும். ஆன்மா வழிகாட்ட ஆரம்பித்து விட்டால் விதிவிலகும். 

  பகுதி 08 வாசிக்க ...→Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...08:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07

No comments:

Post a Comment