கணினியின்/
அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும்,
அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு
செய்வது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
இந்நிலையில்,
தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக தற்போது
தமிழில் பேசுவதை எப்படி எழுத்துக்களாக மாற்றுவது என்பதில் கேள்விகளும்,
ஐயப்பாடும் நிலவுகிறது.
பிபிசி
தமிழின் பிரத்யேக வாராந்திர தொடரின் சிறப்பு பகுதியில்,
ஒவ்வொரு வாரமும் பயன்பாட்டாளர்களின் தினசரி வாழ்க்கையில்
பயன்படும் தகவல்களை விளக்கி வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம்,
கூகுள் நிறுவனத்தின் குரல் வழித் தேடல் பயன்படுத்தி
குரல்வழியில் தமிழில் தட்டச்சு செய்வது என்பது குறித்து காண்போம்.
கூகுள்
பிளே ஸ்டோருக்கு சென்று, ஜிபோர்டு (Gboard) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து,
அலைபேசியில் நிறுவுங்கள் (இன்ஸ்டால்).
பிறகு
உங்களது அலைபேசியின் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்கு சென்று, அதில் லாங்குவேஜஸ் & இன்புட் (Languages & Input) என்ற பிரிவை தேர்ந்தெடுத்து அதில் ஜி போர்டு (Gboard)
என்னும் தெரிவை தேர்ந்தெடுக்கவும். அதில் வாய்ஸ் டைப்பிங் (Voice
Typing) என்பதை
தேர்ந்தெடுத்தவுடன் வரும் திரையில் லாங்குவேஜஸ் (Languages) என்ற தெரிவில் ஏற்கனவே தமிழை தவிர்த்து ஆங்கிலம் உள்பட எந்த
மொழி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அதை நீக்கிவிட்டு தமிழை (இந்தியா,
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய ஏதாவது ஒன்றை) தேர்ந்தெடுங்கள்.
வாட்ஸ்ஆப்,
பேஸ்புக் உள்ளிட்ட எல்லா செயலியிலும்,
உங்களது கீ போர்டில் உள்ள குரவல்வழி பதிவை (மைக் ஐகான்)
தேர்ந்தெடுத்து உங்களது குரலை உடனடியாக தமிழ் எழுத்துக்களாக மாற்றுங்கள்!
(Settings - Languages & Input - ஆகியவற்றை தேர்ந்தெடுத்த பிறகு,
உங்களது அலைபேசியில் கூகுள் வாய்ஸ் டைப்பிங் (Google
Voice Typing) - என்ற தெரிவு
இருந்தால், அதில் Languages
பிரிவில் தமிழை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஜிபோர்டு செயலியை
பதிவிறக்கம் செய்யாமலேயே உங்களால் தமிழில் குரல்வழி தட்டச்சு செய்ய முடியும்)
நன்றி:பிபிசி /சாய்ராம்
ஜெயராமன்
No comments:
Post a Comment